கற்பகமே கண்பாராய் - மத்யமாவதி

பாபநாசம் சிவன் 'மத்யமாவதி' ராகத்தில் திருமயிலை கற்பகாம்பாளை வேண்டி இயற்றிய
'கற்பகமே கண்பாராய்' என்ற பாடலை பிரியா சகோதரிகள் யுட்யூபில் பாடக் கேட்கலாம்.

கற்பகமே கண்பாராய் கடைக் கண்பாராய்
திருமயிலைக் கற்பகமே கருணைக் கண்பாராய்
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலைக் (கற்பகமே)

சத்திசிதானந்த மதாய சகல உயிர்க்குயராயவள் நீ
தத்துவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும் நீ
சத்துவகுணமோடு பக்திசை பவர்பவ
தாபமும் பாபமும் மறையும் மயில்வர

சந்தான சௌபாக்ய சம்பத்துத்தொடு
மறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான)

(கற்பகமே)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-17, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 136

மேலே