நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ - தேஷ்
ஆனந்த விகடனில் வெளிவந்த அகிலனின் நாவல் பாவைவிளக்கு, திரைப்படமாக 1960 ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தணிகாசலம் என்ற எழுத்தாளனாக நான்கு கதாநாயகிகளுடன் நடித்து வெளிவந்தது. முதல் கதாநாயகி குமாரி கமலா. நடனப் பெண்மணியான இவரின் நடனப் பாடல் "நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ". ’தேஷ்’ ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும், நடனமும் மிக அற்புதமானவை.
(துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற பாடலும் ’தேஷ்’ ராகத்தில் அமைந்ததே!)
மேடையின் முன்னால் நெற்றியில் விபூதியணிந்து அப்பாவியாக தணிகாசலம் அமர்ந்திருப்பார். அப்போது அவரை எண்ணி தன் காதலைச் சொல்வது போல அமைந்த பாடல் இது. கவிஞர் மருதகாசி இயற்றி, கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் பி.சுசீலா பாடியது.
இன்பா இமேஜ் என்ற தளத்தில் இப்பாடலைக் கேட்கலாம். திரைப்படத்தையும் பாரத்மூவிஸ் என்ற தளத்தில் காணலாம்.
நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...
நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ
நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...
காண்பவை யாவும் உன் வடிவமன்றோ (காண்பவை)
என் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ
கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ...
நீ.... என் தெய்வமன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ
நான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ
நான் வேறு நீ வேறு நான் வேறு நீ வேறு
என்பதும் இனி உண்டோ (நான் உன்னை)
மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி
மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி
என் மனம் விட்டு நான் பாடி ஆடியதைக் கண்ட பின்னும்
மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி
அயலிலுள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே
இங்கு நான் ஆசை தன்னைக் கண்களாலே பேசிடாமலே (அயலிலுள்ள)
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
தயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே
இது தருணம் எனை மறந்து உன் மனநிலை
இருப்பினும் எனதுயிரே
நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ...
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ!