என் தோழி பிறந்த நாள் வாழ்துக்கள்
மதிகள் ஆயிரம்
வாரணம் ஆயிரம்
வந்திங்கு வாழ்த்து சொல்லுது
விண்மீன்கள் உன்னை பார்க்க
உன் முற்றம் தேடுது -வாழ்த்து சொல்ல நீ
பிறந்த நாளை வாழ்த்த ..!
அன்பான தோழியே ....
நீ பிறந்தாய் வளர்ந்தாய்
நட்பை தந்தாய் -கண்ணீர்
மறைத்தாய்- கனவாய் இல்லை
உறவை உயிராய் தந்தாய்.....!
உன்னை வாழ்க வாழ்க என்று நான்
வானம் பார்த்தாலும் ..
வந்து கண்ணெதிரே
நிக்கிறாய் நிலாவாய் ....!
வாழ்த்துக்கள் சொல்லி
உன்னை பார்க்க
என்னை படைத்த இறைவனே
நன்றிகள் உனக்கு .....!
இதய துடிப்பில்
ஏதோ ஒரு சத்தம் அன்று
என் இதயமே நீயான
பின்பு ...
துடிப்பில் உன் பெயர்
தவிப்பில் நான் உனக்காக .....!
அன்பான அன்னையை
எனக்கு காட்டினாய்
ஆறுதல் நீயான போது ..!
பண்பான நட்பை
எனக்கு தந்தாய்
பாவப்பட்டு நான் வாழ்ந்த போது...!
தோழியே
வாழிய நீயென
வாழ்த்துக்கள் சொல்லுகிறேன்
உன் பிறந்த நாளில் ......
என் நிலா நீ
உன் வானம் நான்..!
நீயின்றி நானேது
நாமின்றி நட்பேது இங்கே ......!
மறுமுறை நீ பிறக்க
நான் பிறக்காமலே
என் ஆஜுள் தந்து போவேன்
அன்பான தோழியே.......!
இனிதான விடியலில்
புன்னகை பூக்கட்டும்
உன் உதட்டில்
தென்றலே வாழ்த்தட்டும்
தீந்தமிழ் சொல்லாலே ...
நானும் வாழ்த்துக்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!