காதல்
அக்கம் பக்கம் மறந்து போகும்
ஆசை மட்டுமே பொங்கி நிற்கும் மனம்
ஆனந்த களிநடனம் புரியும்
இதயமது தொலைந்து போகும்
ஈன்றவர் நிலையும் மறந்துபோகும்
உள்ளமது உருகி வழியும்
ஊரைவிட்டு ஓடவும் தோன்றும்
எச்சில் பண்டமும் ருசிக்கும்
எங்கே தனிமையென தேடவும் தோன்றும்
ஏற்றத்தாழ்வு மறைந்து போகும்
ஏன் எப்படி என என்னவும் தோன்றும்
ஐம்புலனும் அன்பிலே திளைக்கும்
ஐயோ என அழவும் தோன்றும்
ஒயிலாய் நடக்கவும் தோன்றும்
ஓரக்கனால் பார்க்கவும் தூண்டும்
கண்ணிலே தூக்கம் மறந்து போகும்
நெஞ்சிலே ஏக்கம் மட்டுமே பொங்கிவழியும்
பசியும் மறந்து போகும்
பைத்தியமும் பிடிக்கத்தொடங்கும்
இதுதான் காதலா?
இதுவும் காதலா?
இல்லை இதுவேதான்காதலா ?

