ஆர் கருப்பசாமி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆர் கருப்பசாமி
இடம்:  ஆத்தூர்
பிறந்த தேதி :  15-Apr-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2017
பார்த்தவர்கள்:  316
புள்ளி:  51

என்னைப் பற்றி...

திறந்த மனது, வெளிப்படையாக பேசுபவன நட்பை கற்பென போற்றுபவன்

என் படைப்புகள்
ஆர் கருப்பசாமி செய்திகள்
ஆர் கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2020 1:57 pm

அப்பா சொல்லி திருந்தவில்லை
அம்மா சொல்லி திருந்தவில்லை
ஆசான் சொல்லி திருந்தவில்லை
ஊரார் சொல்லி திருந்தவில்லை
உறவுகள் சொல்லி திருந்தவில்லை
உறவுக்காக ஏங்கித் தவிக்கும்
உதிரம் வற்றிப் போய்ப்
உயிர் வாழ்பவன் கதையிது


அன்பையே அரணாய் கொண்டு
அனுதினமும் வாழும் அன்னைக்கும்
வாய்மையின் வழிநின்று
நெறி தவறா வாழ்வை
நாள் தோறும் கற்றுத்தரும்
நல்லதொரு வாத்தியாருக்கும்
வாரிசாய் வந்து பிறந்தவன் நான்

வறுமை அறியா வாழ்வில்
செல்வச் செருக்கில்
பள்ளிக்குச் சென்றேன்
படிப்பது வரவில்லை
தரணி புகழும் தந்தைக்கு பிறந்தவன்
தற்குரியாய் தறுதலையாய் வளர்ந்தேன்

கல்வி வரவில்லை இந்த கயவனுக்கு
கலைகள்

மேலும்

ஆர் கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2020 10:33 pm

மண்ணில் பிறந்த மழலையதை
மயக்கத்துடன் மடி மீதமர்த்தி
அன்னையவள் அமுதூட்டி
தொட்டில் பந்தம் தொடரும்முன்னே
பிறந்த மழலையதை
குலம் தழைக்கப் பிறந்த
குலமகளென்றதும் குற்றமென கருதி
கள்ளிப்பால் கொடுத்து
கல்லறைக்கு அனுப்பிய
காலம் அன்று......

ஆனால்......
பாரதி கண்ட புதுமைப்பெண்னென
பகுத்தறிவுடன் பட்டம் பலபெற்று
பாராளும் பெண்ணினத்தின் பெருமை போற்றும்
பாவையர் தினம் இன்று.

மேலும்

ஆர் கருப்பசாமி - கவிதைக்காரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2020 7:17 pm

நீண்ட நாள் மனைவி திடீரென துரோகம் செய்தால் என்ன செய்வது?

மேலும்

ok 13-Apr-2020 8:58 pm
உங்களின் பார்வை கூட தவறாக வாய்ப்பு இருக்காலாம் .மனதினை சாந்தப்படுத்தி தவறு எங்கே தொடங்கியது எனதேடிப்பாருங்கள்.அமைதியாக சிந்தனை செய்யுங்கள் .தெளிவான முடிவு கிடைத்திட வாய்ப்பு உண்டு 15-Feb-2020 11:25 pm
துரோகம் எங்கும் எதிலும் உண்டு...பேசி முடிவு எடுங்கள்... கோபத்தில் முடிவுகள் தவறாகும்.... முடிவு என்பது வாழ்கையின் அடுத்த கட்டம்.... 15-Feb-2020 7:06 pm
௪ மாதங்கள் ஓடி விட்டது... இன்னமும் அவளின் மனது தெரியவில்லை 12-Feb-2020 9:33 pm
ஆர் கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2020 9:20 pm

மஞ்சமெங்கும் மலர்களின்
இறந்த காலம் ஆனால்
மனம் வீசும் மலர்களின்
ஏகாந்த வேளை

இடைவிடாது இருதயம் துடிக்க
இன்பம் தரும் இரவு இதுவென
நகம் கடித்தபடி
காத்திருக்கும் வேளை

உடல்கள் இரண்டின்
உள்ளங்கள் மகிழ்ந்து ஒன்றாய்
உறவிலே திளைத்திட
உவகை பொங்கிடும் வேளை

கடல் அலையென
ஆர்பரிக்கும் ஆசைகள்
கட்டுக்கடங்காத காமமும்
காதலும் கைகூடும் வேளை

தென்றலது புயலாய் மாறும்
புயலும் தென்றலாய் மாறும்
புயலும் தென்றலும்
பூஜ்யமாகும் வேளை

அச்சம் நீங்கி ஆசை பொங்கி
புள்ளிமானும் புலியும்
பசித்து புசித்து
அடங்கிடும் வேளை

புதிதாய் உண்டான
உறவொன்றின் உள்ளத்தில்
உனக்கென நான் என
உணர்ந்தி

மேலும்

இதுவரை இன்பத்தில் ஏன் திளைக்க வைத்தீர் .... அது என்ன கடைசியில் ...... இல்லை கசந்திடும் இரவா ... என்ன புதிர் ? தெளியவைப்பீரே கவிஞரே ? 02-Feb-2020 11:48 pm
ஆர் கருப்பசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2020 9:46 pm

அநீதிக் கெதிராய் குரல் கொடுத்தாலும்
அரசியல் வாழ்வு முடிந்தாலும்
வாய்மைக்கு எதிரான வழக்கு தோற்றாலும்
வாரிசு யாரென வாக்களித்தாலும்
வஞ்சினம் கொண்டு வந்சகத்துடன்
ஆயுதம் ஏந்தி வெடிப்பதிங்கே
பத்திரிக்கை ஆசிரியனுக்கு எதிராய் வன்முறை
அன்றாட செய்திகளையும்
அரசியல் நிகழ்வுகளையும்
ஆண்டி அரசனென்ற அச்சமின்றி
அச்சிடுவோர்க்கு தினமும்
அன்னை பூமியில் கிடைபதேன்னவோ
அடி உதைதான்
குருதி சிந்தினாலும் இங்கே
குரல் கொடுப்போம்மனித உரிமைக்கு
உயிரிழந்தாலும் இங்கே உரமிடுவோம்
உண்மை எனும் பயிருக்கு
வீழ்ந்தாலும் இங்கே வீறு கொண்டு
எழுவோம்
எம்மை எரித்தாலும் இங்கே புதிய
எழுச்சியுடன் பிறப்போம்
எழுத்த

மேலும்

ஆர் கருப்பசாமி - ஆர் கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2018 9:11 pm

வரதட்சணை என்ற சொல் ஆதி காலம் முதலே நம் பாரத நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகின்றது .அதன் வளர்ச்சி என்பது நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விட வேகமாக வளர்ந்து இன்று அழிக்கமுடியாயாத அல்லது இந்த மனித சமுதாயம் மறைக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது .

இந்த வரதட்சணை என்ற பழக்கம் எப்படி தோன்றியது என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது பல்வேறு வகையான கருத்துக்களும் பலவிதமான விமர்சனங்களும் உண்டு

வரதட்சனை என்ற சொல்லுக்கு நாம் அர்த்தம் கொண்டாமேயானால் ஒரு சமுதாயத்தில் பெண் ஆண் ஒருவனை திருமணம் செய்த பின்பு அவனுடன் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பெருட்கள் மற்றும் இதர வகையான க

மேலும்

புதுமை சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் போற்றுதற்குரிய இலக்கியம் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 15-Oct-2018 5:50 am
ஆர் கருப்பசாமி - ஆர் கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2018 12:17 am

கடவுள் மனிதனை படைத்த நாள் முதலே காமம் என்ற சொல் இந்த உலகிற்கு அறிமுகமானது. உலகில் வாழும் மனிதன் உட்பட அணைத்து உயிரினங்களுக்கும் காமம் என்பது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் இயல்பான ஒரு உணர்வு . மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களுக்கு காமம் என்பது தனது இனத்தை இந்த பூமியில் பெருக்கச் செய்வதற்கான நிகழ்வு மட்டுமே.

காமத்தைப் பற்றி பேசுவது என்பது மிக கேவலமான கீழ்த்தரமான செயல் என்பது பலரின் எண்ணமாக இருக்கின்றது உலகில் காதல் எந்த அளவிற்கு உயர்வானதோ அந்த அளவிற்கு காமமும் உயர்வானது.

உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்றத்தாழ்வு மறைவதற்கும் அனைவரிடமும் அன்பை காட்டுவதற்கும் காதல் எந்த அளவிற்கு மிக முக்கி

மேலும்

போற்றுதற்குரிய காம வாழ்வியல் தத்துவம் பாராட்டுக்கள் ---------------- இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை. 23-Oct-2018 2:41 pm
ஆர் கருப்பசாமி - ஆர் கருப்பசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2018 8:23 pm

உருவான நாள் முதல்
உயிர் பிரியும் நாள் வரை
நீங்காது உன்னை நான்
நிழலெனதொடர்வேன்
உள்ளத்திலில் மட்டுமல்ல
உன் உணர்விலும் நான்
உறக்கத்தில் மட்டுமல்ல
செல்லும் இடமெங்கும் உன்னை
நான் சீர்குலைப்பேன்
வைர நெஞ்சத்தைக்கூட
வாளெடுத்து அறுக்காமல்
வார்த்தையால் அறுத்திடுவேன் உன்
வாழ்நாள் முடியும்வரை
கண்ணசைவிலே கல்நெஞ்சத்தையும்
கண்ணாடித்து ண்டென
கலர் கலராய் உடைத்திடுவவேண்
உனை நான் வென்றால்
முடிவு மரணம்
எனை நீ வென்றால்
முடிவு மணி மகுடம்
முயன்று பார்
மரணமா இல்லை மணிமகுடமா?
முடிவு உன்கையில்

மேலும்

வாழ்க்கை போர்க்களம் என்றால் உனக்கான ஆயுதத்தை நீயே தான் தெரிவு செய்ய வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 10:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஜே எஸ் எம் ஸஜீத்

ஜே எஸ் எம் ஸஜீத்

மீராவோடை,இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜே எஸ் எம் ஸஜீத்

ஜே எஸ் எம் ஸஜீத்

மீராவோடை,இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஜே எஸ் எம் ஸஜீத்

ஜே எஸ் எம் ஸஜீத்

மீராவோடை,இலங்கை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே