நிஜம்

நிழலெது நிஜமெது
நினைவுக்குத் தெரியவில்லை
நிஜமென்று நினைத்திருந்த
நீ நிழலானாய் உன்
நினைவுகள் மட்டும் நிஜமாய்

மங்கை உன் மயக்கத்தில்
மணற்பரப்பில் மண்டியிட்டு
கர்வத்துடன் நாம் பெயர் எழுதிய
கட்டுமரமும் கடற்கரை பனைமரமும்
காதலின் சாட்சியென நிஜமாய்
காதல் பைங்கிளி நீ மட்டும்
கானல் நீரென நிழலாய்

பாவை உன் முகம் இங்கே
என் நெஞ்சில் நிழலாய்
காதல் சாட்சியென பைத்தியமாய்
கலியுலகில் நான் மட்டும்’
நிஜமாய்

நிஜத்தைத் தேடி அலைகின்றேன்
உன் நினைவால் நானும்
ஓர் நாள் நிழலாவேன்

எழுதியவர் : கருப்பசாமி (22-Jan-20, 9:33 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : nijam
பார்வை : 141

மேலே