மணநாள் வாழ்த்து

கட்டித் தங்கமே
என் கற்பூர பெட்டகமே
மலர்ந்த முகம் காட்டி
குவிந்த இதழ் திறந்து
முத்துப்பல் சிரிப்பிலே
நட்புக்கு இலக்கணம் வகுத்தவளே

உருவத்தில் சிறியவளே
உள்ளத்தில் பெரியவளே
என்னருமைத் தோழியே
உன் திருமணம் என்ற சொல்கேட்டு
திக்குமுக்காடிப் போனேன் மகிழ்ச்சியிலே

மணமகன் யாரென்று கேட்க
மங்கை நீயும்
மறுமொழி பகர்ந்தாய் அந்த
மங்கலச் சொல் கேட்டு
மனம் திளைத்தது மகிழ்ச்சியிலே

ஆவணித் திங்களில்
அதிகாலை வேளையில்
ஞாயிறன்று நாயகனை கைப்பிடிக்கும்
இனிய தோழியே

இல்லற வாழ்வில் இன்பம்
என்றென்றும் பொங்கிப் பெருகிட
வையகத்துக் கடவுளை எல்லாம்
வணங்கி நல்வரம் தர வேண்டி
வாழ்த்துகின்றேன் உனை நானே

எழுதியவர் : karuppasami (19-Jan-20, 7:23 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : mananaal vaazthu
பார்வை : 70

மேலே