காமம்

கடவுள் மனிதனை படைத்த நாள் முதலே காமம் என்ற சொல் இந்த உலகிற்கு அறிமுகமானது. உலகில் வாழும் மனிதன் உட்பட அணைத்து உயிரினங்களுக்கும் காமம் என்பது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் இயல்பான ஒரு உணர்வு . மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களுக்கு காமம் என்பது தனது இனத்தை இந்த பூமியில் பெருக்கச் செய்வதற்கான நிகழ்வு மட்டுமே.

காமத்தைப் பற்றி பேசுவது என்பது மிக கேவலமான கீழ்த்தரமான செயல் என்பது பலரின் எண்ணமாக இருக்கின்றது உலகில் காதல் எந்த அளவிற்கு உயர்வானதோ அந்த அளவிற்கு காமமும் உயர்வானது.

உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்றத்தாழ்வு மறைவதற்கும் அனைவரிடமும் அன்பை காட்டுவதற்கும் காதல் எந்த அளவிற்கு மிக முக்கியமானதோ அந்த அளவிற்கு காமமும் சமமானது. இரண்டு உயிர்கள் அன்பினை வெளிபடுத்த காதல் என்பது முதல் நிலை என்றால் காமம் என்பது காதலின் அடுத்த நிலை என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. இன்றைய வாழ்வியலில் மனிதனின் வாழ்க்கை என்பது இயந்திரத்தனமாகவே உள்ளது. குடும்பத்தில் உள்ள உறவுகளிடம் கூட மனம் விட்டு இன்பத்தையோ இல்லை துன்பத்தையோ பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலே நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலக வாழ்வில் தேடல் என்பது அணைத்து உயிரனங்களுக்கும் பொதுவான ஒன்று.ஆனால் மனித வாழ்வில் தேடல் என்பது பொன்னையோ பொருளையோ அல்லது அதிகாரத்தையோ அந்தஸ்தையோ தேடுவதாக மட்டுமே உள்ளது.


காதலின்றி காமம் உண்டு. ஆனால்
காமம் இன்றி காதல் இல்லை

காதல் உணர்வு இல்லாத மனிதனுக்கு கூட காம உணர்வென்பது உண்டு. ஆனால் காம உணர்வு இல்லாத மனிதனுக்கு காதல் உணர்வு வருவதில்லை


காதலின் தோல்வி என்பது ஓவொரு மனிதருக்கும் வெவ்வேறு வகையிலான
முடிவுகளை அல்லது உணர்வுகளை தரலாம். . ஆனால் காதலின் வெற்றி தரக் கூடிய முடிவில் முதன்மையானது காமம் என்பது மறுக்க முடியாத உண்மை.

காமத்தின் திறவு கோல் முத்தம். முத்தம் இல்லா காமம் என்பது ரசம் இல்லாத கண்ணாடி போன்றது. அன்பின் அதீத நிலையினை வெளிப்படுத்துவதே காமம். அன்பு கொண்ட மனிதனால் மட்டுமே தன்னையும் தன்னை சார்ந்தவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்

இன்றைய சமுதாயத்தில் காமம் என்பது வெறும் உடல் பசியாகவே மாறிப் போயிருக்கின்றது. பசிகொண்ட மிருகம் தன பசியினைப் போக்கிட எதையும் செய்யத் தயாராக இருக்கும் . அதுபோல முறையற்ற காதல் கொண்ட மனிதனும் தனது உடல் பசியினை போக்கிட எதையும் செய்யும் குணம் படைத்தவனாக மாறுகின்றான் இந்த விளைவின் வெளிப்பாடுகளை நாம் தினம் தினம் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டிருகின்றோம்.

வேதங்களில் காமம் மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணப்படுகின்றது. அந்த ஆற்றலை தெரிந்துகொள்வதும் அதன் மூலம் அதனை கடந்து செல்வதுமே மனித பிறப்பின் உண்மையின் உச்ச நின்லையினை அறிய உதவும் வழியாக கருதப்படுகின்றது மனிதனின் மனதில் காம உணர்வென்பது எந்த நேரத்திலும் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கின்றது . இந்த உணர்வு தோன்றாத நேரம் என்பது நம் வாழ்வில் குறைவானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை

முறையற்ற காமம் என்பது அதனை தொட்டவரை கள்வனாக்கும் . விட்டவரை ஞானியாக்கும்
காமம் என்பது அன்புடன் அறமும் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் . உடல் சார்ந்ததாக இல்லாமல் உள்ளம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே மகிழ்வுடன் மன நிம்மதியும் தரும். இல்லையேல் அது நம்மை தினம் தினம் கொல்லும் குற்ற உணர்வாக மட்டுமே இருக்கும்

எழுதியவர் : கருப்பசாமி (23-Oct-18, 12:17 am)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kamam
பார்வை : 708

மேலே