உயிர் பலி தடுப்போம்

மழைக்காலங்கள்தோறும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களின் உயிர்களைக் காவு வாங்குவது தொடர்கதையாகிவிட்டது. டெங்கு காய்ச்சலால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது இரட்டைக் குழந்தைகளான தக் ஷன், தீக் ஷா இருவரும் உயிரிழந்து விட்டார்கள். இந்தச் சம்பவம், சென்னையை மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. `அபாயக் கட்டத்தில் கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை' என்று மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



19- ம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. இப்போது தீவிரமழை தொடங்கும்முன்பே, பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 50 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்கு பாதிப்பு அதிகமாக, மக்கள் மத்தியில் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி மற்றவருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என அனைத்துச் சந்தேகங்களுக்கும் இங்கே விடை காணலாம்.

டெங்கு காய்ச்சல் என்பது என்ன?

``டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என டெங்குவில் 4 வகைகள் உள்ளன.

டெங்கு எப்படிப் பரவுகிறது?

நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.



`ஏடிஸ் ஏஜிப்தி' கொசுக்கள் எப்படி நோயைப் பரப்புகின்றன?

``வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

எத்தனை நாள்களில் `ஏடிஸ்' கொசு வளர்ச்சியடையும்?

```ஏடிஸ்' கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்பும்.

`ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சியை எப்படித் தடுக்கலாம்?

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.''



டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

`காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா' அல்லது `பிற காய்ச்சலா' என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

டெங்கு காய்ச்சலை கண்டறிய என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

``ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண

எழுதியவர் : உமாபாரதி (23-Oct-18, 12:19 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : uyir pali thaduppom
பார்வை : 86

மேலே