பயிலும் பாடம் என்னவோ

நெளியும் இடையில் அதிபரவளைவு
.......நெற்றிப் பரப்பினிலே அரைவட்டம்
மிளிரும் வதனத்திலே முழுவட்டம்
......மின்னும் நாசியிலே முக்கோணம்
ஒளிரும் கைகளிலே உருளைகள்
......ஓங்கிய மார்புகளிலே கோளங்கள்
தெளிவுடன் தெரிகின்ற காரணத்தால்
......தோகையாள் பயிலுவது கணிதமோ?

துள்ளும் முயலை மார்பில்
.....தோகை மயிலைச் சாயலில்
புள்ளி மானைக் கண்களில்
.....புரவியை அழகு நடையில்
கிள்ளை மொழியைப் பேச்சில்
.....கொண்டவள் மேனியில் அழகு
வெள்ளம் பாய்பவள் கற்பது
.....விலங்கியல் பாடம் தானோ?


இடையழகு பார்த்தால் நன்னூல்
......இதழழகு பார்த்தால் திருக்கோவையார்
வடிவழகு பார்த்தால் திருப்பாவை
......வார்த்தைகள் கேட்டால் திருவாசகம்
நடையழகில் மனோன்ம ணீயம்
......நகைப்பழகில் அழகின் சிரிப்பு
நொடியினில் நினைவுக்கு வருவதால்
.....நங்கையிவள் பயிலுவது தமிழோ?


குறிப்பு

அதிபரவளைவு ----hyperbola
கோளம் ----SPHERE
உருளை ----Cylinder
மனோமணியம் --நாடக இலக்கியம்
அழகின் சிரிப்பு --பாரதிதாசனின் இலக்கியப் படைப்பு.

எழுதியவர் : kokilamakan (12-Jan-18, 8:49 pm)
சேர்த்தது : kokila makan
பார்வை : 77

மேலே