சமத்துவ பொங்கல்

வண்ண வண்ண கோலமிட்டு
வருகவென வரவேற்போம் இந்த இனியநாளை
வாசலில் தோரணம் மட்டுமில்லை அழகு
வீட்டிற்கு வரும் சொந்தங்களின் என்னிகையும்அழகே
பொங்குவது பொங்கள்மட்டுமில்லாது
நமது ஆனந்தமும் சந்தோஷமாயும் இருக்கட்டும்
போகிக்கு பழையதை எரிப்போம்
நமது கோபம் வைராக்கியம் யாவும் எரியட்டும் அந்த தீயில்
பச்சரிசி வெள்ளம் சேர்த்த பொங்கல் போல்
இன்சொற்கள் சேர்த்து இனிமைசேர்ப்போம் நாமும்
மத பேதமின்றி சேர்ந்து வைப்போம் சமத்துவ பொங்கலை