ஒரு மூத்தோர் மோசடி
ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும் இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. இக்கிரமாம் யாழ்ப்பாணம் கண்டி A9 பெரும் பாதையில் யாழ்ப்பணத்தில் இருந்து தேற்கே 13 மைல் தூரத்தில் உள்ள கிராமம். இந்த ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். “மீ”: என்பது இலுப்பையை குறிக்கும். இலுப்பை என்னை தயாரிக்கும் சாலைகள் இருந்தபடியால் அந்த ஊருக்கு மீசாலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற விளக்கமும் உண்டு மீசாலை மாம்பழமானது தரத்தாலும், சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
இப்படியான மகிமையைக் கொண்ட மண்ணில் எமது கிராமத்தைச் சிறப்பிக்கும் வகையில் இக்கிராமத்தில் உடையாரராகவும், விதானையாராகவும். ஆசிரியர்களாகவும், அரச சேவையில் இருப்போரும், சொந்தமாக தொழில் புரிவோரும் வாழந்தனர் அவர்களில் கொடிகாமம் , சாவகச்சேரி சந்தையை குத்தகைக்கு எடுத்து நடத்தியவர் சின்னையாபிள்ளை என்ற வேளாளர். அவர் கிராம சபை அங்கத்தினராக இருந்தவர் ஒரு காலத்தில் மீசாலையில் அவரை அறியாதவர் இல்லை. காதில் கடுக்கனும். தலைமயரை முடிந்து தலைக்கு பின்னால் குடும்பி வைத்தவர் .எப்போதும் அவர் வாயில் சுருட்டு இருக்கும். அவரை “குடும்பி சின்னையர்” என்று ஊர் வாசிகள் அடைப்பெயர் வைத்து அழைத்தனர்.. சின்னையர் ஏழை ஊர்வாசிகளுக்கு உதவி வந்தவர் . முதியோருக்கு தனி மரியாதையை கொடுத்து நடந்தார். மீசாலை ரயில்வே ஸ்டேசனுக்கு அண்மையில், A9 பெரும் பாதை ஒரமாக. 40 பரப்பு காணியில் சின்னையர் கட்டிய நாலறைகள் கொண்ட கல் வீடு இருந்தது தனது இறுதி காலத்தில் சாவகச்சேரி, கொடிகாமம். மட்டுவில், சங்கத்தானை, , சரசாலை, கல்வயல் ஆகிய கிராமங்ககளில் வாழும் முதியவர்கள் அவரின் வீட்டில் கூடி. தம் தனிமையை தமது அனுபவங்களை பேசி தீர்த்’து, கவலகளை மறப்பார்கள் . அவர்கள் கூடத்தில் இரு ஓய்வு பெற்ற அப்போதிக்கரி என்ற உதவி வைத்தியர்கள் இருந்தார்கள் முதியோரின் தேகநலத்தை இலவசமாக பரிசோதிப்பார்கள்
அம் முதியோர் கூட்’டத்தில் உள்ள பலரின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் அந்த சின்னையர் வீட்டில் இயங்கும் முதியோர் சங்கத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து நிதி வரும் ஆடுபுலி ஆட்டம், . சொக்கட்டான் , சதுரங்கம். பல்லாங்குழி. தாயம், பாம்பும் ஏணியும். 304 கடுதாசி விளயாட்டு போன்றவற்றை தம்மை மறந்து விளையாடுவார்கள் .ஒரு அலுமாரி நிரம்ப கல்கி. அகிலன். வரதராசனார் புதுமை பித்தன். ஜெயகாந்தன். சிவசங்கரி . . லக்சுமி. பொன்னுத்துரை, பல ஈழத்து எழுத்தாளர்கள் போன்றோரின் நூல்கள் வாசிப்புக்கு இருந்தன . ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சைவ , நண்டு கூழ் காச்சி ரசித்து உண்பார்கள் . பிற நாட்டில் வாழும் ஒரு முதியவரின் மகன் பணம் அனுப்பி ஓர் டிவி வாங்கி, தியாகராஜபாகவதரின் சிந்தாமணி. ஹரிதாஸ் மற்றும் சிவகவி. ஸ்ரீ வள்ளி. மீரா , சந்திரலேகா, ஒளவையார் . திருவிளையாடல் போன்ற படங்கள் போட்டு பார்ப்பார்கள். சிலருக்கு சில்கு ஸ்மிதாவின் படம் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.
சுமார் 50 பேர் கொண்ட மீசாலை முதியோர் சங்கத்தை உருவாக்கிய பெருமை சின்னையரை சேரும் அதை நடத்த வெளிந்நாட்டில் வாழும் நல்ல மனம் படைத்த அவர்களின் பிள்ளைகளிடம் இருந்து பணம் வரும் அரசில் வேலை செய்து ஓய்வு பெற்ற கணக்காகர்கள் மூவர் வரவு செலவை பார்த்து கொண்டனர். மாதம் ஒரு முறை வாடகை பஸ்சில் கோவில்களுக்கும். சுற்றுலாவுக்கும் போய் வருவார்கள், கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில், வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கும் சுட்டிபுரம் அம்மன் கோவிலுக்கு வருடாவருடம் அம்முதியோர் சங்கத்தில் உள்ளோர் பொங்கிப் படைப்பார்கள்.
****
சின்னையரின் குடும்பம் பெரிது. அவருக்கு மூன்று ஆண்கள் . மூன்று பெண்கள். மூத்தவர் செல்வராஜா, ஒரு அரச அதிகாரி. அடுத்தவன் தங்கராஜா ஒரு அறிவியல் ஆசிரியன் அதை அடுத்து மூன்றும் பெண்கள். ஆசிரியைகள் கடைசி மகன் குணநாயகம் நில அளவை திணைக்களத்தில் வரைவாளர் வேலை. குணத்தில் ஒரு நாயகன் குணநாயகம். அவன் . பிறர்’ மனது புண்பட ஒரு வார்த்தை பேசமாட்டான் . சின்னையருக்கு ஆணும் பெண்ணுமாய் பேரப் பிள்ளைகள் அனேகர்.
அவர்களில் போரின் காரணமாய் பிற நாடுகளுக்கு புலம் பெயர்த்தவர்கள்’ பலர். . அரசில் வேலை செய்த காரணத்தால் குணநாயகதுக்கு புலம் பெயரும் சூழ்நிலை ஏற்பட ஒரே மகன் மாவீரனானான்.
சின்னையரின் பூர்வீக காணி வீடு குணத்தின் பேருக்கு எழுதி வைக்கபட்டது. தகப்பன் நடத்திய சமூக சேவையை குணமும் தொடர்ந்து செய்தார் . இரண்டாம் முறை திருமணம் குணம் செய்தும் கிடைத்த மனைவி ஒரு நோயாளி. அவரது இறுதி காலத்தில் தனிமையை போக்க, தந்தை .உருவாகிய முதியோர் சங்கம் உதவியது . குணத்துக்கு கிடைத்த அரசு பென்சனோ சொற்பம். அவர் மேல் பற்றுள்ள வெளி நாட்டில் வாழும் சின்னையரின் சில பேரப் பிள்ளைகள் குணத்துக்கு மதம் மாதம் நிதி உதவி செய்து வந்தனர் . அதனால் ஒரு சமையல்காரனை வைத்து சமைத்து உண்ணக்’கூடியதாக அவருக்கு இருந்தது . தோட்டத்தை அவனின் உதவியோடு கவனித்து கொண்டார். சின்னையரின் பூர்வீக வீட்டில் வாழ்வதால் ஊர்வாசிகள் அவரைப் பெரிதும் மதித்தனர். அதோடு அவர் ஒரு மாவீரனின் தந்தை என்பது பலருக்குத் தெரியும். அவர்மேல் பற்றுள்ள சின்னையரின் பேரப் பிள்ளைகளில் ஓரு சிலர் அவரை தாம் வாழும் தேசத்து சில மாதங்கள் அழைத்து அவரோடு களித்தனர் .
எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இல்லை. நல்லவர்களும் கேட்டவர்களும் நிறைந்தது தான் இந்த உலகம். பிறருக்கு உதவி செய்பவர்கள். தாமே என்று இருப்பவர்கள். . பிறர் சொத்தை ஏமாற்றி தம் சொத்தாக்குபவர்கள் . இப்படி பல கோணங்களில் பலமனிதர்கள். அதில் சின்னையரின் பேரப்பிள்ளைகளில் பிற நாட்டில் வாழ்ந்த சீமாவும் ஒருத்தி. எவ்வளோவோ பணமும் வசதிகளும் இருந்தும் பேராசை பிடித்தவள். சின்னயரின் பூர்வீக வீட்டிலும், காணியிலும் அவளுக்கு ஒரு கண். அந்த வீட்டினதும் நிலதினதும் மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது என்பதை அறிந்த அவள் அதை தன சொத்தாக்கி அவ்வீட்டை ஒரு ஹோட்டல் நிறுவ திட்டம் போட்டாள். அந்த சொத்து குணநாயகத்தின் பேரில் இருப்பதால் .சிறு தொகையான பணம் கொடுத்து அதை தன் பேரில் எழுதி வாங்குவது அவளின் திட்டம். குணநாயகம் மாமாவையும் மாமியையும் ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது அவளின் திட்டத்தில் அடங்கும் சின்னையரின் மற்றப் பேரப் பிள்ளைகளுக்கு சீமாவின் திட்டம் தெரியாது
ஒரு தடவை மீசாலைக்கு போய் நிலமை அறிந்த போது, குணம் மாமாவும் மாமியும் மறதி வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதை சீமா அறிந்தாள் . அது அவளின் திட்டத்துக்கு வசதியாக இருந்தது. அந்த சொத்தை குணம் மாமாவிடம் இருந்து எழுதி வாங்க அவளுக்கு குடும்ப நண்பர் ஓருவர் ஆலோசனை சொன்னார்
இரகசியம் ஒரு போதும் நிலைத்து நிற்பதில்லை. ஒரு கெட்ட குடும்பத்தில் சில நல்லவர்களும் இருப்பார்கள் . சீமாவின் குடும்பத்தில் உள்ள இரு பிள்ளைகளுக்கு தாயின் திட்டம் வெறுப்பைக் கொடுத்தது. இரு பிள்ளைகளும் சேர்ந்து தம் நெருங்கிய இனத்தவர்களுக்கு தாயின் திட்டத்தை சொல்லி கவலைப்பட்டார்கள்.
அது பொதும் அவர்களின் உடன் நடவடிக்கை எடுப்பதுக்கு. . ஓரு வழக்கறிஞரோடு கலந்து ஆலோசித்து மறதி வியாதி உள்ள முதியவர் ஒருவரை மோசடி செய்ய திட்டம் போட்டதாக சீமா மேல் வாழக்கு தொடரப்பட்டது இனத்தவர்களும் நண்பர்களும் அவளைப் புறக்கணித்னர் அதிர்ந்து போனாள் சீமா. அவளிடம் இருந்த பணத்தில் பெரும் பகுதி வழக்கில் செலவாயிற்று. இருந்த அவளின் வேலையும் போயிற்று கவலையினாலும், இரத்த அழுத்தத்தலும், சர்க்கரை வியாதியாலும் சீமா சிறு நீரக நோயினால் பாதிக்கப் பட்டாள்.. கிழமைக்கு மூன்று தடவை டியாலிசிஸ் என்ற இரத்த சுத்தம் செய்ய வேண்டிய நிலை அவளுக்கு ஏற்பட்டது . அதனால் ஊருக்கு போய் சொத்தை மோசடி செய்து அபகரிக்கும் திட்டம் அவளால் கைவிடப்பட்டது . செய்த கர்மா யாரைத் தான் விட்டது?
****
(இக் கதையில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பிடவில்லை யாவும் கற்பனை)