விளங்கா பொருளோ இந்த காதல்

ரகசிய வழி ஒன்றை
கண்டறிந்தால் உன்
மனதின் காதல் கோட்டைக்குள்
வந்து நின் காதலின்
ரகசியத்தை அறிவேனே
அதன் நிலைகள்
ஒவ்வொன்றையும்
ரசித்திடுவேனே கள்ளியே

தெருவெங்கும் வாசமான
உன் வேர்வைத்துளியை
தூவிச்செல்கிறாய்
அதனை சுவாசித்ததால்
காதல் பூ மலர்ந்திருக்கிறது
அனைவரின் இதயத்திலும்
உன் கைகளால் தொட்டு
பறிக்க இதய
தோட்டத்திற்குள் வருவாயா?

உன் இளமை மேகம்
பொழியும் மழையில் நனைய
காத்திருக்கிறேன்
இது ஆசையில்லை பேராசை
ஆம் பேரழகியை
கைப்பிடிக்க பேராசை
கொள்ளக் கூடாதாயென்ன?

ஒருநாள் என்னை நீ
பார்த்ததை நான் பார்த்தேன்
உடலெங்கும் இந்த காதல்
பரவியது பின் அது
வேர்வைத்துளிகளாயானது
மனமோ நிலையிழந்தது
இரவு பகலானது
விளக்கு நிலவானது
இந்த காதல் விளங்கா பொருளானது
நட்சத்திரம் என்னோடு
உறவாடியது

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (23-Jan-18, 5:43 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : vilakku nilavanathu
பார்வை : 108

மேலே