இதைவிட அழகு💖

விழிகளில் கயல்கள் துள்ளி விளையாட,🌷
பார்வையில் மான்கள் மருண்டோட🌷
வதனத்தில் நிலவது ஒளிர்ந்தாட,🌷
குரலினில் இன்னிசை குளிர்ந்தாட🌷
அங்கத்தில் இளமையது திரண்டாட🌷
உன் அதரம் மலரென வண்டாட,அது
இதழ் ரசம் தேனென நினைத்து உண்டாட,🌷
பார்ப்பவர் மனம் பரிதவித்து திண்டாட,🌷
ஊரே உன் அழகினை கொண்டாட,🌷
எனக்கு மட்டும் ஏதேதோ உணர்வு உண்டாக,🌷
உனை செதுக்கியவன் விரல்களை
நான் துண்டாட,🌷
அவன் இதை விட ஓரழகை படைக்காது வெருண்டோட (வேண்டும்)🌷உனைவிட அழகில்லை
என உலகம் உருண்டோட (வேண்டும்:)

எழுதியவர் : பாலமுருகன் பாபு (10-Feb-18, 5:13 am)
பார்வை : 479

மேலே