ஓடும் நதியினிலே

மணலான ஆறுயிப்போ குளுகுளுனு ஆயிருச்சு
வடிகாலாய் பெய்ஞ்சமழ தண்ணியத்தான் காட்டிடுச்சு

காய்ஞ்சிருந்த செடிகளெல்லாம் திருவிழாவ நடத்திடுச்சு
மறஞ்சிருந்த தவளையெல்லாம் புதுமொழிய பேசிடுச்சு

ஓடும் ஆறுயிப்போ குதூகலமாய் ஓடிடிச்சு
பசும்புல் தரைகளெல்லாம் பழையபடி சிரிச்சிடுச்சு..

பொறுத்த காரணத்தால் வருத்தமின்றி நதியோட‌
நதியின் ஓட்டத்துடன் கனவுகொண்டு நாமோடுவோம்...

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 6:59 am)
பார்வை : 76

மேலே