புல்லில் உறங்கும் பனித்துளிகள்

சூடு பட விழித்தெழும்
தன்னுரு மாற்றிடும்
பனி

இரவின் உறக்கம் தொடரும்
கதிரவன் வரவின் வரை
பனி

தூரிகை ஏதுமின்றி
பூக்களின் மீது ஓவியம்
பனி

குளிர்க்காலங்களில்
மலர்களின் போர்வையாய்
பனி

வெயில் வந்ததும்
தாவரத்தின் கண்ணீராகும்
பனி

குளித்தே முடித்திடும் தலைக்கு
குளிப்பாட்டும் சொல்லாமல் எறும்பை
பனி

பூவிலும் மென்மை
நிறமில்லை உண்மை
பனி

காற்றில் மலராட‌
தரையில் ஈரக்கோலமிடும்
பனி

மழலைக் கைபட‌
காணாமல் போகும்
பனி

பிறக்காமலே இருக்கும்
கடுங்கோடை காலம்
பனி

கவிதைகள் தரும்
தினம் கவிஞர் மனம் வரும்
பனி

மலையிலும் இருக்கும்
கவிதை மழையிலும் நனைக்கும்
பனி

இதம் தரும்
கோபமின்றேல் நிதம் வரும் மனதுள்
பனி

வந்து போனச் சுவட்டை
காதலியாய் விட்டுச்செல்லும்
பனி

கவிதையும் கொடுக்கும்
மன அமைதியும் கொடுக்கும்
பனி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 7:08 am)
பார்வை : 102

மேலே