மழை

இன்பத்தைக் கொடுக்கும் இதயம் குதூகலிக்கும்
நன்மைகள் பிழையின்றி நமக்கென்றும் அளிக்கும்
உண்மையாய் என்றும் உரிமையாய் நனைக்கும்
என்றுமே பார்த்ததில்லை பாகுபாடு மழையே..

ஏழையின் வீட்டிலும் உறவோடு நுழையும்
பாலையின் மண்மீதும் சிலநேரம் உலவும்
ஆலைக்குச் செல்வோரும் ஆனந்தம் கொள்வர்
வேலைக்குச் செல்வோரும் விரைந்தேதான் செல்வர்

சிகரங்கள் தொட்டுத்தான் தினம்தினமும் பொழியும்
சிரமங்கள் பார்க்காமல் சரிசமமாய் தூறும்
அதரங்கள் தானாக பலகவிகள் பாடும்
ஆழ்மனதின் துன்பங்கள் தொலைதூரம் ஓடும்

வீதிவழி பயணித்தே கப்பல்படை துவக்கும்
சாதிமதம் கடந்தே சமத்துவத்தை பரப்பும்
ஆதிமுதல் மனிதனையே மகிழ்வூட்டும் சக்தி
பாதியிதை படித்தாலே தெளிந்திடுமே புத்தி

பறவைகள் கூட்டிற்குள் சிரித்திருக்கும் வேளை
சிறகையும் நனைக்காமல் சீக்கிரமாய் நிற்கும்
விறகையே தேடித்தான் விவசாயி செல்ல‌
பெருமரத்தின் அடிப்பகுதி நனையாமல் இருக்கும்

மழை கொடுக்கும் கவிதையிங்கு ஆயிரமாயிரம்
மழை நடந்தும் பாடங்களோ ஆயிரமாயிரம்
மழை இருக்கும்வரைக்கும் மகிழ்வொன்றே இருக்கும்
மழைபோல மகிழ்விக்க முயன்றால்தான் என்ன?

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 8:07 am)
Tanglish : mazhai
பார்வை : 2174

மேலே