பூக்கள் தந்த முகம் என்னவள் பூவைக்கு
மலர்க்' கமலமோ'
அவள் முகம்
பிறை நுதலில்
'திலகம்'தானோ
சிவந்த பொட்டு;
'மணிச்சிகையோ'அவள்
விழிகள் இரண்டும் '
அலர்ந்த 'காந்தள்'தானோ
அவள் காதுகள் இரண்டும் .
அதில் அணிகலனாய்
'கூவிளம்பூ' குண்டலங்கள்.
'செண்பக'மொட்டோ
அவள் மூக்கு
விரி'செம்பருத்திப் பூவோ
அவள் அதரங்கள்
அதில் 'ஆம்பல்'தானோ
அவள் உதிர்க்கும்
வெண் சிரிப்பு
இப்படி பூவாய்ப்
பூத்திருக்கும் பூவை
அவள் என் மனதை
கொள்ளைகொண்ட என்னவள் .

