ஆன்மீக அரசியல்

அப்பா, நீங்க பெரிய கோடீஸ்வரர் தான். கடவுள் பக்தில உங்கள மிஞ்ச யாரும் இல்லை. அதுக்காக நீங்க திடீர்னு அரசியல் கட்சி தொடங்குவேன்னு அறிக்கையை வெளியிட்டுடீங்க. நீங்க தொடங்கற அரசியல் எந்த மாதிரி அரசியல்?
😊😊😊😊
நான் தொடங்கப்போற கட்சியின் பெயர் ஆன்மீக அரசியல் தள்.
அடேய் மகனே, என் பக்தியும் கடவுள் நம்பிக்கையும் நம்ம தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால நம்ம கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
😊😊😊😊
கட்சிப் பேரு 'தள்' எதுக்குப்பா?
😊😊😊☺☺☺😊
தமிழ்நாட்டில இலட்ச கணக்கான இந்திக்காரங்க வாழறாங்க. அவுங்க வாக்கை எல்லாம் சொளை மாதிரி அள்ளத்தான் அந்தத் 'தள்'.
தமிழர்கள்ல 99.99% பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. அவுங்க வாக்கு எல்லாம் நம்ம கட்சிக்குத் தான் விழும். அதுதான் ஆன்மீக அரசியலின் பலம்.
😊😊😊😊
அப்பா நீங்க முதல்வர். எனக்கு என்ன பதவி தருவீங்க?
😊😊😊😊
நீதான்டா துணை முதல்வர். அம்மா சட்டமன்றத் தலைவர். அதுக்குப் பேர்தான் ஆன்மீக குடும்ப அரசியல்.
😊😊😊😊😊
சரி..சரி. உள்ளாட்சித் தேர்தல் வருது. ஒரு நல்ல நாள் பாத்து கட்சியத் தொடங்குங்க. நம்ம மக்கள்கிட்ட பணத்தைக் கொடுத்தும் வாக்குப் பெறலாம். பக்தியைக் காட்டியும் வாக்கு பெறலாம்.. அதுக்கெல்லாம் முன் உதராணங்கள் நெறைய இருக்குதப்பா.
😊😊😊
அதெல்லாம தெரிஞ்சுதாண்டா நான் ஆன்மீக அரசியல் கட்சியை தொடங்கறேன்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆
சிரிக்க அல்ல; சிந்திக்க