இந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம்பா

ஏன்டா மவனே வேண்டாம்னு சொல்லற?
😊😊😊😊
நாம இவளப் பொண்ணுப் பாக்க முறைப்படி வந்திருக்கிறோம். வந்தவங்க ஒவ்வொருத்தரையும் பாத்து மாறி மாறி கண்ணடிக்கறாப்பா.
😊😊😊😊
ஏன்டா இந்தப் பொண்ணு கண்மணி எவ்வளவு அழகா இருக்கறா..நான் உம் வயசில இருந்தா.....உம் அதெல்லாம் முடிஞ்சு போன கதை. கண்ணடிக்குறது ஒரு பெரிய குற்றமா? கண்ணடிக்கிறதில அவள் தன்னோட திறமையைக் காட்டறாடா. அழகானவ, செல்வாக்கான குடும்பம், நல்லாப் படிச்சிருக்குறா. மாசம் 1,00,000/-- சம்பாதிக்கிறா. நீ அவளத் திருமணம் பண்ணித்தான் ஆகணும்.
😊😊😊😊
வேண்டாம்பா, இந்தக் கண்ணடிக்கிற பொண்ணு குடும்பத்து ஆகாதுப்பா. இவளை நான் மணந்தா திருமணத்துக்கு வந்து வாழ்த்துச் சொல்லறவங்களப் பாத்துக் கண்ணடிப்பா. திருமணம் முடிஞ்ச பின்னே வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்கள, நண்பர்களைப் பாத்துக் கண்ணடிச்சே வரவேற்பு குடுப்பா. இவளக் கூட்டிட்டு கோயில், குளம், கடைத்தெருவு, திரையரங்கம் போனாலும் பாக்கறவங்களையும் பாத்துக் கண்ணடிப்பா. அப்பறம் எங்க ரண்டு பேரையும் சுத்தி ரவுடிப்பசங்க கூடினா விபரீதமாப் போயிடும்பா. அப்பறம் நிர்பயா கதை மாதிரி ஆகிப்போயிடும்.
😊😊😊😊
டேய் மாப்பிள்ளைப் பையா அழகப்பா, சின்ன வயசில இருந்தே கண்ணடிக்கறது எனது வழக்கம். இது எனது பிறப்புரிமை. பெண் உரிமை. நீ என்னடா என்னை மணக்கிறது. நான் கண்ணடிக்கற அழகப்பாத்து சூர்யாவுக்கு காதலியா நடிக்க முன் தொகை குடுத்து ஒப்பந்தம் பண்ணீட்டாங்க. என் முதல் படம் மே மாதம் வெளியிடறாங்க..அப்ப திரையரங்கம் போய் சல்லு (ஜொள்ளு) ஒழிக்கிட்டு என்னப்பாரு அகன்ற வெண்திரையிலே.
😊😊😊😊😊😊
அப்பா வாங்கப்பா. கண்டவங்ளப் பாத்துக் கண்ணிடிகறவ எனக்கு வேண்டாம்.
😊😊😊😊😊😊
???????????