ஆர்வமாய்

அவனும் நானும்
ஆங்கிலத்தில் தான்
அரை மணி பேசுவதென்று
ஆர்வமாய் முடிவெடுத்தோம்

அடுத்த நிமிடம் முள் குத்த
"அம்மா" என்றேன் நான்
"என்னடா ஆச்சு" என்றான் அவன்

அன்பிலும்
அக்கறையிலும்
ஆங்கிலமாவது.....
வருவதாவது....

🌺இன்னிலா🌺

எழுதியவர் : இன்னிலா (18-Mar-18, 9:36 pm)
பார்வை : 175

மேலே