இயற்கை அன்னை

மண்ணாகி
கல்லாகி
சிலையாக நின்றாயே!

அணுவாகி
கருவாகி
உயிராக வந்தாயே!

காற்றாகி
புயலாகி
மழையாகப் பொழிந்தாயே!

ஊற்றாகி
ஆறாகி
கடலாக மிதந்தாயே!

விதையாகி
செடியாகி
மரமாக வளர்ந்தாயே!

சுட்டெரிக்கும்
சூரியனை
உயிராகப் பெற்று..

சுற்றி வரும்
கோள்களை
உறுப்புகளாகக்
கொண்டு..


அகண்ட அண்டத்தையும்
உடலாகக் கொண்ட

பஞ்சமுகம் படைத்த
பத்தினியும் நீயே!

உருமாற்றம் பல பெற்ற
இயற்கைத் தாயே!

உனையழிக்கும்
பிள்ளைகளை
மன்னிக்க மாட்டாயா?

எழுதியவர் : கலா பாரதி (22-Mar-18, 1:39 pm)
Tanglish : iyarkai annai
பார்வை : 166

மேலே