ஹாஸ்யம் மறந்த உலகு ராமு-சோமு உரையாடல், சிந்திக்க,சிரிக்க
ராமு : சோமு, எனக்கும் உனக்கும் ஒரு பத்து வயதாவது
வித்யாசம் இருக்கும்னு நான் நெனெக்கிறேன் -நான்
இப்ப சொல்றத நிதானமா கேட்டுட்டு, எனக்கொரு
பதில் சொல்லும் பார்ப்போம்.
சோமு : ஐயா, தாராளமா சொல்றேனுங்க , நீங்க வயதுல
மட்டும் இல்லீங்க, நீங்க எனக்கு எஜமானாருங்க..........
ராமு : அதெல்லாம் என் முப்பாட்டனார் காலத்துல............இப்ப
நீ என் எஸ்டேட் மேனேஜர் .......என் நண்பன்...
சரியா.............
சோமு : டேய் நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்..
சோமு, இப்பலாம், சினிமா, நாடகத்துல ஒரு
மருந்துக்கு கூட நல்ல ஆசியம் இல்லாம போச்சே
கவனிச்சயா; அந்த காலத்துல , என்.எஸ். கிருஷ்ணன்,
மதுரம், தங்கவேலு, சந்திரபாபு ,, நாகேஷ், ஏன் ஒரு
இருபது வருடம் முந்திகூட, செந்தில்-கௌண்டமணி,
வடிவேலுன்னு சிரிப்பு கலைஞர் திரையில் மக்களை
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர், இப்ப இவங்க
எல்லாம் இல்லாமலேயே படங்கள் ஓடுதாமே
மக்களுக்கு ஹாஸ்யம் தேவ இல்லபோல இருக்கு அல்லவா ?
நீ என்ன நெனைக்கற சோமு
சோமு : அத்தனையும் வாஸ்தவம்தாங்க.இப்பெல்லாம் மனிதரிடம்
ஹாஸ்ய ரசனை மங்கி போச்சுங்க.........எப்பவும்
டென்ஷன் லேயே வாழ்க்கையை ஓட்டறாங்க '''''''''''
வீட்ல, ஆபீஸ் ல ,ஏன் வெளில சும்மா நடக்கச்சே
கூட சிரிக்க மாட்டேன்றாங்க ............உம்முனு மூஞ்ச
வெச்சுக்கறாங்க, இப்படி இருக்கச்ச ஹாஸ்யம்
இவங்க வாழ்க்கையில் இல்லாம போச்சுங்க
'சிரித்து வாழனும், ஆனா சிலர் சிரிக்க வாழ
கூடாது என்பது மறந்துட்டாங்க......அப்படியே திரை
இயக்குனர், பிரோடுசேர் இவங்களும் மறக்க, திரையில்
'காமெடி' மெல்ல மெல்ல மறையுதுங்க'''''''''''
மொத்தத்தில் மக்கள் 'சிறப்பை'மறந்துட்டாங்க
சிரிப்பு ஒரு அறிய மருந்து இன்னல் வரும்போது
என்பதையும் மறந்துட்டாங்க ............
என்னத்த சொல்லரதுங்க.............ஹும்.............
ராமு : ரொம்ப கரெக்டா சொன்ன சோமு...
இப்பெல்லாம் வாழ்க்கை சிரிப்பில்லாம ஓடுது,
ரோகங்கள் பெருகுது.............கூடிய சீக்கிரம்,
இப்பெல்லாம் தெருவுக்கு,தெரு யோகா சென்டர்
இருப்பது போல், 'ஹாஸ்ய'துக்கும் சென்டர் வரலாம்
ஹாஸ்யத்தோடு வாழ்வது பற்றி தெரிஞ்சுக்க !
சோமு : ஆமாம் ஐயா............அந்த நாள் வெகு தூரம் இல்லீங்க!