ராமு-சோமு உரையாடல்- கடவுள் உனக்கு ஏன் தெரியல என்கிற கேள்வி

ராமு : டேய், சோமு, மாட்டுக்கு புள், தண்ணீர் வெச்சாச்சா
அப்படின்னா இங்க கொஞ்சம் வந்துட்டுப்போ, ஒன்ன
ஒன்னு கேக்கணும்......................

சோமு : ஆயிடிச்சுங்க ராமு ஐயா,.................இதோ வந்திபுட்டேனுங்க
சொல்லுங்க இப்போ...............

ராமு : சோமு அது இல்லடா, நம்ம கிராமத்துல கூட யாரோ
கடவுளை நீ பாத்தியா, இல்லேன்னா , அவன் இல்லேனு
தான்னா அர்த்தமுன்னு......அப்படி, இப்படினு
சொல்லுவாராருனு கேள்வி...... அதப்பத்தி நீ என்ன
நெனைக்கற கொஞ்சம் சொல்லேன்.........

சோமு : ஐயா உங்களுக்கு தெரியும் நான் பெரிய படிப்பு
ஒன்னும் படிக்கலீங்க, என் சின்ன அறிவுக்கு
தோன்றியதை சொல்லிப்புடுறேங்க....தப்ப
இருந்தா மன்னிச்சுக்கோங்க எசமான்............

ராமு : சொல்லு, சொல்லு.........

சோமு : ஒரு கட்டெறும்பு, கொள்ளி எறும்பை கேட்டுச்சாம்,
'எறும்பே, நீ , யானையைப் பார்த்திருக்கிறாயா
எப்பவாவது? அதுக்கு அந்த கொள்ளி எறும்பு
சொல்லிச்சாம் அப்படினு ஒரு பிராணி இருந்திருக்கேவே
முடியாது, ஏன்னா என் கண்ணுக்கு அது எப்போதும்
தெரியலையே.........இது ஒரு புருடா....யானென்னு
ஒன்னும் இல்ல, என நம்பு னு , அதைக்கேட்ட,அந்த
கட்டெறும்பு, சொல்லிச்சாம்'"நாம நம்ம கண்ணை
கொண்டு பார்க்க முடியா வஸ்த்துவை, இல்லேவே
இல்லை என்று சொல்வது சரி இல்லை ..... நம்ம
சிறிய கண்ணால அந்த பெரிய பொருளை
காண முடியல, அவ்வளவு ஏன், இதோ போய்க்கொண்டு
இருக்கோமே அதா கூட நம்மால பார்க்க முடியல
ஆனா நாம் எது மீதோ போய்க்கொண்டு இருப்பது
உண்மை.... அது போல எறும்பு நண்பா, நாம ஒரு
வஸ்த்துவை நம்ம கண்ணால பார்க்க முடியலைன்னா
அது இல்லை என்று ஆகிவிடாது...... இருக்கு நமக்கு
புலப்படவில்லை என்பதுதான் நிஜம், உண்மை...

ஐயா அதுபோல நம்ம இந்த மனித கண்ணால
கடவுளை பார்க்க முடியலை..... ஞானிகள்
கடவுளை அகக்கண்ணால் பார்ப்பதற்கு சொல்றாங்க
இவ்வளவுதான் ஐயா ஏன் சின்ன புத்திக்கு
ஏட்டுச்சுங்க.....................

ராமு : டேய், டேய், ராமு, நீ ஒரு ஞானிபோல விளக்கம்
தந்திருக்க.....உயர்ந்தவண்டா நீ.....................ஏன்
ஏன் கண்ணையே திறந்துட்ட போ.................
(ராமு, சோமுவை அணைத்துக்கொள்ள...)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Apr-18, 9:04 am)
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே