யாரடி நீ மோகினி

கரைகளுக்கு நடுவில்
நதியினைப் போல
என் முகத்தினை
உன் கரங்களில் ஏந்து
கார்முகில் போல்
காளைகள் பூட்டி
கால்கள் படாத
ஒரு தேசம் சேரு

உதிரும் மலர்களை
காற்று சுமந்து வந்து
உன் கூந்தலில் சூடும்
ஊரும் நதிகளோ
உன் பாதம் படவே
கால்கள் முளைத்துக்
கரைகளில் ஏறும்

வானவில் தொழிற்சாலையிலே
ஆடைகளுக்கு சாயம் ஊட்டுபவளே
செய்கின்ற சமையலிலே
சிற்பமும் ஓவியமும்
செதுக்குபவளே

ஒரு வண்ணத்துப்பூச்சியை
என் கைகளிலிருந்து ஊதிவிடுகிறேன்
அது வானத்தைத் தோண்டி
ஒரு ஒற்றைக் கீற்றை
இந்த இரவுக்குள்
எடுத்துவராதா

எழுதியவர் : ஓஷோ சிறிரதி (11-Apr-18, 10:07 am)
Tanglish : yaradi nee mogini
பார்வை : 172

மேலே