அசுத்தம் அழிக்கப்பட வேண்டியதே

உண்மையாக இருப்பதால் பலர் மனதில் நான் ஒரு துஷ்டனாகத் தென்படுகிறேன்.
அவர்களைப் பொருத்தவரை நான் அரக்கன்.
ஆனால், நான் யாருக்கும் தீங்கு எண்ணவில்லை.
யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை.
அந்த சத்தியத்தின் மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறேன்.
வாழ்க்கையை வாழும் போது உண்மையாக வாழாவிடில் அது பாவம்.
பெற்று வளர்த்த பெற்றோர்களை ஏமாற்றுவது பாவம்.
காதலென்று கண்டிபடி திரிதல் பாவம்.
இப்படி எண்ணற்ற பாவங்களை இயல்பென்று பழகிக்கொண்டு சகித்துக் கொண்டு வாழ்கிறார்களே, அது தான் மகாபாவம்.

அறிவாளிகளின் கூட்டத்தில் நானொரு முட்டாள்.
பணக்காரர்களின் கூட்டத்தில் நானொரு ஏழை.
இறை அன்பையே வேண்டுகிறேன்.
அவன் என்னை சோதிக்கிறான் அடுக்காய்.

இந்த சோதனைகள் கண்டு பின்வாங்க மாட்டேன்.
இன்னும் தீவிரமாக என் கடமையில் முனைப்பாகிறேன்.

மனதை தினம் பெருக்கி வைக்கிறேன்.
அதில் மனித சமுதாயம் குப்பை போட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த மனதை பூட்டி வைக்க பெரிய பூட்டொன்று தேவை.
நெருப்பே அந்த பூட்டு.
ஆதவன் நீயே அதற்கினி காவல்.
மனதில் அசுத்தம் நுழைந்தால் அதை எரித்திடு.
நானே அனுமதித்தால் என்னை நீ எரித்திடு.
சாம்பலாகியாவது முக்தி பெறட்டும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Apr-18, 9:24 pm)
பார்வை : 340

மேலே