அவள்
நாடாளப் பிறந்தவளை
நாண் கட்டி
நசுக்கி வைத்தோம்!
பார்வேல்ல வந்தவளை
சுவர் நான்கினுக்குள்
முடக்கி வைத்தோம்!
ஆணுக்கு பெண்
சமமென்று போதிப்போம்
அதை அரசவையில்
அரங்கேற்ற ஆழ்ந்து
மட்டுமே சிந்திப்போம்!
அழகிய மானுக்கு
இணையான மங்கையென
வருணிப்போம்!
வானுக்கும் ஒப்பாகா
தாய்மையவள் குணமென்பதை
மறந்துவிட்டு!
போருக்கு புரம்காட்டா
வீரத்தை வளர்த்தெடுப்பாள்!
அவர் பேருக்கு பின்னாலே
அவள் பேரை இணைக்க மறந்திடுவார்!
தன் வீட்டை
விட்டுவிட்டு
மறுவீடு புகுந்திடுவாள்
ஏலனங்கள் பலர் பேச
ஏக்கங்களையே தனதாக்குவாள்!
அவளின்றி அணுவும்
அசையாது வீட்டில்
துடுபற்ற படகாய்
குடும்பமும் தொலைந்திடும்
நட்டாற்றில்!
எனது கிறுக்கல்கள்✍️