என்னை மறவாதே

துன்பத்தை துடைத்தாய்
துக்கத்தை தூரமாக்கினாய்
கோபத்தை குறைத்தாய்
அழுகையை அழித்தாய்
துயரத்தை கடக்க துணை நின்றாய்
மனத்தாங்கலை மறக்கச் செய்தாய்
மற்றவர்களை மன்னிக்கச் செய்தாய்
என் விருப்பமின்றி என்னுள்
இத்துணை மாற்றங்கள் நிகழ்த்தினாய்
நான் விரும்பி உன்னிடம் ஒன்று கேட்கிறேன்

மறதியே!!
என்றும் என்னை மறவாதே

எழுதியவர் : ஸ்ரீ (26-Apr-18, 8:50 pm)
சேர்த்தது : ஸ்ரீஷா
Tanglish : ennai maravaathe
பார்வை : 141

மேலே