துளசிதரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  துளசிதரன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  24-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2018
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  14

என் படைப்புகள்
துளசிதரன் செய்திகள்
துளசிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2018 11:36 pm

தேரா மன்னனாய் நானும்
தீரா பழியுடன் தானோ
உன்னை
காணாதுயிர் விடுவேனோ

ஊணோடு உயிரிருந்தும்
தேனில்லா மலராய் தானே
மணமில்லா வாழ்க்கையை
ரணமோடு கழிக்கின்றேன்

இது விதி
செய்த முடிவோ
இல்லை வினை
செய்த விளைவோ
எதுவென்று அறிய
துணிவில்லை எனக்கு

மணப்பந்தல் அதனில்
உனக்கினை நானாய்
உன்கழுத்தில் நாணை
நான் ஏற்ற
நீ நாணும்
அழகை காண
மனப்பந்தல் கொண்டேன்

வேறுருவர் உனக்கிட்ட
திலகம் என்நெஞ்சை
சுட்டெரிக்க கண்டால்
வானளந்த பெருமானும்
நாவறண்டு அழுவான்
நானிழந்த நிலையெண்ணி

எனது கிறுக்கல்கள் 65✍️

மேலும்

துளசிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2018 8:51 pm

நாடாளப் பிறந்தவளை
நாண் கட்டி
நசுக்கி வைத்தோம்!
பார்வேல்ல வந்தவளை
சுவர் நான்கினுக்குள்
முடக்கி வைத்தோம்!

ஆணுக்கு பெண்
சமமென்று போதிப்போம்
அதை அரசவையில்
அரங்கேற்ற ஆழ்ந்து
மட்டுமே சிந்திப்போம்!

அழகிய மானுக்கு
இணையான மங்கையென
வருணிப்போம்!
வானுக்கும் ஒப்பாகா
தாய்மையவள் குணமென்பதை
மறந்துவிட்டு!

போருக்கு புரம்காட்டா
வீரத்தை வளர்த்தெடுப்பாள்!
அவர் பேருக்கு பின்னாலே
அவள் பேரை இணைக்க மறந்திடுவார்!

தன் வீட்டை
விட்டுவிட்டு
மறுவீடு புகுந்திடுவாள்
ஏலனங்கள் பலர் பேச
ஏக்கங்களையே தனதாக்குவாள்!

அவளின்றி அணுவும்
அசையாது வீட்டில்
துடுபற்ற படகாய்
குடும்பமும் தொலைந்திடும்

மேலும்

துளசிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2018 11:43 pm

என்திசையும் அவள் முகமே!
எண்ணமெல்லாம் வது அவளே!
சுடரொளியாம் இரு விழிகள்
நிறை மதி முகம்தான் கொண்டவளே!

வெல்லமடி உன் சொற்கள் - அதற்கு கள்வானடி நான் என்சொல்ல!!!
உள்ளமெல்லாம் உன் உறுவை நிறைத்தே இவ்வூன் பொதியை
சுமக்கின்றேன்!!
கள்ளமில்ல உன் சிரிப்பைக் காண காலமெல்லாம் தவமிருப்பேன்!

எனது கிறுக்கல்கள்✍

மேலும்

துளசிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2018 5:30 pm

பேதை உன்னிடம்
வீழ்ந்துவிட்டேனடி-
மீளமுடிவவில்லை...
பின்புணர்ந்தேன் ஆழக்கடலென்று!

நீந்தப் பழகிக்கொண்டேன்
நித்தமும் உன்னுள் நானிருக்க!
ஆழம் அறியவில்லை -
அதன் நீளமும் முடியவில்லை!

தேவதை நீயருகே இருக்க
தேவைகள் வேறென்னடி!!!
காலமுள்ளவரை களித்திருப்போம்
புதிய ஞாலம் ஒன்றை
நாம் படைப்போம்!

எனது கிறுக்கல்கள்✍

மேலும்

துளசிதரன் - துளசிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2018 6:50 pm

சீதையை கவர்ந்த இராவணனாய் என் இதயம் கவர்ந்து சென்றாய்
ராமன் தேடிய சீதையைப்போல்
என் மனதை தேடி வந்தேன்!

பறித்த முடியை திருப்பிக் கேட்ட
பாண்டவர்போல் உன்னிடம் தருமம் வேண்டி நின்றேன்
எடுத்த பொருளை கொடுக்க உனக்கு ஏனோ மனமில்லை!

நம்முள் போரும் மூண்டதடி
நமக்கது நாளும் நீண்டதடி
கனலியின் கணைகள் சுட்டெரிக்க காதல் கைதியாய்
கட்டுண்டேன்!

எனது கிறுக்கல்கள் ✍

மேலும்

மிக்க நன்றி😊 16-Apr-2018 8:36 pm
நன்றி 😊 16-Apr-2018 8:35 pm
நல்ல கவிதை 16-Apr-2018 7:17 pm
காதல் இலக்கிய வர்ணனைகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 16-Apr-2018 7:06 pm
துளசிதரன் - துளசிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2018 3:06 am

நிலவொளியில் வெயில் தேடி குளிர்காயும்
அறிவொளிகள் கூட்டத்தில்
தனியொருவன் தாத்பரியம்
ஏதொரு நாளும் தாக்கத்தை
ஏற்படுத்தாது

புனைவுகள் போல
நிஜங்களும் தோன்றிட!
நிகழ்காலம் கூட
நகலாக நகையாடிட!
கனவுகள் யாவும்
வெறும் தரவுகளாகின
நினைவுகள் ஊடே
நிசப்தம் அடைந்தன

ஓட்டை கப்பலில்
உலகம் சுற்றி
சாதனை படைக்க
நினைப்பது சுலபம்
நிஜத்தினில் உயிரை
காப்பதே கடினம்

கனவுகள் கண்டோம்
கரை சேர்வோமென்று
தரைதனை தொட்டதும்
தனித்தீவாய் பட்டது

உயிர்வாழத் தகுதிகள்
இருந்தும் உளச்சூழல்
உறுத்துது
கதிராடிய கழனியெங்கும்
கருவேலமாய் சிரிக்குது

சாதியை வைத்து
ஊதியம் செய்யும்
ஊடகங்கள் ஒருபுறம்
உடற் ச

மேலும்

Ethartham,.. elimai 08-Apr-2018 12:00 pm
அருமை நண்பரே! 08-Apr-2018 11:01 am
பிளவுகளை வகுத்து நம்பிய கூட்டத்தை ஏமாற வைத்து கடைசியில் அவர்களின் கைகளிலேயே ஆயுதத்தையும் கொடுத்து விடுகிறார்கள். சிலரின் இலாபத்திற்காய் ஊழியமின்றி போராடும் ஆயுதங்கள் போல பலரின் அடிமை வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Apr-2018 9:25 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே