அழகு
ஊகைத் தென்றலும் அவள்
மேனித் தழுவலில் தீரா
ஏக்கம் கொள்ள தனலை
அனல் எனத் தெறிக்கும்
வெய்யோனும் அவள் முகம்
காண்கையிலே அந்தி வானம்
தொடுகிறான் அதில் முளைத்த
முழுமதியோ அவள் முகவழகை
முழுதாய் உள் வாங்கியே
ஒளிர்கிறது இவை யாவும்
விழி முடியா இரவினில்
உனைப் பற்றி ஒப்பனைப்
தோன்றியது என் தேவதையே......!

