வார்த்தை மோதல்
எந்தன் வார்த்தைகள் யாவும்
முட்டி மோதிக் கொள்கின்றன
என்னவளின் அழகை வர்ணிக்க
யார் முதலில் அடியெடுத்து
கொடுக்கப் போகிறோம் என்று
மோதலில் மிஞ்சிய வார்த்தைகள்
கொண்டே நானும் அணிக்கோர்க்க
அவை யாவும் அவளழகுக்கு
அணிசேராது போகிறது இது
யார் குற்றம் என்றே புரியாது
சிந்தையில் நானே சண்டை
இட்டுக் கொள்கிறேன் விந்தையாக....!