காதலி

அவள் கைக் கோர்த்து
நடவையில் ஆளுயரம்
வளர்ந்தக் குழந்தை
ஆகிப் போகிறேன்......!

இதழ் அவிழ்த்த அவள்
மொழிக் கேட்கையில்
அசைவிலா சிலை
ஆகிப் போகிறேன்........!

அவளது புன்னகையில்
பொன் நகையும் பொலிவு
எனக்கு போலியாக
ஆகத் தெரிகிறது........!

கண் இரண்டு காந்தமாய்
எனை ஈர்த்து ஒருகணம்
கூட அவள் விலகாது
நிறுத்துகிறது.........!

எழுதியவர் : விஷ்ணு (27-Apr-18, 8:42 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kathali
பார்வை : 183

மேலே