கொண்டை ஊசி வளைவில்
குளிர் மலையும்
நீயும் ஒன்று..
என் காதல் மேகங்களை
இழுப்பதால் கவிதை
மழை பொழிகிறது...
பிரிவு வெப்பம்
தாளமுடியவில்லை
குளிர் மிதச்சூட்டை
வேண்டி தேடிவருகிறேன்...
எத்தனை வளைவு
நெளிவுகள்...
பயணமோ ஆபத்து!
விட மனமில்லை
ஒருவேளை உன்
கொண்டை ஊசிவளைவில்
சிக்கி கவிழ்ந்தாலும் கூட...

