நன்றி நட்பே
உயிர் கருவாகுவது போலத்தான்
எண்ணங்கள் எழுத்தாகுவதும்..
எழுத்தால்..
நிழல்கள் நிஜமாகிறது...
ஆசைகள் கவிதையாகிறது..
உள்ளம் இலகுவாகிறது...
வாழ்க்கை அர்த்தமாகிறது...
இன்று ஏனோ
மனம் மகிழ்கிறது ...
எழுத்தாளனாய் என்னை
நானும் உணர்கிறேன்...
பாராட்டுக்கள் என்னை
பரவசமாக்குகிறது...
நட்பின் வாழ்த்துக்கள்
என்னை
மீண்டும் எழுத்தாளனாய்
இந்த உலகத்திற்கு...
நன்றி நட்பே
என்னை எனக்கு
உணர்த்தியதற்கு...
என் நெடுநாள்
கவிதை பயணத்தின்
புது பயணியாக நீ...
உன் வருகைக்கு நன்றி..
வாழ்த்திற்கு நன்றி...