அன்பு நண்பன்
என் வாழ்வில்
இன்பம் துன்பமென
இரண்டிலும் உரிமை கொண்ட
அன்பு நண்பனே
நீ என் நண்பனாக கிடைக்க
இறைவனிடம் என்ன தவம் செய்தேனோ...
பதினாறு வயது பார்த்தெடுத்த
பருவ நண்பனே
பள்ளியது இல்லாமல் போயிருந்தால்
இன்றுநான்
எப்படி இருந்திருப்பேன்....
பகுத்தறிவு சாலை பள்ளியது
பழகும் உறவாக
உன்னைக் கொடுத்தது
இன்றோடு ஐந்தாண்டு தொடர்ந்தும்
இதயத்தில் உனக்கென்று
இடமொன்றை வைத்தேன்- அதில்
இன்று வரையும்
நீ மட்டுமே நிரம்பியுள்ளாய்
இம்மரத்தின் நிழலினை
இன்றும் பலர் தேடினாலும்
என்றும் இம்மரம்
உந்தன் வேர்களாலே
உறுதுணையாக உலகில் நிற்கும்......
நட்பின் காதலன்
நீ தானே
நம்பிக்கைக்கு காரணம் நாம்தானே....
நம்போல் இனியொருவர்
இங்கேவர அதிசயமில்லை
அதன் ஆரம்பத்திற்கு
நாமே எல்லை! நட்பென்ற
கடலுக்குள் பயணிக்க
என்னையும் அழைத்தவனே
இதழ்களில் பிறக்கும் முத்தத்திலும்
முழு உரிமை உனக்கும் சொந்தம்...!!
---- இப்படிக்கு----
♥நட்புடன் நண்பன்♥
-----பிரசாந்த் பிரியன்----