கட்டை விரல்

பெருத்த உடல்...
முறைத்தது போன்ற முகம்..
பக்கத்திலிருப்பவனுக்கு ஏதுவாய்
சாயநினைக்கிறது...
கைகளில் இருக்கும் தனிமையை
வெறுத்து....
மொத்தஉடலையும் தங்குவது
போன்று ....கம்பிரமாய்....
விரல்களின் தலைவனாய்.....
கால் கட்டைவிரல்....!
சில நேரங்களில் தலைதூக்கி
நிமிர்ந்து பார்க்கிறது .....
ஒரு வேலை என்னிடம் பேச நினைத்திற்குமோ...
அப்படியானால் என்ன சொல்லியிருக்கும்...
போகிற போக்கில் கண்டதை மிதித்து விட்டு போகிறாயே கண்ணில்லையா..என்றா..
வெட்கம் என்ற பெயரில்
மீனாய் என்னை உரசுகிறாயே...
அறிவில்லையா...என்றா..
அழுக்கு என்றதும் மொத்தமாய் என் மேல் ஏறிக்கொள்கிறாயே ...நான்
பாவமில்லையா...என்றா..
அப்படி என்ன தான் சொல்ல நினைத்திற்கும்...???

எழுதியவர் : ரேஷ்மா (11-May-18, 3:22 pm)
Tanglish : kattai viral
பார்வை : 435

மேலே