பீப்
#பீப்
அன்று தான் நான் முதன் முறையாக செய்ய போகிறேன்,
அந்த விஷயத்தை நான் இது வரை செய்தும் எந்த பலனும் இல்லை..
ஆனால், செய்தவர்களை பார்த்திருக்கிறேன்..அவர்களுக்கும் அவ்வளவு பெரிய ஆவல் இல்லை..ஏதோ, வழக்கம் போல் நடப்பது தான் என பெரியதாக அலட்டி கொள்ளாமல் அந்த விஷயத்தை செய்தார்கள்..சில நபர்கள் உள்ளே போனதும் தெரியவில்லை வெளியே வருவதும் தெரிய வில்லை..
போன வேகத்தில் வெளியே வந்து கொண்டிருந்தனர்..
எனக்கும் அதை செய்ய அவ்வளவு பெரிய ஆவல் இல்லை..ஆனால், எல்லோரும் செய்கிறார்களே நாமும் செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டாயம்..அதை செய்யாமல் விட்டாலும் கூட இருப்பவர்கள் சும்மா விட மாட்டார்கள்..கால காலத்திற்கும் இதை சொல்லியே நம்மை;ஒரு பெருங்குற்றம் செய்தவனை போல சித்தரித்து விடுவார்கள்...நாம் அந்த விஷயத்தை செய்தும் எந்த பலனும் இல்லை,எந்த மாற்றமும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்..
நான் இவ்வாறு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது,பல பல அழைப்புகள் மற்றும் தகவல்கள் சில பெரியவர்கள்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக வந்த வண்ணம் இருந்தன..இந்த செய்திகள் என்னை இன்னும் ஒரு பெரிய குழப்ப குழியில் தள்ளி விட்டது,அதிலிருந்து மேலே ஏற என்னால் முடியவில்லை..
"டேய்,மச்சான் இத மட்டும் நீ அவங்களுக்கு சாதகமா செஞ்சா "...நம்ம பசங்க எல்லாம் உங்களுக்கு தான் செஞ்சி இருக்கோம்னு சொல்லி ஒரு 5 நாள் டூர் போயிட்டு வந்துடலாம்.. சில ஊர் பெரியவர்கள் இதோ பார் தம்பி இத, நீ எங்களுக்கா செய் புரிதா இந்தா இந்த 20 ரூபாய் நோட்டு இத போய் சாயங்காலம் "ரெத்தனா காபி பார்" ல கொடுத்தா 2000 கொடுப்பாங்க வாங்கிக்கோ..சில உறவினர்கள் டேய் இதோ, பாருடா நம்ம குடும்பம் எப்பவும் இவங்களுக்கு தான் போடும் செய்யும், புரிதா நீ போட்டுட்டு அவங்கள போய் ஆபீஸ்ல ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடு..ஓகே வா...
நான் குழப்பத்தில் தள்ளாடினான்.. என்ன செய்வது என்று புரியவில்லை..ஒரே தலை வலி, மன உளைச்சலுக்கு ஆளானான்.. ஒரு கணம் கண் மூடி தீர்க்கமாக யோசித்தான்..யார் வந்தாலும் நமக்கு யாரும் செய்ய போவதில்லை...அப்படி சில பேர் தப்பி தவறி செய்ய நினைத்தாலும் அதை கூட இருப்பவர்கள் செய்ய விடுவதில்லை..என்ன தான் நாம சரியா போட்டாலும்,அதை இயந்திர கோளாறு பண்ணிடுவாங்க.
அதுக்கு நாம போடாமலே இருந்தாலும் தேச துரோகினு பட்டம் குடுத்துடுவாங்க..அப்படியும் நாம நினைச்சவங்க பெருன்பான்மையா இருந்தாலும்..அத மத்திய குழு ஒத்துக்காம தோற்றவர்களை முன் நிறுத்தும்..
இப்படி எதுவுமே நமக்கு சாதகமாக இல்லாதப்ப,நாம ஏன் இத செய்யணும்..இது நமக்கு தேவையே இல்லை..இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது..
நாம நினைக்கர மாதிரி எல்லாரும் இத நினைச்சா புரக்கணிச்சா கண்டிப்பா ஒரு மாற்றம் வரும், ஆனால்.. பெருன்பான்மையான மக்கள் இத ஏத்துக்க மாட்டாங்க..
சரி, விதியே என்று நான் நீண்ட நேரமாக வரிசையில் நின்று, தன் ஆட்காட்டி விரலில் மை அச்சிடப்பட்டு அதே விரலால் 'பீப்' என்ற சத்தம் கேட்க வழக்கம் போல் "நோட்டவிற்கு" வாக்களித்து விட்டு வீடு திரும்பும் வழியில் ஊர் பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்தும் பார்க்காத மாதிரி நான் மிதிவண்டியின் பெடலை அழுத்தம் கொடுத்து மிதித்து என் வீடு நோக்கி பறந்தேன்..
-முகம்மது முஃபாரிஸ்.மு