சிக்னல்
சேகர் கடும் டிராபிக்கிற்கு இடையே பெங்களூர் பிக் பசார் சிக்னலில் வண்டியை நிறுத்திக் கொண்டு கவலைப்பட்டு கொண்டிருந்தான். தனக்கான அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கவில்லை, அடுத்த என்ன வேலை தேடலாம்? இப்போது RISK எடுக்கலாமா? இல்லை இப்படியே தொடரலாமா ? அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தபடியே சிக்னல் விளக்கைப் பார்த்துகொண்டிருந்தான் .
சிவப்பு நிறம் மாறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும். சிக்னலின் “COUNT DOWN”” ஓடிக்கொண்டிருந்தது, சேகர் அருகாமையில் ஒருவர் ஊனமுற்ற நிலையில், கருத்த உருவம் , உடல் தேய்ந்து மெலிந்த நிலையில் பொம்மகளை “Car- ஓட்டிகளிடம்” ”விற்று கொண்டிருந்தார். சிலர் வாங்கவும் செய்தார்கள். சேகர் பொம்மைகளை விற்பவரிடம், இப்படி நாள் முழுவதும் சிக்னலில் விற்று, கஷ்டப்படுகிரீர்களே அதற்கான லாபம் கிடைகிறதா? என்றான்? லாபம் இல்லாமல் இல்லை, சற்று வயதாகிவிட்டதால் முன்பு போல அதிகமாக விற்க முடிவதில்லை, என் குடம்பத்தின் வறுமையை போக்கி கொள்ள மட்டும் நான் இந்த வியாபாரத்தை செய்வதில்லை, “இந்த பொம்மைகள் அனைத்தும் நாங்கள் வீட்டிலே குடிசை தொழில் போல செய்தி விற்பது, இந்த தரத்தில் குறைந்த விலையில் நீங்கள் எங்குமே இந்த பொம்மிகளை வாங்கவும் முடியாது, பார்த்திருக்கவும் முடியாது என்றார்”. இந்த சிக்னல் இல்லாட்டி வேறு ஒரு சிக்னல் என்று சிரித்து கொண்டே வியாபாரத்தை தொடர்ந்தார்.
“ஏதோ தலையில் தட்டி உறக்கச் சொன்னது போல சேகருக்கு இருந்தது ” – சிவப்பு நிறம் மாறி பச்சை விளக்கு மாறியது சேகரின் குழப்பத்திற்கும் சேர்த்து.