வேலையில்லா பட்டதாரி
கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வேலை தேடி சென்னைக்குச் சென்றான் ரகு. இரண்டு வருடம் தனியார் துறையில் நல்ல வேலையில் சேர்ந்தான். கை நிறைய சம்பளம் நல்ல பணிச்சூழல் இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது அவனது வாழ்க்கை. அவனது போறாத காலம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த வேலையை கைவிட நேர்ந்தது.
உடல் நிலை சரியாக இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. அதற்குப் பிறகு அவன் எங்கு தேடியும் அவனுக்கான வேலை கிடைக்கவில்லை. சளைக்காமல் தினந்தோறும் புதிய புதிய வழிகளை தேடிக் கொண்டே இருந்தான். நாட்கள் பல கடந்தன வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான் ரகு.
தனது கல்லூரி நண்பன் பத்மநாபனை சந்திக்க, ரகு அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டு இருந்தான். இருவரும் அருகில் உள்ள பூங்காவில் சந்திக்க தொலைபேசியில் தகவலை பரிமாறிக் கொண்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதால் பல கல்லூரி நினைவுகளை பரிமாறிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மழை குறைவதுப் போன்ற அறிகுறிகள் தென்பட்டன, உடனே இருவரும் அருகிலுள்ள டீ கடைக்கு சென்றனர். தனக்கான வேலை எப்படி பெறுவது என்பதை பற்றி ரகு பேசிக்கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும் அருகாமையிலிருந்து ஒரு 40 வயது மிக்க ஒரு மனிதர் டீ குடித்தப்படி, பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென இவர்களின் பேச்சுக்கிடையே குறுக்கிட்டு, எவ்வளவு நாளைக்கு தான் வேலையைத் தேடிச் சென்று கொண்டிருப்பீர்கள், நீங்களே நல்ல வேலையை உருவாக்கலாம் அல்லவா? நான்கு பேருக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கலாம் அல்லவா? என்று கேள்வி கணைகளை தொடக்க ஆரம்பித்தார். இருவரும் ஆச்சரியப்படாமல் சிறு நையாண்டிப் பார்வையுடன், மாதம் மாதம் சம்பளம் கொடுக்க ஆசைப்பட்டால் என்ன வேலை செய்வது? படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை? புதிய தொழில் தொடங்கவும் பணம் இல்லை? என்று ரகு பேச ஆரம்பித்தான்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றால் நிறைய செலவாகும், பல தொழில்முறை போட்டிகள் எல்லாம் இருக்கும் அதைப்பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலை இல்லையா?
தொழில் தொடங்குவது என்பது யோசித்து செய்ய வேண்டியது, நினைத்த மாத்திரத்தில் உருவாக்குவதல்ல என்று பேசிக் கொண்டிருந்தான் ரகு.
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று ரகு கேட்டான்.
அதற்கு அந்த நாற்பது வயதுமிக்க மனிதர் நான் எங்கும் வேலை செய்யவில்லை எனக்காக 40 பேர் வேலை செய்கிறார்கள் இந்த டீக்கடையும் சேர்த்து என்று பேசி முடித்தார். ரகுவின் கண்கள் மேலும் விரிந்தன. எனக்குத் தெரிந்த எனது நண்பருக்கு, தனது நிர்வாகத்தைப் பராமரித்துக் கொள்ள உதவியாளர் தேவைப்படுவதாக கூறியதை நினைவு படுத்தி, உனக்கு விருப்பமானால் நாளை நீ அவரை சென்று பார் என அவரது நண்பரின் விலாசத்தை கொடுத்தார். நன்றி தெரிவித்து மூவரும் பிரிந்து சென்றனர்.
ரகுவும் அடுத்த நாள் அதே பழைய உற்சாகத்தோடு, கொடுக்கப்பட்ட விலாசத்தை நோக்கி சென்று அலுவலறது கதவை திறந்தான். அங்கே டீக் குடித்தபடி அந்த நாற்பது வயது மனிதர் அமர்ந்திருந்தார் முதலாளியாக.