காபி Coffee

ஸ்ரீராம் திருமண வயதை நெருங்கிய இளைஞன். அவனுக்குப் பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு அவனும் அவனது பெற்றோரும் சென்றார்கள்.

பெண்ணை பார்த்ததும் பிடித்திருக்கிறதா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது என்ற குழப்பத்துடனே சென்று கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே , மிகப்பெரிய கோலம் அவர்களை வரவேற்றது “Welcome”” என்ற வாக்கியத்தோடு. அழகாய் அடுக்கிவைத்து தூசிகலற்று அலங்காரமாய் இருந்தது வீடு. பெண்ணை விட பெண் வீட்டின் அலங்காரம் மாப்பிள்ளை வீட்டாரை வெகுவாக கவர்ந்தது.

நெறிபடுத்து நறுக்கி விடப்பட்ட பூச்செடிகள், நளினமாய் அமைந்த ஜன்னல் ஸ்க்ரீன், அழுக்கற்ற மீன் தொட்டி என வீட்டின் பெருமையை மறைமுகமாய் வெளிப்படுதிக்கொண்டிருந்து .
மணமகள் காபி எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தார். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. பொதுவாக இந்திய திருமணங்கள் யாவும் ஒரு கோப்பை காபி குடித்து முடிப்பதற்குள் நிச்சயிக்கப்படுகின்றன என்பதற்கு இணங்க, அனைவருக்கும் பெண் வீட்டையும், பெண்ணையும் பிடிந்திருந்தது . ஸ்ரீராம் ஒருவனைத் தவிர.

வீட்டிற்கு வந்ததும், தனக்கு அந்த பெண் வேண்டாம் என்றான் ஸ்ரீராம். அப்படி என்ன குறை கண்டாய் நீ? என வசைப் பாட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் எல்லோரும் வீட்டை பற்றியே பார்த்தீர்கள், நான் என்னை பற்றியே பார்கிறேன்.
நான் எடுத்த பொருளை ஒருபோதும் ஒழுங்காய் அடுக்கி வைத்ததில்லை, கண்ட பொருட்களை கண்ட இடத்தில வீசிவிடுவேன் என்னால் இவ்வளவு சுத்தமாகவும் வீட்டை பராமரிக்கவும் தெரியாது. ஆதலால்தான் நான் பெண்ணுக்கு ஏற்ற மணமகன் அல்ல என்பதை முடிவு செய்து கொண்டேன் என்று ஏதோ ஒரு புதிய காரணத்தை சொன்னான்.

காரணத்தை ஏற்க மறுத்த அம்மாவிடம் மட்டும் சொன்னான், கொடுக்கப்பட்ட காபி கப்பில்-,PLEASE REJECT ME என பிரிண்ட் செய்யப்பட்டு இருந்ததை யாரும் அறியாமல் குறிப்பால் உணர்த்தி இருந்ததாய் கூறி முடித்தான்.
“Welcome” என்று தொடங்கிய பயணம் “PLS REJECT ME” என்ற காபி கோப்பையோடு முடிந்துபோனது.

எழுதியவர் : பரமகுரு கந்தசாமி (19-May-18, 10:12 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 138

மேலே