காலி நகரில் ஒரு கொலை
கொழும்பில் இருந்து மேற்குக் கரையோரமாக செல்லும் A2 பெரும் பாதையில் 72 மைல் தூரத்தில் உள்ள நகரம் காலி . 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இடம் பெற்ற சுனாமியில் வெகுவாக பாதிக்கப்பட்ட நகரம். ஜின் நதிக் கரை ஓரத்தில் உள்ள துறைமுகம் என்பதால் இந்த நகரத்தின் பண்டைய பெயர் ஜின்ஹத்தித்த. ஆக்காலி என்ற பெயர் போர்த்துகேய காலத்தில் தோன்றி ஒல்லாந்தர் ஆட்சியின் போது காலியாக மாறியது. “கால” என்றால் சிங்களத்தில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இலவங்கப்பட்டை (கறுவா). ஏலம், கராம்பு போன்ற வாசனை பொருள்களின் பொதிகளை வண்டியில் துறைமுகத்துக்கு இழுத்து வரும் மாடுகள் கூடும் இடம் என்பது சிங்களத்தில் சொல்லும் விளக்கம் . 1411 இல் காலிக்கு வருகை தந்த சீன தளபதி ஒருவரால் முக்கோண வடிவில் பதக்கப்பட்ட கல்வெட்டு சீன, தமிழ் , பேர்சிய மொழிகளில் பதிவாகி உள்ளது . தமிழ், சிங்கள், முஸ்லீம் இன மக்கள் வாழும் நகரம் காலி . பிரபல முன்னைநாள் நடிகை சுஜாதா இந்த நகரில் பிறந்தார் அதனால் அவர் சிங்களம் பேசக் கூடியவர் இந்தக் கதைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் வாழ்ந்த சூழலில் இக் கொலை ஒரு பிரபல வைத்திய கலாநிதி குலரத்தினா என்பவர் வீட்டில் நடந்தது.
வைத்தியர் என்றவுடன் சயனைடு போன்று நச்சுத்தன்மை உள்ள ஆர்செனிக் எம் நினைவுக்கு வருகிறது. நடந்த கொலைகளில் முதலாவதாக ஆர்செனிக் பாவித்து நஞ்சு கலந்த உணவு கொடுத்து செய்த கொலை டாக்டர் குலரத்தினாவின் இரண்டு மாடி சமுத்திரசிரி பங்களாவில் 1967 ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதிய போசனத்தின் பின் கொலை நடந்தது. இறந்தவர் 42 வயதுடைய நான்கு பிள்ளைகளுக்கு தாயான திருமதி பத்மினி குலரத்தினா. இது மாமிக்கும் , மருமகளுக்கும் இடையே ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்த கதை
****
குற்றம் சாட்டப்பட்ட முதலாம் குற்றவாளி டாக்டர் குலரத்னா. அவர் தன் மனைவி திருமதி பத்மினி சுசிலா குலரத்னாவை ஆர்செனிக் நச்சினை பாவித்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்பதே குற்றச்சாட்டு . முடிவில், அந்த திட்டம் ஒரு முழு குடும்பத்தையே அழித்தது.. இதற்கு முக்கிய காரனம் தான் என்ற ஆணவம் பிடித்த டாக்டர் குலரத்னாவின் ,தாயார் லாரா குலரத்னா, என்பது காலி நகரமே அறிந்த உண்மை. இவர் பெரியதோற்றம் உள்ளவர் . பில்லி, சூனியம் செய்வதில் நம்பிக்கை உள்ளவர் . பேரப்பிள்ளைகளோடு அவருக்கு ஒத்துப் போவதில்லை, காரணம் அவர்கள் தாய் பத்மினியின் பக்கம்.
****.
1967 ஆம் ஆண்டில் இந்த வீட்டில் லாரா குலரத்னா, அவரது மகன் டாக்டர் டயமன் காமினி குலரத்னா, அவரது மனைவி பத்மினி, அவர்களது குழந்தைகள் நரேந்திரா, சுலாரி, அச்சினி, மற்றும் ஹிமாஷி, இரண்டு பெண் ஊழியர்களான சோபியா, சிசிலா, மற்றும் பண்டா என்ற பெயரில் ஒரு ஆண் வேலைக்காரன் ஆகியோர் வசித்தனர். சோபியா, சுவையாக சமையல் செய்வதில் கெட்டிக்காரி. அவள் சமைத்த உணவை லாரா விரும்பி உண்பாள் . பதின் இரண்டு வருடங்கள் அவள் அந்த வீட்டில் சமையல்காரியாக இருந்து வந்தாள். .
இந்து சமுத்திரத்தை நோக்கி இருக்கும் இரண்டு மாடி “சமுத்திரசிரி” பங்களாவின் உரிமையாளர் எச்.எஸ்.குலரத்தினா. அவர் காலியில் சிறந்த ஒரு வழக்கறிஞராகவும் சில சமயம் அரச வழக்கறிஞராகவும் இருந்தவர். தனது தொழில் மூலம பெரும் செல்வந்தரானார். காலி நகரின் , சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்டார் மற்றும் செல்வந்தர்கள் அங்கத்தினர்களாக இருந்த காலி ஜிம்கானா கிளப்பின் உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.. இதனால் அவரின் மனைவி லாரா தான் பணக்காரி என்ற கர்வம் படைத்தவளாக வாழ்ந்தாள். எவரையும் அவள் மதித்து நடப்பதில்லை . எல்லாம் தன் சொற்படி நடக்க வேண்டும் என்று விரும்பினாள்.
1956 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் குலரத்தினா காலமானர். அவரின் இறப்புக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தனது மகன் டயமன் காமினி குலாரத்னாவை களுத்துறையை சேர்ந்த செல்வி பத்மினி சுசிலாவுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார் . களுத்துறையை சேர்ந்த செல்வந்தரான சி.செ. பெரேராவின். இளைய மகள் பத்மினி சுசிலா. சுசிலா பத்மினியின். திருமணத்தில், காமினி குலாரத்னவுக்கு ரூ. 25,000 ரொக்கம், களுத்துறை இரண்டு வீடுகள், எஹெலியகொட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டியவில் 50 ஏக்கரில் பல நிலங்கள் சீதனமாக கொடுக்கப் பட்டது .
பத்மினியின் மூத்த சகோதரி லலானி, காலி நகரில் டாக்டராக உள்ள சூரியாவானாவை மணந்தாள் . அவள் குலரதின்னாவின் வீட்டுக்கு அருகே வசித்து வந்தாள்
1948 ஆம் ஆண்டில், டாக்டர் குலரத்தினா அவரின் மூத்த மகன் பிறந்தபின் குழந்தை பெறும் வைத்தியத் துறையிலும் (Gynecologist) மற்றும் பிசியோதெரபி துறையிலும். மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு சென்றார் அதற்கு முன்ர் டாக்டர் குலரத்தினா அரசாங்க சேவையில் வேலை செய்தார்.
கணவர் இங்கிலாந்து சென்று படிப்பு முடித்து வருமட்டும் , பத்மினி தனது மகனுடன் களுத்துறையில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரின் கணவர் குலரத்தினா படிப்பு முடிந்து உயர் பட்டம் பெற்று தகுதி வாய்ந்த டாக்டராக இலங்கைக்கு திரும்பி வந்தார் . அவர் ஒரு பிரத்தியோகமாக தன் பெயரில் கிளினிக் ஒன்றை ஆரம்பித்தார். அது வெற்றிகரமாகவும் , இலாபகரமாகவும் நடந்தது. அதில் அவருக்கு ஒரு நல்ல வருமானம் வந்தது . அவர் இரண்டு கார்களைச் சொந்தமாகக வாங்கினார் , காலி நகரில் உள்ள முன்னணி பாடசாலைகளில் தன் பிள்ளைகளை கல்வி பயில வைத்தார். தன் அந்தஸ்தை சமூகத்துக்கு விளம்பரப் படுத்த ஒரு குதிரையை வாங்கி பராமரித்து வந்தார். அதில் அவர் தினமும் ஊர் மக்கள் பார்க்க சவாரிக்கு செல்வார் . அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் காலி ஜிம்கானா கிளப்பின் தலைவரானார். இந்தக் கிளப்பில் காலி நகரத்தின் உயர் மட்டத்தினர்கள் அங்கதினர்களாக இருந்தனர். அவர் பௌத்த மதம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் டாக்டர் குலரத்தினா மிகவும் ஆர்வம் காட்டினார்
டாக்டர் குலரத்தினாவின் குடும்பம் மனைவி பிள்ளைகளோடு இன்பகரமாக நடந்தது குலரத்தினாவின் கெட்ட காலமோ என்னவோ அவரின் தயார் லாரா தனது குணத்தை காட்டத் தொடங்கினாள் . ஏற்கனவே அவள் பணத் திமிர் பிடித்தவள். தன் மகன் மேல் தான் வைத்திருந்த பற்றுதலில் பத்மினி பங்கு போட்டு விட்டாள் என்ற பொறாமை வேறு அவளின் மனதில் தோன்றியது. வீட்டில் நடப்பதேல்லாம் தன் சொற்படி நடக்க வேண்டும் என லாரா விரும்பினாள். இரு வெலைக்காரிகளும் அவளுக்கு பயந்து அவளின் சொற்படி நடந்தனர் .
பத்மினி கொண்டு வந்த சீதனப் பணம், சொத்து எல்லாம் தனது மகனின் பேருக்கு மாற்ற வேண்டும் என்று மருமகளுக்கு கட்டளை இட்டாள். பத்மினி அதற்கு இணங்கவில்லை. குடும்பத்தில் பிரச்சனை ஆரம்பமாயிற்று லாரா மருமகள் பத்மினியை கீழ்படிவு இல்லாத மருமகளாக நடத்தத் தொடங்கினாள்
கொலை நடந்த காலத்தில் 70 வயதான லாரா குலரத்ன, தனது மருமகள் மேல் விரோதத்தை படிப்படியாக உருவாக்கத் தொடங்கினாள். வீட்டில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் லாரா கட்டளைப்படி நடக்க வேண்டும் ..
1924 ஆம் ஆன்டில் பிறந்த பத்மினி மரணிக்கும் போது 42 வயதுடையவர். தன் கணவனுக்கு தன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்க மறுத்துவிட்டார். அவளுக்கு லாராவின் நோக்கம் தெரியும். தன் சொத்துக்களை அபகரித்து விட்டு தன்னையும் பிள்ளைகளையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாள் என்று பத்மினிக்குத் தெரியும்.
லாரா, ஒரு மேலாதிக்கம் நிறைந்த பெண்ணாக இருந்தாள், அவளுக்கு மருமகள் மேல் பொறாமை. அதற்கும் மேலாக, லாராவுக்கு பத்மினியின் தனக்கு அடங்காத போக்கினை சகித்துக்கொள்ள முடியவில்லை. பத்மினியின் பெற்றோரிடமிருந்து பெற்ற அனைத்து பணமும் வரதட்சினையும் டாக்டர் குலரத்தினாவின் இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சிக்கும் படிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.
பத்மினி மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு இடையில் குடும்ப பிளவை ஏற்படுத்தியதில் முக்கிய பங்களித்தவள் குலரத்தினாவின் கிளினிக்கில் பணிபுரிந்த இளம் நர்ஸ் ஆர்யாவதி.அவளுக்கும் டாக்டருக்கும் இடையே கள்ள உறவு இருந்தது டாக்டர் குலரத்தினாவோடு ஆர்யாவதி தனது பெரும்பாலான நேரத்தை டாக்டரின் ஆலோசனை அறைக்குள் கழித்தாள். அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் இருவரும் சிரித்துப் பேசுவது உண்டு
ரோமியல் என்ற டாக்டரின் கார் டிரைவர் ஆர்யாவதி அந்த விதத்தில் நடந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தினான் . அவள் அதை உதாசீனப்படுத்தி டாக்டர் குலரத்தினாவுக்கு முறைப்பாடு இட்டாள். ரோமியல் தன் விசயத்தில் தலையிடுவதைக் கண்டித்து டாக்டர் குலரத்தினா வேலையில் இருந்து அவனை நிறுத்தினார். இது லாராவுக்கு தெரிவிக்கப்பட்டபோது, பத்மினிக்கு ரோமியல் வேலையில் இருந்து நிறுத்தப் பட்ட விஷயம் தெரிவிக்கப் படக் கூடாது என்று லாரா வலியுறுத்தினாள். ரோமியலுக்கு வேலையில் இருந்து நிறுத்தப் பட்டபோது மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படது என குலரத்தினா சொன்னார் ..
இந்த நிகழ்வுகள் அனைத்திலுமே, குலரத்னா வீட்டிலுள்ள குடும்ப சூழலை படிப்படியாக மாற்றியது . ஒரு நாள் ஒரு நாள் ஆர்யவதி டாக்டர் குலரத்தினாவுடன் அவரின் அறைக்குள் சிரித்து பேசிய படி நெருக்கமாக இருந்தபோது திடீரென பத்மினி ஆலோசனை அறைக்குள் நுழைந்தார். ஆர்யவதி அந்த அறையில் இருந்து பின் கதவு வழியாக வெளியேறினாள் , கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கார சாரமாக வார்த்தைள் பரிமாறிப்பட்டது . அந்த குடும்ப சண்டையின் போது, லாரா மகன் பக்கச்சார்பாக பேசினாள்.
1962 ஆம் ஆண்டில், டாக்டர் குலரத்தனா தனது குதிரையில் சவாரி போன போது கீழே விழுந்தார். அவரது கால் மிகவும் மோசமாக முறிந்தது . அவர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு இருந்தார். இந்த காலகட்டத்தில் லாராவும் பத்மினியும் தினமும் வாக்குவாதங்கலளில் ஈடுபட்டனர் . லாரா பத்மினியை அடிக்காத குறை மட்டுமே , அவர்கள் ஒருவருக் கொருவர் பெசிக் கொலள்வதில்லை . டாக்டர் குலரத்தினாவை மருத்துவமனையில் பார்க்க லாராவும், பத்மினியும் தனித் தனியாகவே சென்றார்கள்
டாக்டர் குலரத்தினா இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய சகோதரர் பெர்சி பத்மினியிடமிருந்து கடன் கேட்டார்
அவருக்கு கடன் கொடுக்க பத்மினி ஒப்புக்கொண்டார். லாரா அதைப் பற்றி அறிந்தபோது, அதை எதிர்த்து, பத்மினியிடம் விசாரணை நடத்தினார். “நீ யார் என் மகனுக்கு கடன் கொடுக்க” என்று அவள் மேல் கொபப் பட்டாள்.
லாரா மகனோடு கலந்து ஆலோசித்து பத்மினியை வீட்டில் உள்ள மேல்தட்டுல் உள்ள ஆரோக்கியமில்லாத அறை ஒன்றில் வாழ ஏற்பாடுகள் செய்தார். அந்த அறையில் தினமும் உணவு எடுத்து சென்று வெலைக்காரிகளில் ஒருத்தி கொடுப்பது வழமை. தன் தங்கையை லாரா அவமானப் படுத்தி ஒரு சிறு அறைக்குள் அனுப்பியதை அறிந்து லாலினி கோபம் கொண்டு லாராவை காரணம் கேட்டாள். உனக்கு நான் காரணம் சொல்லத் தேவை இல்லை . இது என் வீடு. என் இஸ்டப்படியே செய்வேன், உன் தங்கையை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்ததும் நான். அதை இல்லாமல் செய்வது என் உரிமை என்று லாரா பதில் சொன்னாள்.
பத்மினியை விவகரத்து செய்யும் படி மகனை தூண்டியதால் குலரத்தினா வக்கீளுடன் தொடரப்பு கொண்டு விவாகரத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் . விவாகரத்துக்கு பத்மினி சம்மதித்தால் அவளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் தருவதாயும் குலரத்தின சொன்னார் . பத்மினி தன் பிள்ளைகளின் வருங்கால நலம் கருதி அதற்கு சம்மதிக்கவில்லை. அதனல் அவளைத் தீர்த்து கட்ட குலரத்தினாவும் தாய் லாராவும் முடிவு கட்டினர். அவரகளின் திட்டதத்தை செயல் படுத்த இரு வேலைகாரிகளின் உதவி அவர்களுக்குத் தேவை பட்டது . அதில் சோபியா என்ற மூன்றாம் குற்றவாளி லாராவின் அன்புக்கு பாத்திரமானவள். லாராவின் அறையில் அவள் தூங்குவது வழக்கம் அவள் சமைத்த உணவை லாராவும் மகன் குலரத்தினாவும் பிள்ளைகளும் உண்பார்கள். பத்மினி நம்பிக்கையில்லாத படியால் சோபியா கொடுக்கும் உணவை உண்பதில்லை.
சோபியா என்ற இரண்டாம் வேலைக்காரி சமைத்த உணவை தட்டில் போட்டு கொடுத்தபின் பத்மினியின் மகள் அச்சினி மேல் தட்டில் உள்ள தாயின் அறைக்கு கொண்டு போய் தாயுக்கு கொடுப்பாள் . அன்று 1966 ஆண்டு ஏப்ரல் 9 ஆம் சனிக்கிழமை போயா தினம் . இரு வேலைக்காரிகளின் உதவியோடு சமைத்த உணவில் ஆர்செனிக் திரவம் விஷம் கலந்த உணவை பத்மினிக்கு வழமை போல் பகல் போசனத்தின் போது கொடுத்தாள். ஆர்செனிக் திரவம் விஷத்தை உணவில் கலந்தது பத்மினியை கொலை செய்ததாக மூன்றாம் குற்றவாளி சொபியா மேல் போலீஸ் கொலைக் குற்றம் சாட்டியது. சோபியா சமைத்த உணவில் விஷம்கலந்து இருந்தது அச்சினிக்கு தெரியாது, யாரால் அது கலக்கப் பட்டது என்பதும் அவளுக்கு தெரியாது . சிசிலா சட்டியில் இருந்து தட்டில் போட்டு கொடுக்க அந்த உணவை மேலே கொண்டு போய் கொடுக்க முன் சோபியா என்ற வேலைக்காரி அச்சினியின் கையை பிடித்து சமையல் அறைக்குள் கூட்டிப் போய் பிளிங்காய் அச்சாரை ஒரு போத்தலில் இருந்து பிளேட்டில் உணவோடு வைத்து உணவை கொண்டு போய் தாயிடம் கொடுக்கும் படி சொன்னாள் . விசாரணையின் போது பிளேட்டில் இருந்த அச்சாரில் விஷம் இருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. புளிப்புத்தன்மை உள்ள அந்த அச்சாரில் உண்ணும் போது பத்மினிக்கு விஷம் கலந்து இருந்தது தெரிய வந்திறாது . அதோடு மட்டுமல்லாமல் லாராவின் அறையில் இருந்த அச்சாறு போத்தல்களில் சோபியா அச்சாறு எடுத்து பிளேட்டில் போட்ட போத்தலும் ஒன்று .போத்தலில் இருந்த அச்சாறு முழுவதும் விஷம் கலந்து இருகவைளை. ஆகவே போத்தலில் இருந்து அச்சாறு வெளியே எடுத்து விஷம் கலந்து பத்மினியின் உணவு பிளேட்டில் வைக்கப் படிருக்கலாம் என் போலீஸ் முடிவு செய்தது .
தாய் உணவை சாப்பிட்டு முடிந்த பின் அச்சினி மேலே தாயின் அறைக்குப் போய் சாபிட்டு முடிந்த பிளேட்டை எடுத்து வரப் போனபோது பாத் ரூமுக்குள் தாய் வயற்றைக் குமட்டி சத்தி எடுப்பதை அச்சினி கண்டாள். தாயுக்கு என்ன செய்கிறது என்று அவள் விசாரித்தபோது தனக்கு தனக்கு வயற்றைக் குமட்டி சத்தி வருகிறது என்று மகளுக்கு சொன்னாள். பத்மினி மகளிடம் உடனே போய் தன் சகோதரி லாலினியை கூட்டிவரும்படி சொன்னாள். அச்சினி கீழே போய் லாலினி பெரியம்மாவுக்குப் போன் செய்ய முயற்சித்தபோது டெலிபோன் சாவி போட்டு பூட்டப் பட்டிருந்தது . அப்போது கிழே ஹாலில் இருந்த தந்தைக்கும், பாட்டி லாராவுக்கும தாயின் விசயத்தை சொன்னபோது அவர்கள் அக்கறை எடுக்கவில்லை என்றாள் அச்சினி.தன் வாக்குமூலத்தின்போது தன் சகோதரியை உடனே அழைத்து வரும்படி. பத்மினி சொன்னதாக அச்சினி சொன்னாள். அச்சினி தன் சகோதரியை பக்கத்து வீட்டுக்குப் போய் டெலிபோன் செய்து விசயத்தை பெரியம்மா லாலினிக்கு சொன்னாள். லாலினி உடனே வந்தவுடன் மேலே போய் பத்மினியை பார்த்த போது பத்மினி கடுமையான வயிற்று வழலியில் இருந்ததைக் கண்டாள். பத்மினி உடனே பொலீசையும் அம்புலன்சையும் கூட்டி வரும்படி அவளின் அக்கா லாலினிக்கு சொன்னாள். பத்மினியின் வெண்டுகோளின்படி லாலினி பொலீசுக்கு அறிவித்து, அம்புலன்சை கூட்டி வரமுன் பத்மினியின் உயர் பிரிந்தது . இதில் வேடிக்கை என்ன வென்றால் இவ்வளவும நாடக்கும் போது டாக்டர் குலரத்தினாவும், தாய் லாராவும் கீழே இருந்தும் மேலே போய் பத்மினியின் உயரைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை . ஓன்று மட்டும் தெரிய வருகிறது பத்மினியின் மரணம், டாக்டர் குலரத்தினா வீட்டில் இருந்தபொது நடந்துள்ளது.
அச்சினியின் இந்த வாக்கு மூலத்துக்கு எதிராக குலரத்தினாவின் வாக்குமூலத்தில் வித்தியாசம் இருந்தது. தன் வாக்குமூலத்தில் குலரத்தினா முதல் நாள் இரவு மாஹோ அருகில் உள்ள கொண்டதேனிய பௌத்த விஹாராவுக்கு தன் குடும்பத்தில் உள்ள தீய சக்திகளைப் போக்க பூஜை செய்ய ஒரு புத்த பிக்குவை காண்பதற்கு முதல் இரவு சென்று அடுத்த நாள் பகல் 2.30 மணியளவில் வீடு திரும்பியபோது மகள் அச்சினி தாயுக்கு சுகமில்லை பெரியம்மாவுக்கு சொல்ல போவதாக சொன்னாள். அவளை தனியாக போகவேண்டாம் சிசிலியாவோடு போகும்படி தான் மகளுக்கு தான் சொன்னதாக குலரத்தினா சொன்னார். அதோடு தான் நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பில் உணவு உண்டபின் .மாலை 4.30 மட்டும் தூங்கி எழும்பி தேணீர் குடித்துவிட்டு தனது கடைசி மகனோடு வை எம் பி ஏ (YMBA) தலைவர் என்பதால் பூஜைக்கு சென்று தலைவருக்கு என ஒத்துக்கப் பட்ட சீட்டில் இருந்தார் எனவும் , சில நேரத்துக்கு பின் பொலீஸ் தன் வீட்டுக்கு வந்திருப்பதாக தனது டிரைவர் ஆறு மணியளவில் வந்து சொன்னவுடன் பூஜை முடிந்து 6.30 மணியளவில் வீடு திரும்பியதாக தன் வாக்குமூலத்தில் குலரத்தினா சொன்னார் . திரவக ஆர்செனிக், ஆஸ்துமா மன அழுத்தம் போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு பாவிப்பதுக்கு தன் கிளினிக்கில் இருந்ததை ஒப்புக் கொண்டார் . தான் மருத்தவ தேவை இல்லாமல் திரவக ஆர்செனிக் பாவித்ததில்லை என் பைபிள் மேல் சத்தியம் செய்தார்
****
பத்மினியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்தின் கீழ் முதலாம் குற்றவாளியாக டாக்டர் குலரத்தினாவும், இரண்டாம் குற்றவாளியாக அவரின் தாய் லாரா மேல் குற்றம் சுமத்தப் பட்டது .மூன்றாம் குற்றவாளியாக உணவில் விஷம் கொடுத்து கொன்றதாக சோபியா மீது குற்றம் சுமத்தப் பட்டது . சிசிலியா மேல் குற்றம் சாட்டப் படவில்லை அதோடு சாட்சியாக அவள்விசாரிக்கப் படவில்லை.
மூன்று பேரும் சதிசெய்து பத்மினி கொலை செய்ததாக குற்றம் சாட்டப் பட்னர் மூன்றாவது குற்றவாளி சோபியா விஷம் கலந்த உணவு கொடுத்து பத்மினியை கொலை செய்ததற்கு குற்றம் சாட்டப்பட்டார். முதல் குற்றவாளி கொலை செய்ய திட்டம் போட்டு ஆர்செனிக் விஷத்தினை கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டார். அரசு தரப்பு வக்கீல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை ஒழுங்கற்றதாக இருந்தது.
ஆர்சனிக் விஷத்தை பில்லிங் அச்சாறு மூலம் பத்மினி சாப்பிட்ட உணவில் சோபியா அறிமுகப்படுத்தினாள் என அரசு வக்கீல் அச்சினியின் வாக்குமூலத்தில் இருந்து அறியக் கூடியது என்று குற்றம் சாட்டினார். அதுவே பத்மினி மறணிக்க காரணம் என்று விளக்கம் கொடுத்தது
குலரத்னா தன் கிளினிக்கில் ஆர்சனிக் இருந்ததாக ஒப்புக்கொண்டார் . அகவே அங்கிருந்து அவர் சொபியாவுக்கு பிலிங் அச்சாரில் லாராவைன் உதவியோடு ஆர்செனிக் கொடுதிருக்கலாம் என்பதே அரசு தரப்பின் வாதம்
மூன்று பேரும் பத்மினியை கொலை செய்ய சதித்திட்டத்தில் ஈடுபட்டனர் என்பது அரசு தரப்பு வாதம் .
சொபியா விஷத்தை உணவில் கலந்து பத்மினியைக் கொலை செய்யும் திட்டத்தை லாரா நன்கு அறிந்திருந்தார். மேலும் நச்சு கலந்த பில்லிங் அச்சாறு போத்தில் லாராவின் அறையில் இருந்து வந்தது . பில்லிங் அச்சாறு போத்ததிலிலிருந்து எடுத்த பின் ஆர்செனிக் கலக்கப் பட்டிருக்கலாம். மிகுதி போத்ததிலிலிருந்த பில்லிங் அச்சாறில் ஆர்செனிக் இருக்கவில்லை
. ஜூரிகள் 1மணி 30 நிமிடங்கள் கலந்தாலோசித்து மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியது.
****
மூன்று பேரும், மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்தனர் 1968 செப்டெம்பர் 30 அன்று அப்பீல் கோர்டில் விசாரணை ஆரம்பித்தது மற்றும் முதல் நடந்த விசாரணை விட கூடுதலாக 19 நாட்கள் நீடித்தது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். மூன்றாவது குற்றவாளி சொபியாவுக்கு ஆஜரானா வழக்கறிஞர்களுக்கான செலவை குலரத்தினா மற்றும் அவரது தாயார் கொடுத்திருக்கலாம் . சாப்பிடும் விஷத்தை சேர்ப்பதன் மூலம் அவர்கள் கொலை செய்தற்காக அவர்கள். சொபிபியாவின்கு நிதி நிலமையை அறிந்தது குலரத்னாவும் லாராவும் பத்மினியை கொலை செய்வதற்கு கணிசமான அளவு பணம் கொடுதிருகலாம் . உணவு லாரா குலரத்னாவால் தயாரிக்கப்படவில்லை
முதல் வழக்கு விசாரணையின் பொது சிசிலா சாட்சியாக அழைக்கப் படவில்லை. இரு வேலைக்காரிகளில் விஷத்தை எவராவது ஒருவர் அறிமுகப்படுத்தியதில் சந்தேகம் ஏற்பட்டது சாட்சி என்று அழைக்கப்படாததற்காக பின்வரும் இரண்டு காரணங்களை அரசு வழக்கறிஞர் கொடுத்தார்
1. சிசிலா தன்னை துன்புருத்தவே வைக்கப்பட்டிருந்தாள் என்று பத்மினி சொன்னாள்.
2. இரு வேலைகாரிகளும் உணவை தயாரித்தார்கள்
4 சிசிலா தனது தாயை வெறுத்தாளா என்று தனக்கு தெரியவில்லை என்று சொன்னாள்.
5 கொலை நடந்த அன்று உணவை சோபியா தயாரித்தாள் சிசிலா அல்ல.
6 மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு பத்மினி சோபியா மற்றும் சில்வியா ஆகியோரால் சமைக்கப்பட்ட உணவை விரும்பி உண்டார் .சிசிலா ஒரு சாட்சியாக சேர்க்கப் படாத காரணங்களை அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இரு ஊழியர்களில் ஒருவர் விஷத்தை அறிமுகப்படுத்தி இருகலல்ம் . சிசிலியா சாட்சியமளிக்கப்படாததால் அந்த சந்தேகம் நீக்கப் படவில்லை . இந்த சந்தேகம் சோபியாவுக்கு ஆதரவாக இருந்ததால் அவர் கொலை குற்றத்தில் விடுவிக்கப்பட்டார்,. அவர் விடுவிக்கப்பட்டதும் குலரத்னைவையும் லாராவையும் எதிர்த்து ஒரு கொலை செய்ய திட்டம் போட்ட குற்றச்சாட்டு நீங்கி விடும் . அதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மூன்று குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக இருந்தது, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். காலி நகரத்தில் தீர்ப்பு குறித்து மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் . இது பிரபல வழக்கறிஞர்களால் வழங்கப்பட்ட வாதங்கள் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்க உதவியது .
இரண்டாவது முறையாக குலரத்னா திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இறந்தார். பத்மினியின் சகோதரி லாலனி , குழந்தைகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார்
பல ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் நடந்த சதாசிவம் கொலை வழக்கிற்கும் இந்த கொலை வல்லகும் சில ஒற்றுமைகள் இருந்தன. இரண்டு வழக்குகளுக்கும் முதல் குற்றச்சாட்டு கணவன்கள் மேல் இருந்தது . இரண்டாவது குற்றவாளியாக சதாசிவம் வழக்கில் கருதப்பட்டவர் வேலைக்காரன் வில்லியம். வழக்கு முடிவில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். சதாசிவத்துக்கு அஜரானவர் பிரபல வழக்கறிஞர் கொல்வின் ஆர் டி சில்வா. சதாசிவம் இரண்டாவது தடவை மணந்தார். சதாசிவம் குடும்பம் குலரத்தினா குடும்பம் போன்ற உயர் மட்டத்து குடும்பம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் கணவன் மனைவியிடம் விவாகரத்து செய்ய விரும்பினார், மனைவிமார் ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களிலும் கணவன் மாருக்கும் காதலிகள் இருந்தனர் ,ஆனால் டாக்டர் குலரத்தினா வழக்கில் குடும்ப பிரச்சனைக்கு காரணமே இறந்த பத்மினியின் மாமி லாரா
. ****