Mohamed Mufariz - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mohamed Mufariz |
இடம் | : Nagapattinam |
பிறந்த தேதி | : 22-May-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 428 |
புள்ளி | : 60 |
Am a afterall human being,helping minded,books lover,story teller,am a lazy,shortemper,b.pharm,student,pharmacist,
nature lover..
ஒரு அழகான வீடு அது..பார்த்து பார்த்து கட்டியது என்று சொல்வார்களே அதுக்கு எடுத்துக்காட்டு அந்த வீடு தான்... எல்லோரும் பார்த்து பொறாமை படும்படியான வீடு அது..அப்படி ஒரு அழகிய வேலைப்பாடுகள் அந்த வீடு முழுவதும் நிறைந்து இருந்தன..
வீட்டை கட்டி முடிக்க அவர்களுக்கு நீண்ட காலம் எடுத்து கொண்டது.. இருந்தாலும் அவர்களுடைய சொந்த வீடு அவர்களுக்குக்கானது இங்கு யாரும் வந்து அவர்களை குறை கூற முடியாது..இத்தனை காலம் அவர்கள் கழித்தது வாடகை வீட்டில் தான்..சேர்ந்தார் போல் ஒரு பத்து பேர் கூட அங்கே இருக்க முடியாது... அந்த வீட்டிற்கு மாதம் 6000 வாடகை... அது போக வாட்டர் சார்ஜ்,ட்ரைனேஜ் கிளீன் சார்ஜ் என அத்தனை சார்ஜ
#கேரள_காணிக்கை
அப்போது தான் அங்கு முதன் முறையாக செல்கிறான்..எண்ணற்ற கனவுகள் அவனிடம், அது எல்லாவற்றையும் நிறைவேற்றும் இடம் அது.. சிலர், அங்கே போய் வாழ்வில் வென்றும் இருக்கிரார்கள்.. பலர் வீழ்ந்தும் இருக்கிறார்கள்.. நானும் அந்த வென்றவரின் வரிசையில் சேர வேண்டும் என்று எண்ணி தனது முதல் பயணத்தை கேரளா நோக்கி பயணித்தான் ராம்..
ராம்,பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் படிக்கவில்லை.. படிக்கும் பையன் தான்... படிக்கும் வயதில் ஏற்பட்ட மாற்றம்,அப்பாவின் மரணம்.. அதனோடு ஒரு கூடுதல் சிறப்பாக அவர் வாங்கிய கடன்.. சினிமாவில் வருவது போல எவரேனும் வந்து சட்டி,சாமான்களை தூக்கி எறிய வில்லை.. கொலை மிரட்டல் செய
#கடவுள்
கடிகாரம் கூட அவ்வப்போது, பேட்டரி தீர்ந்து போனால் ஓய்வு எடுத்துக்கொள்கிறது.. ஆனால், எல்லோரும் கூறுகிறார்கள்..கடிகாரம் ஓய்வில்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறது என்று..அது தவறான ஒன்று அதற்கு எடுத்துக்காட்டு நான் தான் என நினைத்துக்கொண்டு 15பி பஸ்ஸில் தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தும் இறங்காமல் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் பயணித்து கொண்டு இருந்தாள்..ரம்யா..
ரம்யா.. அவளைப்பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு மனைவி,இரண்டு பிள்ளைகளுக்கு தாய்,மருமகள் போதாத குறைக்கு ஒரு நாத்தனார் போஸ்டும்,இது போக ஒரு மகளிர் சுய உதவி குழுவின் தலைவி வேறு..அவ்வப்போது மாதாந்திர கூட்டங்கள்.. தீர்மானங்கள் எல்லாம் எடுப்பதில் ரம்யா
#பறக்கும் ட்ரெயின்
நித்தம் ஒரு பொழுதும் கவலைகள் அவனை ஆட்கொண்டே இருந்தன.. நாளுக்கு நாள் அது பெருகி கொண்டே இருந்ததை தவிர குறைந்த பாடில்லை...ஏன் இந்த கவலைகள் எதற்கு இந்த குழப்ப சூழ்நிலை என ராமுக்கு இன்னும் தெளிந்த பாடும் இல்லை.. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தெரியவில்லை..
எல்லோரும் போல் தான் நானும் இருக்கிறேன்..எனக்கு ஏன் இந்த வேலை நான் ஏன் இப்படி செய்கிறேன்.."நான் பாட்டுக்கு என் வேலையை பாக்காம,நான் ஏன் இப்படி ஆனேன்",என ஒவ்வொரு பொழுதும் அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் இவ்வாறே ஓடி கொண்டு இருந்தன...
ஐ. டி கம்பெனியில் வேலையில் அமர்ந்து 6 மாத காலம் கூட முழுவதாய் பூர்த்தி அடையவில்லை.
#பறக்கும் ட்ரெயின்
நித்தம் ஒரு பொழுதும் கவலைகள் அவனை ஆட்கொண்டே இருந்தன.. நாளுக்கு நாள் அது பெருகி கொண்டே இருந்ததை தவிர குறைந்த பாடில்லை...ஏன் இந்த கவலைகள் எதற்கு இந்த குழப்ப சூழ்நிலை என ராமுக்கு இன்னும் தெளிந்த பாடும் இல்லை.. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தெரியவில்லை..
எல்லோரும் போல் தான் நானும் இருக்கிறேன்..எனக்கு ஏன் இந்த வேலை நான் ஏன் இப்படி செய்கிறேன்.."நான் பாட்டுக்கு என் வேலையை பாக்காம,நான் ஏன் இப்படி ஆனேன்",என ஒவ்வொரு பொழுதும் அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் இவ்வாறே ஓடி கொண்டு இருந்தன...
ஐ. டி கம்பெனியில் வேலையில் அமர்ந்து 6 மாத காலம் கூட முழுவதாய் பூர்த்தி அடையவில்லை.
#வா நண்பா வா
கல்லூரி படிப்பை முடித்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை..
என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்க...நண்பர்கள் பலரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்வதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் வெளிச்சம் போட்டு காட்டின..சிலர்,அதை கூட போடாமல் நல்ல நிறுவனங்களில் பணியில் அமர்ந்னர்..
நான் யாரையும் பார்த்து பொறாமை கொள்ளவில்லை..என்று சொல்ல முடியாது...அவனுக்கு கிடைக்கிறது நமக்கு என்ற ஒரு ஆதங்கம் தான்...ஒரு சில நேரங்களில் நாம் தாமத படுத்தாமல் உடனே கிளம்பி இருந்தால் இந்நேரம் ஒரு நல்ல வேலையை வாங்கி இருக்கலாம்..என்று நினைத்து கொள்வேன்...ஆனால், அதுவும் ஒரு சில கணங்களே...சில நேரங்களில
#பீப்
அன்று தான் நான் முதன் முறையாக செய்ய போகிறேன்,
அந்த விஷயத்தை நான் இது வரை செய்தும் எந்த பலனும் இல்லை..
ஆனால், செய்தவர்களை பார்த்திருக்கிறேன்..அவர்களுக்கும் அவ்வளவு பெரிய ஆவல் இல்லை..ஏதோ, வழக்கம் போல் நடப்பது தான் என பெரியதாக அலட்டி கொள்ளாமல் அந்த விஷயத்தை செய்தார்கள்..சில நபர்கள் உள்ளே போனதும் தெரியவில்லை வெளியே வருவதும் தெரிய வில்லை..
போன வேகத்தில் வெளியே வந்து கொண்டிருந்தனர்..
எனக்கும் அதை செய்ய அவ்வளவு பெரிய ஆவல் இல்லை..ஆனால், எல்லோரும் செய்கிறார்களே நாமும் செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டாயம்..அதை செய்யாமல் விட்டாலும் கூட இருப்பவர்கள் சும்மா விட மாட்டார்கள்..கால காலத்திற்கும் இதை
#அன்ன வெட்டி
இத்தனை நாளாக அவன் ஒன்றும் ஒரு பெரிய ஆளாக யாராலும் அறிந்திருக்க வில்லை..அவன் ஒன்னும் அவ்வளவு பிரபலம் இல்லை..ஒரு சாதரணமானவன்..
நடு நிலையானவன்...எது நடந்தால் நமக்கென்ன என்றொரு மன நிலை..சரியாக சொல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் இந்த கால கட்டத்தில் எப்படி இருக்கிறமோ அது போன்று..
அவன் பெயர் பாஸ்கர்..வயது 23 இல்லை 24 ஆக இருக்கும்.. மருந்தியல் டிப்ளமோ படித்து விட்டு, தன் அப்பா வற்புறுத்தலின் பேரில் ,ஒரு பெரிய தொகை கொடுத்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் வேலை...மாதம் 20 லிருந்து 25 குள்ளாக சம்பளம்...என எந்த கஷ்டமும் தெரியாமல் வாழ்க்கை ஓடி கொண்ட
#பயணம்
அன்றுடன் அவன் மலேசியா வந்து, ஒரு வருடம் ஆயிற்று..அன்று தான் திரும்ப தன் தாய் நாட்டிற்கு செல்கிறான்.. இத்தனை நாளாய் அவன் எதிர்பார்த்த தருணம்..
விடுப்பு கிடைத்த ஒரு மாதம் முன்னிருந்த
அவன் ஊருக்கு செல்லும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தான்..ஒரு சிறு குழந்தை எப்படி தன் தாயை பார்க்க ஆவலாக இருக்குமோ அது போன்றது அந்த தருணம் அவனுக்கு...
நித்தம் அந்த ஒரு மாதம் பொழுது அவனுக்கு ஒரு யுகமாக தென் பட்டது.. ஒரு பெட்டி ஒன்றை தயார் செய்து வெளியே செல்லும் போது, ஒவ்வொரு பொருட்களாக வாங்கி தன் உறவினர்களுக்காக சேர்த்தான்.. அப்படி சேர்த்தே அப்பெட்டி நிறைந்தது..தன் பால்ய வயதில், தன் மற்ற
அது_ஒரு_மழைக்காலம்
"காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மன்னார்வளைகுடா பகுதியில் நிலை கொண்டு உள்ளதால்,இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது"...என்று தான் வைத்துதிருந்த ட்ரான்சிஸ்டரில் காலை செய்தி கேட்டுக்கொண்டு இருந்தார் தாத்தா..
அவர் ஒரு பழைய பஞ்சாங்கம்,21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ,ஆதி மனிதர்,ட்ரான்சிஸ்டர்க்கு பதில்,ரேடியோ,செல்போன்,டி.வி என பல வந்தும் இன்னும் அதே ட்ரான்சிஸ்டர் தான்..ஒரு லேண்ட் லைன் போன் உள்ளது அந்த ஊரிலேயே முதல் போன் இவர் வாங்கியது தான்..பார்த்த நாள் வரையில் அந்த பெரிய(பழைய)வீட்டில் தனி மரமாய் வாசலில் இருக்கும் நாற