வா நண்பா வா
#வா நண்பா வா
கல்லூரி படிப்பை முடித்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை..
என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்க...நண்பர்கள் பலரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்வதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் வெளிச்சம் போட்டு காட்டின..சிலர்,அதை கூட போடாமல் நல்ல நிறுவனங்களில் பணியில் அமர்ந்னர்..
நான் யாரையும் பார்த்து பொறாமை கொள்ளவில்லை..என்று சொல்ல முடியாது...அவனுக்கு கிடைக்கிறது நமக்கு என்ற ஒரு ஆதங்கம் தான்...ஒரு சில நேரங்களில் நாம் தாமத படுத்தாமல் உடனே கிளம்பி இருந்தால் இந்நேரம் ஒரு நல்ல வேலையை வாங்கி இருக்கலாம்..என்று நினைத்து கொள்வேன்...ஆனால், அதுவும் ஒரு சில கணங்களே...சில நேரங்களில் என்ன நடந்து எண்ணத்துக்கு...?( நான் இந்த மாநகரதுக்கு வந்து இத்துடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.. ) என்ற ஒரு சோம்பேறி தனமும் என்னை ஆட்கொண்டது. இது போல இன்னும் பல நேரங்களில் பல்வேறான சிந்தனைகள் என் சிந்தையை சிந்தி கிழித்து கொண்டே இருந்தது...
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு படிக்கலாம், என்ற எண்ணம்...படித்தாலும் அதுவும் ஓவர், குவாலிஃபிகேஷன் என்ற ஒரு தடை.. என்ன செய்வது அடுத்தது என்ன என்ற ஒரு கேள்வி குறி எப்போதும் என்னை குத்தி கொண்டே இருந்தது...பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு சேர ஏறி இறங்கி விட்டேன்..இது வரைக்கும் என் சி.வி யை எத்தனை முறை பிரிண்ட் அவுட் எடுத்து இருப்பேன் என்றும் தெரியவில்லை... இப்போது எனக்கு இந்த நகரத்தில் தெரியாத இடம் என்று ஒன்று இல்லை...இதுவரைக்கும் பல மேன்சன், ரூம்கள் என பலவற்றிற்கு மாறி விட்டேன்..
மாநகர வெயிலை நான் முகம் கொண்டு மேலே எழுப்பி பார்த்தாலும்,அது என்னை மீண்டும் தலை குனிய செய்தது..சில சமயங்களில் நல்ல சாப்பாடு, பல சமயங்களில் பட்டினி..எந்த இடத்தில் எது ஸ்பெஷல்..எந்த இடத்தில் பிரியாணி விலை குறைவு...எந்த நேரத்தில் டிரெயினில் போனால் கூட்டமாக இருக்காது..எப்போது ஓயிட் போர்டு பஸ் கிடைக்கும்...என அந்த நகரத்தை பற்றிய ஒரு அறிவு களஞ்சியமாக நான் மாறினேன்..இல்லை இந்த மாநகரம் என்னை மாற்றி விட்டது..
கிட்ட தட்ட எல்லா வகையான நிறுவனங்களுக்கும் நான் ஏறி இறங்கி விட்டேன்..எங்கேயும் வேலை கிடைத்த பாடில்லை... நேர்காணலின் போது முன் போல் எனக்கு ஒரு பதற்றம் இல்லை.. எல்லா கேள்விளுக்கும் நன்றாகவே அவர்கள் விரும்பும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல கடைசியில் "சாரி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"..என்பதே பதிலாக இருந்தது...இப்போது எங்கும் எனக்கு ஒரு ஏமாற்றம் போல தெரியவில்லை...இது ஒரு வழக்கமாகவும், வாடிக்கையாகவும் மாறிவிட்டது..
ஊரிலிருந்து அவ்வபோது அப்பா செலவுக்காக பணம் கொடுப்பார், இரண்டு மாதமாக அதுவும் வரவில்லை... நான் ஊர் பக்கம் போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது..செல்போனிலும் டேட்டா முடிந்து விட்டது.. இரண்டு மாதமாக ரூம் வாடகை பாக்கி..ஒனரின் கண்களில் படாமல் ஓடி கொண்டு இருக்கிறேன்...சில நண்பர்களிடம் உதவி கேட்டேன்..வேலை விஷயமாக இருந்தால்"மச்சான், மொதல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணும் டா"..இருந்தா என் கம்பெனில எடுத்து இருப்பேன்... பண உதவியாக இருந்தால் "மச்சான், நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன், நான் பிரியாயிட்டு கூப்புடுறேன்.."
அதிலிருந்து எந்த நட்புக்கும் போன் செய்வது இல்லை..." ஒரு தீர்க்கமான கண் மூடிய ஒரு சிந்தனையில் ஆழ்ந்தேன்..புதியதாக ஒரு யோசனை..ஆனால், அதை செய்ய பணமும் வேண்டும்..என்று யோசித்தான்..
தன்னுடைய அருணா கொடி, பாட்டி ஆசையாக போட்ட ஒரு பவுன் செயின் இரண்டையும் விற்றேன்.. ஒரு கணிசமான தொகை..ஒரு நல்ல மேன்சன் இல் ஒரு ரூம், மீதி பணத்தில் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்தேன்..
என்னுடைய திட்டம், நகரத்திற்கு புதியதாக வேலை தேடி வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, வருபவர்களை அழைப்பது, அவர்களுக்கு உணவு,இருப்பிடம் மேலும், இன்டர்வியூ கான இடத்தில் சரியான நேரத்தில் சேர்ப்பது மேலும், இன்டர்வியூ நடக்கும் வெவ்வேறு இடங்களுக்கு கூட்டி செல்வது போன்ற சேவைகள்..அதற்கென்று ஒரு கணிசமான அளவு தொகை பெறுவது என்பது தான்..
"வா நண்பா வா" சர்வீசஸ் என்ற பெயரையும், மற்ற பிற சேவைகள் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் கைபேசி எண் போன்றவற்றை அதில் போட்டு,வாட்ஸ்அப், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் எல்லாவற்றிலும் சேர் செய்தேன்..என்னுடைய இந்த முயற்சி வேகமாக பேசப்பட்டது மற்றும் பகிர பட்டது.. ஒரு தனியார் யூடியூப் சேனல் என்னை தொடர்பு கொண்டு என்னை நேர் காணல் செய்தது..என்னை பற்றியும், என்னுடைய யோசனை பற்றியும் தெளிவாக கூறினேன்.. "என்னுடைய நோக்கம் யாரும் இங்கே வரும் போது, இங்கே யாரையும் தெரியாது ,என்ன செய்வது, எங்கே போவது..எங்கே குளிப்பது எப்படி காலையில் இன்டர்வியூ விற்கு செல்வது.. பலர் விடிய விடிய எங்கே போவது பஸ் ஸ்டாண்டிலே நிற்பர்..இந்த நிலை மாற வேண்டிய இந்த யோசனை..
யோசனை வந்தவுடன் இதை செயல் படுத்தி விட்டு விட்டேன்..என்று அந்த யூடியூப் உரையாடல் முடிவடைகிறது, அதுவும் அதிக பேரால் பார்க்க பட்டது..அதிக கருத்துகளும், வாழ்த்துக்களும் வந்தன...
இதெல்லாம் இருக்க, இதை ஆரம்பித்து ஒரு வார காலம் ஆகிவிட்டது..இன்னும் ஒரு ஆள் கூட வரவில்லை...தொடர்பு கொள்ளவில்லை..."இதிலும், தோற்று விட்டமோ என்று கவலையில் லயித்து கொண்டு இருந்த போது"..ஒரு கால் வந்தது.. ஹலோ..."ப்ரோ..சர்வீஸ் ஏஜென்சி தான", "ஆமா, சொல்லுங்க ப்ரோ... ப்ரோ நான் காலைல டவுன் வரன், காலைல 9 மணிக்கு இன்டர்வியூ "மெப்ஸ் ல" என்ன காலைல 6 மணிக்கு சென்ட்ரல் ஆஹ் பிக் அப் பண்ணிக்கோங்க... "எனக்கு அங்க ஃப்ரண்ட்ஸ் யாரும் இல்ல", அதான்... அட "விடுங்க நண்பா, நானும் உங்க நண்பன் தான்"..வாங்க பார்த்துக்கலாம்.. ஓகே நண்பா...என்று போனை வைத்தேன்..
இப்போது தான், நீண்ட நாள் கழித்து என் முகத்தில் புன்னகை வந்தது, அந்த புன்னகையோடு நான் பாயில் சாய்ந்தேன்..
- முகம்மது முஃபாரிஸ். மு