பனிக்குருவி

#கிருக்கல்14

#தமிழினியன்

#பனிக்குருவி

அதொரு அகன்ற
பாலைவனம்,
செந்நிறக் கம்பலைப்
போர்த்தி கடலென
பறந்து விரிந்திருந்தது,
அங்வொரு பனைப்பெண்
தனிக்காட்டு ராணியாக
இமயம் அளவு வளர்ந்து,
வனத்திற்கே தன்தோகை
போன்ற கருக்கவோலையினால்
வளிவீசிய பொற்காலம்,
பனைப்பெண்ணின்
கருக்வோலைகளுக்கு
இடையே சுள்ளிகளால்
இரும்பென ஒரு கூம்புக்கூடு,
கூட்டுக்குள்ளே வாழும்
பனிக்குருவி,
பனை ஓலையின் இசையை
ரசித்து ஆனந்தமாக,
தானும் மயிலாடிய பனிக்குருவி,
பனை ஆகாரத்தையுண்டு
ஆரோக்யமாக,
ஓலையை விசிறியாக,
மட்டைகளை பஞ்சு
மெத்தையாக,
பனையின் மகனாகவே
தவழ்ந்தது முதலே
வாழ்ந்து வந்தது,
பருவங்கள் மாறி
கடுங்குளிரில்
அடங்க மறுக்கும் ஓலைகள்,
குளிர் காற்றுடன்
அரக்கியாக சுழிக்காற்றாக
மாறி ஒயிலாடியது,
நிலைகள் மாறவே
தன் மகனின் கண்ணீர்
உணர்ந்து மழையாகவே
பொழிந்தது பனை,
பொழிந்த மழை
நெருப்பென குளிருடன் சுட,
உறவுகள் பிரிந்து
உணர்வுகள் வென்றது,
கூட்டைவிட்டு பொந்துக்குள்
புகுந்த பனைக்குருவி,
வதங்கி வாடி உயிர்
குடிக்கும் எமனின்
வலையில் சிக்கியது,
இருளின் கூண்டுக்குள்
சுவாசமில்லாமல் வீழ்ந்த
நிலையில் இருக்க,
இரைதேடி வந்த
பெண்புறாவின் இறக்கத்தில்,
இதழ் முத்தத்தில்
உயிர்பெற்றது பனிக்குருவி,
பனிக்குருவியும் பெண்புறாவும்
ஒன்றுடன் ஒன்றாக உறவுடன்
வாழ்ந்து வந்தது,
அன்பின் இணக்கமாக
வாழ்வின் அர்த்தமாக,
இயற்கையின் இன்பத்தில்
புணர்ந்தது இரண்டும்,
பெண்புறா பனையின்
மருமகளானாள்,
காலங்கள் கரைந்து
ஏக்கத்தில் சென்றது,
சிலையாக இருந்த பனையின்
உயிராக உணர்வுகளை
கட்டியணைக்க உறவுகள் இருந்தும்,
உறவுகளுக்கு உறவாக ஒரு
உயிர் இல்லையே என்று,
ஏக்கத்தில் குறுகி மருகி
மடிந்து போயின...

இங்கே உறவுகளும்
உணர்வுகளும் அதிகம்,
அழுத்தத்தினால்
இன்பத்தை தொலைத்து
புன்னகையை தொலைத்து,
உறவுகளை வெறுமையாக எண்ணி
வெந்து செத்து மடியாதீர்கள்,
இன்பத்தோடு இருங்கள்
இன்பமாக இருங்கள்,
இதயத்தின் கூட்டுக்குள்ளே
சுகத்தை அரக்கனாக்கி
அழுதத்தை சுமக்காதீர்கள்,
சுகம் உங்களை
சுமந்து செல்லும்
நந்தவனத் தேரில்.

ஆனந்தமே.. ஆனந்தமே..
அவளுடன் அவன் வாழ்வும்..
அவனுடன் அவள் வாழ்வும்..

பூவிதழாக,
தமிழினியன்

எழுதியவர் : தமிழினியன் (13-Jun-18, 8:04 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 148

மேலே