உயிரும் நீ உறவும் நீ - பகுதி 5

ஹாலில் அர்ச்சனா, ப்ரீத்தா மற்றும் விஜய் மட்டும் அமர்ந்து இருந்தனர்.

நேரம் ஒன்றை தாண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

"ப்ரீத்தா அண்ட் விஜய், வி ஷுட் பி வெரி பாஸ்ட் அண்ட் கிளியர் இன் தி ப்ராசெஸ், இந்த ஷார்ட் டேம் ல நாலு கொலை, ஒரே பேட்டன், இப்போ இந்த நாலாவது கொலை ஆர்த்தி மேல சந்தேகம் ஏற்படுத்தி இருக்கு, ஆனா இதே பேட்டன் ல நடந்த மத்த மூணு கொலை கு என்ன மோட்டிவ், யாரு பண்ணிருப்பா, இந்த நாலு கொலைக்கும் என்ன ஒத்துமை இருக்கு, அப்டி இந்த கொலை ஆர்த்தி பண்ணி இருக்க சான்ஸ் இருக்கற பட்சத்துல மத்த செம் பேட்டன் கொலை ஏன் அவள் பண்ணிருக்க கூடாது, என்ன தான் ஆர்த்தி எனக்கு சின்ன வயசுல இருந்து என்னோட க்ளோஸெஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரெண்டா இருந்தாலும் அவளுக்கு இருக்கற இன்னொரு முகம் எனக்கு தெரியாம இருந்திருக்கலாம், இவ்ளோ ஏன், ப்ரீத்தா அண்ட் விஜய் உங்களுக்கு கூட ஏதும் புலப்பட்டு இருக்கலாம், ஆனா நாம அதை கான்செண்ட்ரேட் பண்ணாம விட்டு இருக்கலாம், அப்படி ஏதும் அப்னார்மாலிடீஸ் நாம அவகிட்ட இருந்து மிஸ் பண்ணி இருக்கோமா னு திங்க் பண்ணுங்க, நாளைக்கு பர்ஸ்ட் வேலை, CCTV எவிடென்சஸ் அண்ட் மொபைல் சிக்னல் ட்ரேஸிங். ஆனா நமக்கு இருக்கற ஒரு பெரிய பிரச்சனை, இருட்டு, லெஸ் ஸ்டிரீட் லைட்ஸ், ரெயின் அண்ட் லெஸ் இன்டென்ஸ்ட் பாபுலேஷன். பாக்கலாம், ஆனா மத்த மூணு கொலை பத்தி டீடைல் ஆஹ் நாளைக்கு டிஸ்கஸ் பண்ணி அதுக்கும் இதுக்கும் இருக்கற வேற்றுமை அண்ட் ஒற்றுமை என்ன னு பாக்கணும், எனக்கு வந்த தகவல் படி, மேலிடம் நம்ம மேல கான்பிடென்ஸ் இழந்துட்டாங்க அண்ட் கூடிய சீக்கிரம் இந்த கேஸ் சிபிஐ கு கை மாற சான்ஸ் இருக்கு, ஆனா அதுக்கு முன்னாடி கமிஷனர் என்ன சொன்னாருன்னு உங்களுக்கு சொல்றேன், சி எம் நேரடியா தலை இட்டு இதுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போட சொல்லி இருக்காங்க, சீக்கிரத்துல இதை செயல்படுத்த திட்டம் போட்டு இருக்காங்க, அதுக்கு நாம இடம் குடுக்க கூடாது, பிபோர் தே அனவுன்ஸ் தி எஸ்.டீ.எப்., வி மஸ்ட் கெயின் தி கான்பிடென்ஸ். ஏதாவது நாம செஞ்சே ஆகணும், அட்லீஸ்ட் கன்பியூஸ் பண்ணியாவது டைம் வாங்கணும்" என்றாள் அர்ச்சனா.

"கண்டிப்பா அர்ச்சனா, இதுல நம்மளோட டீம் ஒர்க் தான் முக்கியம், இந்த அசோக் கொலைக்கு டெடிகேடட் ஆஹ் ஒரு ஆள் போடணும், மத்த மூணு கொலைக்கும் ரெண்டு பேர் போட்டு இன்வெஸ்டிகேட் பண்ணனும், பேக்ரவுண்ட் வேலைகள், ரிலேஷன்ஷிப் பிட்வீன் ஆல் தீஸ் போர் கேச கு ஒரு ரெண்டு பேர் ஒர்க் பண்ணனும், டெய்லி மீட்டிங் வெச்சு அப்டேட் பண்ணிக்கணும்" என்றாள் ப்ரீத்தா.

"ஆமா, ப்ரீத்தா சொல்றது தான் சரி" என்றான் விஜய்.

"யா, வில் டூ தி திங்ஸ் அக்காடிங்க்லி" என்றாள் அர்ச்சனா.

"பட் நாம ரொம்ப வேகமா செயல்படவேண்டிய நேரம்" என்றாள் ப்ரீத்தா.

"கண்டிப்பா, சரி, நீங்க உங்க வீட்டுக்கு போறிங்களா, ஆர் இங்கே இருக்கீங்களா" என்றாள் அர்ச்சனா.

"நான் கிளம்பறேன் அர்ச்சனா" என்றான் விஜய்.

"டேய், அஜய் கொஞ்சம் டவுன் ஆஹ் இருக்கான், நீ இங்கே இரு டா, ஐ பீல் திஸ் இஸ் குட்" என்றாள் அர்ச்சனா.

"அதுவும் சரி தான், ஒண்ணு பண்றேன், நான் அவனை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், இது ஒண்ணும் புதுசு இல்லையே, நிறைய டைம் அப்டி பண்ணிருக்கோம் ல, அங்கே வந்தா கொஞ்சம் டிரிங்க்ஸ் எடுத்துட்டு தூங்குவான்" என்றான் விஜய்.

"டேய், என்ன டா, அவனை குடிக்க வெச்சு கெடுக்கறதே நீ தான்" என்றாள் ப்ரீத்தா.

"ஐயோ, உன்னோட ஆளுக்கு தண்ணியே அடிக்க தெரியாது பாரு, எனக்கும் அசோக் கும் தண்ணி அடிக்க சொல்லி கொடுத்ததே அவன் தான்" என்றான் விஜய்.

"இது ஒண்ண சொல்லு எதுக்கெடுத்தாலும்" என்றாள் ப்ரீத்தா.

"சரி டா, அவனை போயி கேளு, தூங்கி இருந்தா விட்டுடு, ஆனா கண்டிப்பா தூங்கி இருக்க மாட்டான்" என்றாள் அர்ச்சனா.

"சரி சரி" என்றபடி மாடிப்படிகளை நோக்கி நடந்தான் விஜய்.

அவன் போனதும்,

"சி, ப்ரீத்தா, என்னதான் விஜய் பேசினாலும் அவன் ஆர்த்தி மேல இருக்கற அந்த கோவத்துல எப்படி வேணும்னாலும் மேனிபுலேட் பண்ண சான்ஸ் இருக்கு, அவனோட எந்த ரிப்போர்ட்டும் நீ ரிவ்யூ பண்ணிட்டு எனக்கு குடு, தென் நான் செகண்ட் ரிவ்யூ பண்றேன்" என்றாள் அர்ச்சனா.

ம்ம், சரி, நான் கூட வீட்டுக்கு கிளம்பலாம் னு நினைக்கறேன், ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு, " என்றாள் ப்ரீத்தா.

"டயர்ட் ஆஹ் இருக்குன்னா இங்கயே தூங்கு ப்ரீத்தா, உன்னால ட்ரைவ் பண்ண முடியுமா" என்றாள் அர்ச்சனா.

"இல்ல, பரவால்ல அர்ச்சனா, ஐ வில் மேனேஜ், ஐ காண்ட் ஸ்டெ ஹியர். ட்ரெஸ் இல்ல, மோரோவர் அந்த பிரச்சனை வேற" என்றாள் ப்ரீத்தா.

"லூசு, இதெல்லாம் ஒரு பிரச்னையா, உனக்கு மட்டும் தான் இதெல்லாம் இருக்கற மாதிரி, வா இங்க தூங்கு, என்னோட நைட் ட்ரெஸ் போட்டுக்கலாம், என்னோட பிராண்ட் யூஸ் பண்ணிக்கோ, ஆல்வேஸ் மைல்டு ப்ளோ விங்ஸ் மீடியம், உனக்கும் அது செட் ஆகும், ஐ வில் அரேஞ்" என்றாள் அர்ச்சனா.

"இல்ல அர்ச்சனா, வேணாம், உன்னோட பிராண்ட் யூஸ் பண்ணலாம், ஆனா உன்னோட நைட் டிரஸ் எல்லாம் என்னால எப்படி, ஷாட்ஸ், கிராப் டாப் நைட் வேர்ஸ் எல்லாம் எனக்கு செட் ஆகாது" என்றாள் ப்ரீத்தா.

"ஏய் என்னோட சுடிதார் போட்டுக்கோ, மிடி போட்டுக்கோ, கவுன் டைப் டிரஸ் இருக்கு போட்டுக்கோ, எனக்கு நைட்டி மட்டும் சுத்தமா புடிக்காது, அது சின்ன வயசுல இருந்தே, சோ அது மட்டும் என்கிட்டே இல்ல," என்றாள் அர்ச்சனா.

"இல்ல பரவால்ல அர்ச்சனா, நான் வீட்டுக்கே போறேன், அப்பா அம்மா வேற நாளைக்கு காலைல ஊருக்கு கெளம்பரங்க, சோ அவங்ககூட இருக்கணும்" என்றாள் ப்ரீத்தா.

"ஆமா ல, சொன்னியே அப்பா அம்மா வந்திருக்காங்க னு, ரொம்ப நாள் ஆச்சு நான் கூட அவங்கள பாத்து. லாஸ்ட் ரெண்டு மூணு டைம் வெகேஷன் ல கூட பாக்க முடில ல" என்றாள் அர்ச்சனா.

"ஆமா, உன்னோட வேலை அப்படி, ஆனா இந்த டைம் நான் அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டேன், அஜய் அண்ட் என்னோட லவ் பத்தி, அப்பா கொஞ்சம் அப்செட், அம்மா ஓகே, அப்பா கு எங்க கேஸ்ட் லேயே பண்ணனும் னு, ஆனா ஐ பீல் அம்மா வில் கன்வின்ஸ் ஹிம்" என்றாள் ப்ரீத்தா.

"ஓ இன்னுமா இந்த கேஸ்ட் எல்லாம் பாக்கறீங்க உங்க வீட்ல, " என்றாள் அர்ச்சனா.

"ஆமா அர்ச்சனா, எவ்ளோ தான் டெவெலப் ஆனாலும் இது மட்டும் போகல, ஈவென் அண்ணா அமெரிக்கா கு இவங்கள கூட்டிட்டு போனாலும் எல்லா கல்ச்சரும் மாறிட்டாலும் இது மட்டும் மாறல, அன்னான் அண்ட் அண்ணி கூட சொல்றாங்க, வீட்டுக்கு யார் வந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்க நம்மவங்களா, என்ன ஊரு என்ன ஜாதி னு எல்லாம் கேட்டுடறாங்க, கொஞ்சம் பேர் வயசானவங்க னு எடுத்துக்கிட்டாலும் கொஞ்சம் பேர் ரொம்ப சீரியஸ் ஆஹ் எடுத்துக்கறாங்க, அதுனால தங்கி இருக்கற இடத்துல கூட நிறையா பிரச்சனை வந்திருச்சு னு சொன்னாங்க" என்றாள் ப்ரீத்தா.

"சரி விடு, வயசானவங்க, இன்னும் எவ்ளோ நாள் இருக்க போறாங்க, அதெல்லாம் மனசுல வைச்சுக்காத, அண்ணா அண்ணி நல்லா இருக்காங்களா" என்றாள் அர்ச்சனை.

"நல்லா இருக்காங்க" என்றாள் ப்ரீத்தா.

"சரி நீ கெளம்பு, நான் ராப்அப் பண்ணிட்டு தூங்கறேன், எப்போ போனான் இந்த விஜய் மேல, இன்னும் காணும் பாரு" என்றபடி மாடிக்கு போனாள் அர்ச்சனா.

அங்கே அஜயின் அறையில் அஜய் உட்கார்ந்து கொண்டு இருந்தான், ஆனால் விஜய் உறங்கி இருந்தான்.

"அஜய், நீ தூங்கலையா" என்றாள் அர்ச்சனா.

"இல்லை டா அச்சு, தூக்கம் வரல, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றான் அஜய்.

"இவனை அனுப்பி உன்னை சமாதானம் செய்ய சொன்னா எப்படி தூங்குறான் பாரு" என்றாள் அர்ச்சனா.

"இல்ல இல்ல, அவன் வீட்டுக்கு போலாம் னு தான் சொன்னான், நான் தான் வேணாம், நீ இங்கயே படு னு சொன்னேன்" என்றான் அஜய்.

"சரி அஜய், ப்ரீத்தா கெளம்பறாளாம், ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கா, நீ ஒண்ணு பண்ணு, அவளை கன்வின்ஸ் பண்ணி இங்க தூங்க சொல்லு, ஆர் அவளை போயி டிராப் பண்ணிட்டு வர முடியும்னா பண்ணிட்டு வா" என்றாள் அர்ச்சனா.

"அப்படியா, சரி நான் போயி பாக்கறேன் கீழ" என்றான் அஜய்.

"பாக்கறது மட்டும் தான் அஜய், நோ டர்ட்டி திங்ஸ்" என்றாள் அர்ச்சனா சிரித்தபடியே.

"போ டி, போ, நீ சாய்ஸ்ரீ தனியா இருக்கா பாரு, அவகூட இரு" என்றபடி கீழே போனான் அஜய்.

"ப்ரீத்தா, வீட்டுக்கு போறியா நீ" என்றான் அஜய்.

"ஆமா அஜய், அதான் சொன்னேனே, அப்பா அம்மா இருக்காங்க, நாளைக்கு கெளம்பரங்க னு, அது மட்டும் இல்ல, நம்ம மேட்டர் ஆஹ் அவங்ககிட்ட ஓபன் பண்ணிட்டேன், அண்ணா அண்ணி கிட்டயும் சொல்லிட்டேன், எல்லாருக்கும் ஓகே எக்செப்ட் அப்பா, அவர் கொஞ்சம் அந்த ஜாதி பிடிச்சுட்டு நிக்கறாரு, பட் அம்மா கன்வின்ஸ் பண்றேன் னு சொல்லிருக்காங்க, நாளைக்கு நைட் ஏர் இந்தியா ல கெளம்பரங்க, நீயம் அவங்கள டிராப் பண்ண என்கூட வரணும்" என்றாள் ப்ரீத்தா,

"ஹே, வர்றத பத்தி இல்ல, அப்பா கு பிடிக்கலைன்னா, அவங்க வேற லாங் ஜர்னி போறாங்க, இந்த நேரத்துல மனக்கசப்பான விஷயம்" என்றான் அஜய்.

"எது டா மனக்கசப்பு, உன்னோட வாழ போற நான், எனக்கு நீ மனக்கசப்பா, என்னை நீ எப்படி ராணி போல பாத்துப்பன்னு அவங்களுக்கு புரியட்டும் னு தான் உன்னையும் ஜாயின் பண்ணிக்க சொல்றேன்" என்றாள் ப்ரீத்தா.

"நான் உன்னை அவ்ளோ அழகா பாத்துப்பேன் னு உனக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்கா டா" என்றான் அஜய்.

"இதுல என்ன டா சந்தேகம், நீ என்னோட உயிர்" என்றபடி அவனது கைகளை பிடித்துக்கொண்டாள் ப்ரீத்தா.

சற்றே மௌனத்திற்கு பின், பிரீத்தாவை தன் மார்போடு இறுக்கி அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான் அஜய்.

"அஜய், உணர்ச்சிவசப்படாதே, ஆல்சோ அசோக் பத்தி நெனச்சு கன்பியூஸ் ஆகாதே, " என்றாள் ப்ரீத்தா.

"யா, ஐ வில் ட்ரை" என்றான் அஜய். ஆனால் அவன் முகம் வாட்டமாய் இருந்தது. அதை உணர்ந்த ப்ரீத்தா,அவனது கன்னங்களை தனது கையால் தொட்டு கண்களும் கண்களும் நேருக்கு நேராய் பார்த்துக்கொள்ள, "அஜய், நீ தைரியமா இருந்தா தானே என்னால நார்மல் ஆஹ் ஒர்க் பண்ண முடியும், இதுக்கு பின்னாடி யார் இருக்கா னு கண்டு பிடிக்க முடியும்" என்றாள் ப்ரீத்தா.

"புரியுது, ஆனா" என்று சொல்லி முடிப்பதற்குள், "எந்த ஆனாவும் இல்ல" என்றபடி அஜயை தன்னருகே இழுத்து அவனது உதடுகளில் முத்தமிட்டாள் ப்ரீத்தா.

சற்றும் எதிர்பாராத அஜய், கொஞ்சம் நிதானித்துக்கொள்ள சில வினாடிகள் எடுத்ததால் முத்தத்தை முடித்துக்கொண்டு ப்ரீத்தா விலக, அவளை மீண்டும் இழுத்து இருக்க அணைத்து அவளது கீழ் உதட்டை மட்டும் தனது இதழ்களால் இழுத்து பற்றி முத்தமிட, ப்ரீத்தாவால் அந்த பிடியில் இருந்து மீள முடியவில்லை. முத்தத்தை முடிக்கவும் மனமில்லை. ப்ரீத்தாவும் அந்த சந்தர்ப்பத்தில் அஜயின் மேல் உதட்டை தனது இரு இதழ்களுக்கு நடுவே வைத்து முத்தத்தை தொடர்ந்தாள். மெதுவாக இருவரும் ஒருவரின் உதட்டை மற்றொருவர் முழுவதுமாய் வாயினுள் பற்றி முத்தத்தை முடிக்காமல் தொடர்ந்து கொண்டு இருக்க, அஜயின் கைகள் மெல்ல இறுக்கத்தை எளிதாக்கியது. ப்ரீத்தா சற்று புரியாமல் கண்களை திறந்து சுருக்கி அஜயின் முகத்தை பார்க்க, அந்த நேரம் அஜயின் கைகள் அவளது மேலே படர தொடங்க, உடனே சுதாரித்துக்கொண்டாள் ப்ரீத்தா, "அஜய், போதும், என்னால முடியாது, ஏற்கனவே நான் கண்ட்ரோல் மீறி போய்ட்டேன், எனக்குள்ள என்னென்னவோ நடக்குது, இது சரி வராது, நான் கிளம்பறேன்" என்றபடி கிளம்பினாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா, நான் டிராப் பண்றேன், உன்னோட கார் இங்கயே இருக்கட்டும், நாளைக்கு மார்னிங் நான் யாராவது விட்டு காரை உன்னோட வீட்ல விட சொல்றேன்" என்றான் அஜய்,

"சரி, வா டிராப் பண்ணு" என்றாள் ப்ரீத்தா.

இருவரும் அஜயின் காரை நோக்கி நடந்தனர். அர்ச்சனா உறங்காமல் அடுத்து என்ன நடக்க போகிறது, என்ன செய்ய போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அருகே சாய்ஸ்ரீ அழுது சோர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள்.

கார் ஸ்டார்ட் ஆகி ப்ரீதாவின் வீட்டை நோக்கி நகர்ந்தது.

"அஜய் உன்கிட்ட நிறையா சீக்ரெட்ஸ் இருக்கு டா, நான் நிறையா உன்கிட்ட அதைப்பத்தி எல்லாம் பேசினதே இல்ல, ஆனா நீ எப்படி இது எல்லாத்தையும் மேனேஜ் பண்ற,," என்றாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா, மனுஷனோட வாழ்க்கை அப்டி தான், எங்க அப்பா அம்மா நான் அர்ச்சனா நாலு பெரும் விழுப்புரத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தோம், எங்க வாழ்க்கை தொடங்கியது அங்க தான், என்னோட அப்பா விழுப்புரம் சரகத்துல பாரன்சிக் ல தான் வொர்க் பண்ணாரு, என்னோட அம்மா ஹவுஸ் வொய்ப் தான், எங்க அப்பா எப்பவுமே வேலை வேலை னு இருப்பாரு, இந்த அசோக் மாதிரி தான், எப்போ வேலைக்கு போறாரு எப்போ வராரு னு தெரியாது, ரொம்ப சின்சியர். அதுனால என்னோட அம்மா தான் என்னையும் அர்ச்சனாவையும் பாத்துக்கிட்டாங்க, கஷ்டம் னுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல, ஐ மீன் பணக்கஷ்டம், மனக்கஷ்டம், னு ஒண்ணுமே இல்ல, அப்பா கு கூட எந்த கேட்ட பழக்கம் இல்ல, ஜஸ்ட் ஹி வாஸ் அண்ட் இஸ் எ செயின் ஸ்மோக்கர், அது அவரோட வேலை பளு அப்படி. என்னோட அம்மா அவ்ளோ அற்புதமா பேமிலி மெயின்டெய்ன் பண்ணாங்க, எனக்கோ அர்ச்சனாக்கோ எந்த கஷ்டமும் குடுத்தது இல்ல, ஆனா என்ன இருந்தாலும் சண்டே எங்க அப்பா எங்க கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு, எனக்கு பதினோரு வயசு இருக்கும், அர்ச்சனாக்கு ஒன்பது வயசு இருக்கும், ஒருநாள் அம்மா வீட்டை விட்டு ஓடிட்டாங்க, வீட்டை விட்டு ஓடிட்டாங்க னு சொல்லக்கூடாது, காணாம போய்ட்டாங்க, போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தோம், தேடி பாத்தோம், போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டினோம், ஒஸ்ட் கேஸ் எங்கயும் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருக்கா னு கூட தேடினோம், ஆனா கிடைக்கவே இல்ல, ரெண்டு வருஷம் ஆச்சு, ஆனா அம்மா கிடைக்கல, அப்பா வேலை ல கான்சன்ட்ரேட் பண்ண முடியாம எங்களுக்காக வேலை வீ ஆர் எஸ் வாங்கிட்டு பென்சன் லயும் ஒரு செக்யூரிட்டி ஆபீஸ் ல செக்யூரிட்டி ஆபீசர் ஆஹ் வேலை செஞ்சாரு. இதுக்கு நடுல அர்ச்சனா ஏஜ் அட்டென்ட் பண்ணினா, அப்பா தனியா என்ன பண்ணனும் னு தெரியாம என்னோட அத்தை கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்டாங்க, அத்தை வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணி எல்லாம் செஞ்சாங்க, ஆனா எல்லா மாசமும் அர்ச்சனா கு என்ன பண்ணனும் என்ன நடக்குது னு அவளுக்கு புரிஞ்சுக்க கூட தெரில, அப்போ எங்களுக்கு ஒரு ஹவுஸ் மெய்டு அப்பா கொண்டு வந்தாரு, வாணி அக்கா, எங்க ஊருல தான் இருந்தாங்க, அவங்க அர்ச்சனாவை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க, கொஞ்சம் அம்மா இல்லாத கஷ்டத்தை போக்கினாங்க, எனக்கு அப்டி பீல் ஆச்சோ இல்லையோ அர்ச்சனா கொஞ்சம் கம்போர்ட் ஆனா, ஆனா அர்ச்சனா பத்தாவது படிக்கும் பொது வாணி அக்காவை வேலைய விட்டு அப்பா நிறுத்திட்டாரு, நான் ஏன் னு கேட்டதுக்கு இனிமே நாம சென்னை கு போகப்போறோம், அதுனால தான் நிறுத்திட்டேன் னு சொல்லிட்டாரு. அவர் சொன்ன மாதிரியே நாங்க சென்னை வந்துட்டோம், அப்போ தான் எனக்கு விஜய் அசோக் பிரென்ட் ஆனாங்க, அண்ட் அர்ச்சனாக்கு ஆர்த்தி பிரென்ட் ஆனா, எனக்கு என்ன தான் விஜய் ரொம்ப நெருக்கமா இருந்தாலும் அசோக் தான் சென்சிபிள் பெர்சன். ரொம்ப லாஜிக்கல் ஆஹ் பேசுவான், ஜெனரஸ் பெர்சன், அர்ச்சனா கு ஆர்த்தி வந்ததும் ரொம்ப கம்போர்ட் ஆனா, ஆனா அவளோட ராசி அப்படி போல, அவகூட யார் கிளோஸ் ஆஹ் இருந்தாலும் அவங்க நீடிக்கிறது இல்ல, அவளை நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு, அப்பா கூட அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட பிளான் பண்ராரு, ஆனா அவளுக்கு இன்டெரெஸ்ட் இல்ல, பாக்கலாம், வாழ்க்கை எங்களை எங்கே எடுத்துட்டு போகுது னு, சரி, அசோக் கேஸ் ல நீ என்ன ரோல், பாத்துக்கோ டா, ஏதும் ஹெல்ப் வேணும்னா என்கிட்ட சொல்லு, " என்றபடி காரை ஓட்டினான் அஜய்.

"அஜய், எல்லாம் நன்மைக்கே, எல்லாத்துக்கும் கடவுள் ஒரு காரணம் வச்சு இருப்பாரு, ஸ்யூர், நான் ஜே=கேக்கறேன், நீயும் உன்னோட ஹெல்த் பாத்துக்கோ, வீடு வந்துருச்சு" என்றாள் ப்ரீத்தா.

"ஹ்ம்ம், லவ் யு டா, மிஸ் யு" என்றான் அஜய்.

"மீ டூ" என்றபடி இறங்கி மீண்டும் அஜய்க்கு உதட்டில் முத்தமிட்டுவிட்டு வீட்டின் கதவை நோக்கி நடந்தாள் ப்ரீத்தா.

பகுதி 5 முடிந்தது.

எழுதியவர் : நிழலின் குரல் (26-Apr-24, 1:52 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 250

மேலே