கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 27
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம்: 27
" இந்த வாயில்லா ஜீவன்கள் கூட அந்தம் பக்கம் போகாதேனு சொன்ன,என் பேச்சைக் கேட்டு அடுத்த தோட்டத்து பக்கமோ , அடுத்த வீட்டு பக்கமோ போகாதுக.".(ஆடு,மாடு,கோழி,நாய் இவைகளை காண்பித்தவாரு சிங்காரம் சொல்லி) பலமாக அழுதார் சிங்காரம்.." மனிதனுக்கு ஆறறிவுனு சொல்றாங்க..அது தப்பு..தப்பு.. வாயில்லா ஜீவன்களுக்கு தான் ஆறறிவு " .. என்று சொல்லி மீண்டும் கதறி அழ ஆரம்பித்தார்.."
" காதல் என்ற உணர்வில் பெற்றோர் என்ற உறவினை " இப்படி அறுத்துட்டு போயிட்டானே என்று அழுது கதறினார் கெளதம் அப்பா சிங்காரம் வீட்டுக்கு வந்திருந்த ஊர் நாட்டாமை குருசாமியிடம்..
வழிந்தோடும் மழை நீரில் கயல்கள் போன்று நீந்தியபடி நண்பர் ரவியின் வீட்டை அடைந்த காதலர்களை வரவேற்ற ரவியின் அப்பா.. அம்மா.. சாப்பிட்டு ஓய்வு எடுங்க நாங்க வேலைக்கு போயிட்டு வரோம் என்று சொல்லி விட்டு ரவியின் அப்பா சுந்தரம்.. அம்மா.. அம்மா.. என்று அழைக்க ..ஏன்டா கத்துற என்ற படி பக்கத்து வீட்டில் புறணி பேசிக்கிட்டு இருந்த பாட்டி வந்தார்.. அம்மா நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற உறவு இவங்க, இவங்க இங்குதான் தங்கப் போறாங்க.. பாட்டி காதலர்களை ஏற இறங்க பார்த்து விட்டு..உதட்டை பிதுக்கியவாறு சரிதான்.என்றது..அவங்களுக்கு சாப்பாடு ரெடி செய்து கொடு என்று சொல்லி கிளம்பினார் சுந்தரம்..
நாட்டாமை குருசாமி சிங்காரத்திடம் நடந்தது நடந்திருச்சு சரியா ?.. சிங்காரம் நீயும் வடிவுக்கரசியும் ஊர்ல இருந்த காவல்துறை தொந்தரவு கொடுக்கும்..அதனால .. நீங்க இரண்டு பேரும் தலைமறைவகத்தான் சிலநாள் இருந்து ஆகனும்.. என்றார்..
சரிதான் நாட்டாமை நாங்க வெளியூர் போயிட்டா இந்த வாயில்லா ஜீவன்களை யார் கவனித்து பார்ப்பார்கள்.." அவனை பெற்ற பாவத்திற்கு எங்க வயிற்றை காயப்போடுவது நியாயமானது " " ஏதும் அறியாத வாயில்லா ஜீவன்களை வயிற்றுப் பசியோடு போடுவது எவ்வளவு பெரிய பாவம் "..
இந்த இருக்கானே (நாயைக் காட்டி) இந்த நேரத்துக்குள்ள ஊரை நூறு ரவுண்ட் அடிச்சுட்டு வந்திருவான்..இங்க போலிஸ்காரங்க வந்து போகிறதை பார்த்தவன். இன்று எங்கேயும் போகாமல் என் தலைமாட்டில் கிடக்கிறான்.. என்று சொல்லி கண்ணீரை தாரை தாரையாக வடித்தார் சிங்காரம்..
தமிழகத்தின் கதகதப்பும் கேரளத்தின் குதுகுதுப்பும் இணைந்திட மது மதுப்பான காதல் போதையில் வெதுவெதுப்பான கெஞ்சலும் கொஞ்சலும் அரங்கேற கட்டில் பரப்பியது மழை நீர் விழுந்த மண் வாசனையாக காதல் வாசனையை..
பாட்டி அறிந்தாலோ என்னவோ,ரவியின் பாட்டி ஏ.. பிள்ளைகளா சாப்பிட வாங்க என்று காதலர்களை இடை மறித்து அழைக்க ,.மழை வெறித்த இடமானது கட்டில்..
சிங்காரம் ஆடு மாடு 🐮 🐄 களை நான் பார்த்துக்கொள்கிறேன்,நீ உன் தங்கச்சி வீட்டில் போய் இருந்துக்கோ..வழக்கு போட்ட காரணத்தால் வக்கீல் பிடித்து ஜாமீன் வாங்கிய பின்தான் , காவல்துறை தொந்தரவு இருக்காது அதுவரை.. தங்கச்சி கூடப் போய் இருங்க என்றார்..
சிங்காரம், வடிவுக்கரசி இருவரும் சிங்காரம் தங்கச்சி ஊரான வெம்பக்கோட்டைக்கு கிளம்பி சென்றனர்..
மாலை 4.00 மணி ரவியின் பெற்றோர்,வேலையை முடித்து வீடு திரும்பி இருந்தனர்..
கெளதமும் சுந்தரமும் சுந்தரம் வசிக்கும் பகுதியின் தலைவர் முருகேசனை சந்தித்து காதல் விவரத்தைக் கூறினார்கள்..தம்பி இந்த குடியிருப்பு பகுதியில் தாலி கட்டாமல் நீங்கள் தங்க அனுமதி கிடையாது..திருமணத்தை நடத்த நாங்க ரெடியாக இருக்கோம் உங்களுக்கு முழு ஆதரவு உண்டு.. இருக்க இடம் உண்டு, உழைப்புக்கு வழியுன்டு..
" எந்த கொம்பன் வந்தாலும் , இந்த கம்பத்துக்காரன் கிட்ட ஆகாது.." உங்களுக்கு துணை நிற்பேன் "
நல்ல முடிவா சொல்லுங்க.. என்றார் முருகேசன்..
என்ன முடிவெடுத்தார்கள் காதலர்கள்?..
.... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்