கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 26
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 26
" மனதில் இருப்பவன் எவனோ அவனே மணவாளன் " என்ற கொள்கை பிடிப்போடு பேருந்து ஏறினாள் காதலனுடன் திரிஷா...
பேருந்து ராஜபாளையத்தை தாண்டி சென்று கொண்டிருக்க , திரிஷாவின் அப்பாவால் தன் வீட்டில் ஏற்படும் அசம்பாவித காட்சிகளை கெளதம் கற்பனை செய்த காட்சிகள் அவன் மனத் திரையில் ஓட கண்களில் கண்ணீர் வடியத் துவங்கியது..
இதனைக் கண்ட திரிஷா,ஏன்டா ? என்ன கெளதம்? என்றவளுக்கு கண்ணீரை மட்டும் பதிலாக தந்தான்.. அவள் தன் துப்பட்டாவால் அவன் கண்ணீரைத் துடைத்து கொண்டே அவனது தோளில் சாய்ந்தாள்.. அவன் கையை இருக பற்றினால்.. அவனது கண்களில் வடிந்த கண்ணீர் விடைபெற்று.. சென்றது..
தோளில் படுத்திருந்த திரிஷாவின் கண்களைப் பார்த்தவன், அவள் பார்வையில் தெரிந்த காதல், அவள் பார்வையில் தெரிந்த உண்மை, அவள் பார்வையில் தெரிந்த நம்பிக்கை, அவள் பார்வையில் தெரிந்த துணிச்சல்..ஏன் நம்மிடம் இல்லை.. என்று சிந்திக்க..புரிதலோடு அவன் உடலில் புகுந்தது வீரம்..
காலை 7.30 மணிக்கு சங்கரன்கோவில் சரக DSP அன்பின் உத்தரவின் பேரில் திருவேங்கடம் காவல் நிலையத்தின் SI தலைமையில் 10 க்கு மேற்பட்ட காவல்துறையினர் கெளதம் வீட்டை சுற்றி வளைத்து நிற்க..SI வீட்டுக்குள் சென்று சிங்காரத்திடம்.. என்னய்யா.. உன் மகனை எங்க ?... சிங்காரம் ஐயா தெரியாது..யா.. இது நடந்ததே அந்த பிள்ளையின் அப்பா வந்த பிறகுதான் எங்களுக்கே தெரியும்.. என்றவரிடம்.. மேற்கொண்டு விசாரணையை தொடர்ந்தார்..உதவி ஆய்வாளர்..
காலை 8.45 மணிக்கு நாசித் துவரங்களை முத்தமிட்டு சென்ற மண் வாசனையும்... கட்டிடங்களில் கண்ணீராக வடிந்து கொண்டிருந்த நீரும் மழை பெய்து அடங்கிய தடங்கள், குளிரை தழுவிக் கொண்டு மேனியை சிலிர்க்க வைக்கும் வீசும் காற்றும், கார்மேகம் அலை மோத மின்னல் விளக்கேற்றி வெடி போல் இடி வரவேற்க .. மரக்கிளை மழைத் துளி பூத் தூவ ..
பதின் பருவ வல்லின கொடி யிடையாள் பேரழகி திரிஷா பார்த்த வானமும் கண் சிமிட்டும் வானவில் 🌈 கண்ணாலே , அசைந்தாடும் தேர் போல் மெல்ல வரும் பொன்னான பெண் மான் நடை அழகில் தடுமாறி அசைந்தாடும் மரக்கிளைகள் காதலர்களை வரவேற்க வந்தடைந்தனர் கூடலூர்..
காலை 9.00 மணிக்கு வந்து விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கெளதம்,சிங்காரம், வடிவுக்கரசி, வடிவுக்கரசி அண்ணன்கள் மூன்று பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டது , 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை கடத்தியதாக இபிகோ பிரிவு 366 மற்றும் 366 A, எதிர் தரப்பினரை வன்முறை செய்து தாக்க முயன்றதாக இபிகோ 352 மற்றும் கொலை முயற்சி இபிகோ 307 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது..
காலை 9.10 மணிக்கு கம்பீரமான கல் கட்டிடத்தை மூடிக் கொண்டிருந்தது, சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போடப்பட்ட ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம் என்பதை உணர்த்தியது....10×10 க்கு இரண்டு அறைகள்.. வீட்டுக்கு முன்னால் பனை மட்டையால் சுவர் எழுப்பி ஓலைக் கூரை வேயப்பட்ட 10×11 அறையும் கொண்ட சிறு வீடாக இருந்தது.. ரவியின் வீடு..
காலை 10.00 மணியைப் போல் ,மாலை 4 மணிக்கு பையனை கூட்டிட்டு வரவில்லை என்று சொன்னால்..கிளைச் சிறையில் அடைப்பதற்கு சான்ஸ் இருக்கு.. என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது 4 மணிக்கு பையனை திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு கூட்டிட்டு வார , இல்லையெனில் எல்லாத்தையும் லாடம் கட்டிப் போடுவேன் சொல்லிப் போட்டேன் பாத்துக்கோ .. என்று மிரட்டல் விடுத்து சென்றார் துணை உதவி ஆய்வாளர்....
மாலை 4.00 மணி ..திக் ..திக்..திக்
.... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்