அதிசய பந்து
ஒரு அதிசய பந்து அது சம வயதில் உள்ள இருவர் சேர்ந்து விளையாடும் போது மட்டுமே சாதாரண பந்தாக இருக்கும், மற்ற நேரங்களில் அது அதிசய பந்தாக இருக்கும், அதாவது அதை சம வயதுடைய பெண்கள் விளையாடவில்லை என்றால் விளையாடுபவர்களை தாக்கும். விளையாடாமல் இருந்தால் அந்த பந்து அமைதியாக இருக்கும்.
இப்படியே காலங்கள் ஓடின,
தொலைத்தொடர்ப்பு இல்லாத காலம் அது ஒரு நாள் அந்த பந்து ஒரு சிறுமியிடம் கிடைத்தது, அவள் அந்த பந்துடன் தன் பாட்டி வீட்டிற்கு சென்றாள். அங்கு அவள் தோழியை சந்தித்தாள். அவர்கள் நன்கு அறிமுகம் ஆன பின்பு விளையாட சென்றனர் அவர்களுக்கு அணைத்து விளையாட்டும் சலிப்பு தட்ட பந்தின் ஞாபகம் வந்தது அவர்கள் அந்த பந்துடன் விளையாட்டும் போது இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். அவர்களுக்கு அந்த பந்தின் அழகை பார்த்து அந்த பந்தை தங்களுடன் வைத்து கொள்ள ஆசை வந்தது. அந்த வேளையில் அந்த சிறுமியை அவள் அம்மா அழைக்க அவள் பந்தை போட்டு விட்டு தோழியுடன் சென்றாள். அதன் பின் அந்த பந்து அங்கு இருந்த மற்றவர்களை தாக்க தொடங்கியது. இதில் என்ன ஒரு விந்தை என்றால் அந்த பந்து அந்த சிறுமி இல்லை அவள் தோழி கைபட்டால் மட்டுமே சாதாரண பந்தாக மாறும். அது வரை தாக்குதல் தொடரும்.
சிறுமி அவள் அம்மா அழைத்தார்கள் என்று போனாலே அவள் அம்மா அவளையும் அவள் தோழியையும் அழைத்து அருகில் இருக்கும் கோவில் கோடைக்கு சென்றார்கள். மறுநாள் தான் திரும்ப முடியும் என்று சொல்லி சென்றார்கள்.
இங்கு காயம் பட்டவர்கள் நாலு புறமும் ஓட செய்வது அறியாமல் இருந்தனர்.
மறுநாள்,
அந்த சிறுமி வந்ததும் அந்த பந்தை பற்றிய அதிசய உண்மைகள் கண்டு வியந்தாள். அவள் பந்தை கண்டு நடுக்கம் கொண்டாள், பந்து அவளின் கைபட்டதும் சாதாரண பந்தாக மாறியது. அவள் பயமுற்றாள். அவள் அந்த பந்தைத்தொட தயங்கினாள். பின் அந்த பந்தை தொட்டு பார்த்தவள், அந்த பந்தின் கதை புரிந்தது. பெண்கள் விளையாட வேண்டும் என்பதற்காக அந்த பந்து உருவாக்க பட்டது என்பதை உணர்ந்தாள். அதன் பின் அந்த பந்துடன் மகிழ்வுடன் விளையாடினாள்.