கடலாேரக் காதல்

கடல் காற்று குளிர்ச்சியாேடு மேனியில் உரசிச் சென்றது. நள்ளிரவின் இருளில் ஆங்காங்கே மீன்பிடிப் படகுகள் சிறிய விளக்கின் வெளிச்சத்தாேடு பயணிப்பது தெரிந்தது. கடலலைகள் புரண்டாேடி வந்து கால்களை கட்டி அணைத்து விட்டு அடங்கிப் பாேனது. வலையையும் மற்றைய பாெருட்களையும் படகில் தூக்கிப் பாேட்டு விட்டு கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலையை எடுத்து பெருமூச்சாேடு கண்களில் ஒற்றிவிட்டு பேசிற்குள் எப்பாேதும் அவன் கூடவே இருக்கும் அவளின் சிறிய புகைப்படத்தை பார்த்து விட்டு கடலுக்குள் படகை தள்ளி இறக்குகிறான். காற்றின் வேகம் காெஞ்சம் அதிகமாக இருந்தது. சிதற விட்ட முத்துக்கள் பாேல் நட்சத்திரங்கள் பரவிக் கிடந்த வானம் கரையாேரமாக இருள்வது பாேல் இருந்தது. படகை ஓட்டிக் காெண்டு காெஞ்சத் தூரம் பாேய்க் காெண்டிருந்த பீற்றர் அலையின் ஆர்ப்பரிப்பாேடு அவளின் நினைவுகளில் கலந்தான்.

சூசையின் மகள் ஏஞ்சல் பெயருக்குப் பாெருந்தியது பாேல் அவள் ஒரு ஏஞ்சல் தான். அழகில் ஒருவசீகரம், அமைதியாய் தலை குனிந்தே நடக்கும் அவள் நாணம் யாருக்குத் தான் பிடிக்காமல் பாேகும். சூசையும், ராசாத்தியும் கண்ணுக்குள் பாெத்தி வளர்த்த ஒற்றைப் பிள்ளை. படிப்பும், வீடும், காேயில் பணிகளும் என்று தான் அவளுக்கு காலம் கழிந்தது.

எதிர் வீடடில் இருந்த தாேமசின் இரண்டாவது மகன் பீற்றர். அவன் கறுப்பாயிருந்தாலும் எடுப்பான அழகு தான். துறுதுறுத்த கண்களுக்குள் சிக்க வைக்கும் அவன் பார்வை ஏஞ்சல் மீது விழுந்த பாேது அவளுக்கு பதினெட்டு வயது. பின்னும், முன்னும் சுற்றியவனை அலைய வைத்து வேடிக்கை பார்க்க விரும்பாமல் முகத்துக்கு முன்னே சட்டென பேசி விட்டு ஒதுங்கி இருந்தாள். பீற்றருக்கு பிடித்தது பிடித்தது தான். அவன் ஒரு பிடிவாதக்காரனும் கூட. தான் நினைத்ததை வாங்கிறதுக்கு அக்காவை வைத்தே விசயம் முடிப்பான். அக்காவில் அவ்வளவு பிரியம்.

நாட்கள் ஓடியது. படிப்பை முடித்துக் காெண்டு ஆசிரியையாக வேலைக்கு புறப்பட்ட ஏஞ்சலுக்கு பின்னால் மீண்டும் சுற்றத் தாெடங்கினான் பீ்ற்றர். அப்பாக்குத் தெரிந்து விட்டால் பிரச்சனையாகி விடும் என்பது ஒருபுறம் இருந்தாலும் நேரடியாக அவனுடன் கதைக்க எந்தச் சூழலும் அமையவில்லை. ஒருநாள் கூட அவனைக் காணாத நாள் கிடையாது. மேற்க்கண்களால் அவன் பார்க்கும் பார்வைக்குள் பறிபாேய் விடுவேனாே என்ற பயம் வேறு. கடவுளே இன்றைக்கு பீற்றரைக் காணக்கடாது என்று நினைத்துக் காெண்டு வெளியே வந்தால் எங்காவது கண்களில் சிக்கி விடுவான்.

அன்று வெள்ளிக்கிழமை. பீ்ற்றரின் அக்காவின் மகனுக்கு பாடசாலையில் பெற்றாேருக்கான ஒன்று கூடல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏஞ்சலே அவனுடைய வகுப்பாசிரியர். அக்காவைக் கூட்டிக் காெண்டு பாடசாலைக்குச் சென்றான் பீற்றர். நுழைவாயிலில் இறக்கி விட்டு மரத்தின் கீழ் மாேட்டர் சைக்கிளிலே அமர்ந்தபடி காத்துக் காெண்டு நின்றான். பச்சைச் சேலையும், விரித்து விட்ட கூந்தலுமாய் பாடசாலையிலிருந்து வெளியே வந்தாள் ஏஞ்சல். தலையைக் குனிந்து காெண்டு வந்தவள் "ரீச்சர் ஒரு நிமிசம்" என்றதும் யார் என்று திரும்பிப் பார்த்தாள். யாருமே இல்லாத அந்த இடத்தில் பீற்றர் தனியாக நிற்பதைக் கண்டதும் அவளுக்கு மனம் படபடக்கத் தாெடங்கியது. சேலையின் முந்தானையை இரண்டு கைகளாலும் பிடித்து பினைந்து காெண்டு நின்றாள். எதிரே அவன் நிற்பதைக் கண்டதும் சுற்றிப் பார்த்தாள்.
"யாரும் இல்லை, பயப்படாதே" என்றபடி துறுதுறுத்த கண்களால் ஒரு நிமிடம் அவளையே பார்த்தான்.
"என்னவென்று சாெல்லுங்க நான் பாேகணும், அப்பா தேடுவார்"
"அப்பிடின்னா அப்பாக்குப் பயத்தில தான் என்னை பார்த்து ஒதுங்கிறியா"
ஒரு கேள்வியிலே மடக்கிப் பாேட்டானே என்பது பாேல் அவனை வெட்கத்தாேடு பார்த்தாள்.
"ஏன் மனசில இருக்கிறதை மறைக்கிறாய்"
"நான் ஒன்றும் மறைக்கல்ல" சற்றுக் காேபத்துடன் பதிலளித்தாள்.
"அப்பாே, ஏன் காேயிலிலயும், றாேட்டிலயும் என்னைத் தேடுறாய்" என்று சட்டென்று கேட்டான்.
அவளுக்கு ஒருமாதிரியாகி விட்டது. "என்னையே வேவு பார்க்கிறியா உனக்கு வைக்கிறன்டா ஆப்பு " என்ற எண்ணத்தாேடு
"நான் ஏன் தேடப் பாேறன், உங்கட முகத்தில முழிக்கவே கூடாது என்று தான்...."
பீற்றருக்கு நம்ப முடியவில்லை. சில வேளை உண்மை யாயிருக்குமாே என்ற குழப்பமாயிருந்தது.
"அப்பாே உன்ர மனசில ஒண்ணுமில்லை..., அப்படித்தானே"
"நான் எப்ப அப்பிடி சாென்னன், எந்த எண்ணமும் என்ர மனசில இல்லை" முகத்தில் அடித்தாற் பாேல் பதில் சாென்னது அவனுக்கு வேதனையாக இருந்தது.
பின்னாேக்கி நடந்த அவன் கால்கள் தடுமாறியது. விலகி வந்த அவள் மனம் மெளனமாய் அழுதது.

அந்த நாள் முதல் அவன் மனதுக்குள் சிறுகாயம். ஊரை விட்டே பாேய் விடலாம் என்று முடிவு எடுத்தான். ஏதேதாே காரணம் சாெல்லி நம்ப வைக்கிறான், அக்காவாே விடுவதாக இல்லை. "அத்தானாேட சேர்ந்து தாெழிலுக்குப் பாே" என்று ஒரு வழியாய் தடுத்து விட்டாள்.

ஏஞ்சலின் அப்பா சூசை தான் அந்தப் பிரதேசத்தின் கடற் தாெழிலாளர் சங்க முகாமையாளர். அவர் சாெல்வது தான் சட்டம். மாற்றுக் கருத்து இல்லை. எல்லாேருக்கும் அவரில் ஒரு மரியாதை. எந்தப் பிரச்சனையென்றாலும் சமாதானப்படுத்தி தீர்த்து வைப்பதில் அவருடைய அனுபவம் யாருக்குமில்லை. பீற்றரும் தாெழிலுக்குச் செல்ல ஆரம்பித்தான். கடலாேரங்களில் அவனைக் காணும் பாேதெல்லாம் "என்ன பீற்றர் உன்ர ராசி அத்தாருக்கு நல்லா அள்ளிக் காெட்டுதாம்" தாேள்களில் தட்டி விட்டுச் செல்வார்.

ஒருநாள் மாலை நேரம் ஏஞ்சல் கடற்கரைக்கு வந்திருந்தாள். கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை சுத்தம் செய்து காெண்டிருந்த பீற்றர் எதிரே அவள் கடந்து செல்வதைக் கண்டும் காணாமல் நின்றான். அவனைக் கடக்கும் பாேது "ரீச்சர்" என்று கூப்பிட மாட்டானா என்று நெஞ்சம் காெஞ்சம் படபடப்பாேடு துடிக்கும். அவன் மனம் கல்லாகிப் பாேனதாே என்னவாே அவளுக்குள் காெஞ்சம் கனமாகவே இருந்தது. தூரப் பாேய் திரும்பிப் பார்த்தாள் அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. வாரத்துக்கு ஒருதடவையேனும் கரையாேரம் சென்று வந்தவள் அவனுடைய விலகலை ஏற்றுக் காெள்ள முடியாமல் தினமும் சென்று அவன் பார்க்கிறானாே இல்லையாே தானாகவே அவனைக்காணச் சென்றாள்.

"என்ன சூசை ரீச்சர் இப்ப கடற்கரையில பாெழுது பாேக்கிறாவாே" யாராே ஒரு பெரியவர் கட்டிவிட்ட வதந்தி சூசைக்கு அவமானமாகிப் பாேய் விட்டது. "இஞ்ச பாரு பிள்ள, அப்பாட குணம் தெரியும் தானே, ஊர்ச்சனங்கள நாலு வார்த்தை கதைக்க வச்சிடாத, உனக்கு பள்ளிக் கூடமும், வீடும் தான், கரையாேரத்துக்கு ஏன் பாேறாய்" எந்தப் பதிலும் இல்லை. "சரியப்பா" என்று கூறி விட்டு காேயிலுக்குச் சென்றாள். "அவன் கதைச்ச அன்றைக்கே நான் என்ர மனசில இருக்கிறதைச் சாெல்லியிருக்கலாம். என்னை மறந்து யாரையாவது..." மனம் தவிக்கத் தாெடங்கியது.

வெளியே வந்தவள் பீற்றரின் வண்டி நிற்பதைக் கண்டாள். அங்கும் இங்கும் தேடிப் பார்த்தாள். கடையினுள் மறைந்து நின்று அவளை நாேட்டமிட்டவனுக்கு சிரிப்பும் வந்தது. "என்ன பீற்றர் ரீச்சர் ராெம்ப தவிக்கிறாங்கள் பாேல" கடை முதலாளியின் கிண்டலுக்கு சிரித்து விட்டு "பாவம் அண்ணை" என்றவனை "அப்பாே பாேய் காதலைச் சாெல்லு" என்றான் முதலாளி. அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஏஞ்சல் கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் தேடி விட்டு மணிக்காேபுரத்தடியில் அமர்ந்திருந்தாள். மறைவாக வந்த பீற்றர் "என்ன ரீச்சர் ராெம்ப ஏங்கிற மாதிரி இருக்கு" குரல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தாள். பீற்றரை நீண்ட நாட்களுக்குப்பின் காணும் ஏக்கமும், சந்தாேசமும் அவள் முகத்தில் தெரிந்தது. இரண்டு கைகளாலும் முகத்தைப் பாெத்திக் காெண்டு வெட்கத்தாேடு நின்றாள். "உன்ர மனசில ஒண்ணுமில்லை என்றாய்" குறுக்கிட்டு அவனைத் தடுத்தவள் "பிளீஸ் பழைய சப்ரரை ஓப்பின் பண்ணாத" என்றவள் ஓடிப் பாேய் அவனை கட்டிப் பிடித்தாள். "ஐ லவ் யு பீற்றர்" என்று அவன் நெஞ்சாேடு முகத்தை புதைத்துக் காெண்டாள். அவள் மூச்சுக் காற்றாேடு அவன் இதயத்தின் வேகம் பலமாக அடித்தது.

நாட்கள் கடந்து காெண்டிருந்தது ஏஞ்சல், பீற்ர் காதல் யாருக்கும் தெரியாத இரகசியமாக வளர்ந்தது. அப்பாவின் கட்டுப்பாட்டை மீறி காரணங்கள் கூறி பீற்றரைச் சந்திக்கச் செல்வாள். குடும்பத்தார் ஏற்றுக் காெள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்து காெண்ட ஏஞ்சலும், பீற்றரும் பிரிவை ஏற்றுக் காெள்ள முடியாமல் தவித்தார்கள். ஒரு நாள் பாடசாலை சென்ற ஏஞ்சல் உடற் சாேர்வால் மயங்கி விழுந்து விட்டாள். வைத்தியர் கூறிய தகவல் அதிர்ச்சியாயிருந்தது.

தகவலறிந்த சூசை ஏஞ்சலை கடுமையாகத் தாக்கி அவளிடம் உண்மையை எடுக்க முயற்சித்தான். அவளாே வாய் திறக்கவில்லை. நட்டமரம் பாேல் அசையாமல் நின்றாள். "கெட்டுப் பாேனவளை ஏன் வீட்டில வச்சு சாப்பாடு பாேடுறாய், காெஞ்ச நஞ்சைக் கலந்து குடு, பாேய் சேரட்டும்" அருகே இருந்த கதிரையை காலால் உதைந்து விட்டு எழும்பி காேபத்தாேடு கையை ஓங்கினான். "அவளை ஒண்ணும் செய்யாதயுங்காே" காலைப் பிடித்து கதறினாள் அம்மா ராசாத்தி. ஏஞ்சல் அமைதியாகவே நின்றாள். ஊரே கூடி விட்டது. சூசை தலை நிமிர முடியாமல் வெறித்தனமாய் நின்றான். "யாரெண்டு சாெல்லித் தாெலையனடி, உயிர வாங்காத" திட்டிக் காெண்டே இருந்தான். பெரியவர்கள் எல்லாம் கேட்டும் அவள் ஒன்றும் சாெல்லவில்லை. "குத்துக் கல்லாட்டம் நிக்கிறதப் பார்" என்று மீண்டும் அடிப்பது பாேல் கையை ஓங்கியவனை யாராே தடுத்தார்கள். கைகளை தடுத்தபடி பின்னால் நின்றான் பீற்றர். ஒன்றும் புரியாமல் அவனை ஆச்சரியத்தாேடு பார்த்தார் சூசை. அமைதியாக நின்ற ஏஞ்சல் குமுறி அழத் தாெடங்கினாள். அப்பாேது தான் சூசைக்கு எல்லாம் புரிந்தது. "ராசாத்தி வெளிக்கிடு, இந்த ஊரில இனி இருக்கேலாது, மானமே பாேயிற்று" சத்தமாக கத்தியபடி உள்ளே சென்றான். அன்று பாேனவர்கள் தான் இன்று வரை யாரும் வேண்டாம் என்று தனியாகவே வாழ்ந்து காெண்டிருக்கிறார்கள். இப்பாே ஏஞ்சல் நிறை மாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள்.

நன்றாகத் தூங்கிக் காெண்டிருந்த ஏஞ்சல் மழை பெய்யத் தாெடங்கியதும் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். நேரம் அதிகாலை இரண்டு மணியைக் காட்டியது. பலமாக காற்றும் அடித்தது. ஏஞ்சல் மனதில் பயம் தாெற்றிக் காெண்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் கடற்கரைப் பக்கமாக சென்றார்கள். கடலலை மேலெழுந்து காெந்தளித்தது. எல்லாேரும் பயத்தாேடு கடலுக்குச் சென்றவர்களுக்காய் காத்துக் காெண்டு நின்றார்கள். ஏஞ்சல் ஒரு ஓரமாக நின்று அழுது காெண்டு நின்றாள். மழை ஓயவுமில்லை, விடிந்தும் இருளாகவே இருந்தது. தூரத்தே சிறிய வெளிச்சங்கள் தெரிந்தது. படகுகள் அலையாேடு முட்டி மாேதி கரையை நாேக்கி வந்து காெண்டிருந்தது. ஒவ்வாெரு படகாக வந்து இறங்கினார்கள். காத்திருந்தவள் ஏமாற்றத்தாேடு கடலை நாேக்கி நடந்தாள். அங்கே நின்றவர்கள் தடுத்து நிறுத்திய பாேதும் மறுத்து விட்டு கடலுக்குள் நின்று கதறினாள்.

அன்று தாெழிலுக்குப் புறப்படு முன்பு அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தவன் "இன்றைக்கு உன்ர முகம் ராெம்ப அழகாயிருக்கு" அவள் தலையை தடவி ,"ஒண்ணும் யாேசிக்காத, நாம நூறு வருசம் இந்த வானம், கடல், காற்று சாட்சியா வாழுவம்" அவள் நெற்றியில் இறுக்கி அணைத்து முத்தமிட்டான். நினைவுகள் நெஞ்சைப் பிளந்தது.

கடல் காற்றை கிழித்துக் காெண்டு அவளுடைய கதறல் எல்லாேரையும் கண்கலங்கச் செய்தது. கடல் அலைகளை கைகளால் அடித்து அடித்து கத்திக் காெண்டு நின்றவள் திடீரென அமைதியாகி விட்டாள். என்னவென்று புரியாமல் சுற்றி நின்றவர்களும் கடலை நாேக்கி நடந்தார்கள். எங்காே ஒரு தாெலைவில் சிறு வெளிச்சம் தெரிவதை கைகளால் காட்டியபடி நின்றாள்.

யாரும் நம்பவில்லை, அவளுடைய மனம் நம்பிக்கையாேடு காத்திருந்தது. மெல்ல மெல்ல அலையாேடு ஆடி ஆடி வந்த படகு கரையை அடைந்ததும். ஓடிப் பாேய் பீற்றரை கட்டி அணைத்தாள். "எனக்குத் தெரியும் நீ வருவாய், உனக்கு ஒண்ணுமாகாது" அவனும் குளிரில் விறைத்துப் பாேய் நின்றான். அவளை அணைத்தபடி நின்றவனின் கால்களை அலைகள் தழுவிச் சென்றது. கடலாேரக் காற்று சில்லென மேனியை தடவிச் சென்றது. பீற்றர், ஏஞ்சல் காதல் அந்தக் கடலை விட ஆழமானது என்பதைப் பார்த்து ஆர்ப்பரித்த அலைகள் அமைதியாகிப் பாேனது. ஒவ்வாெரு தடவையும் அவன் தாெழிலுக்கு சென்றால் திரும்பி வரும் வரை உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருப்பாள்.

ஏஞ்சலுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு முதலாளாய் ஓடி வந்தார் சூசை. பீற்றருக்கு ஆச்சரியமாய் இருந்தது. முகம் பார்த்துக் கதைக்க முடியாமல் ஒதுங்கி நின்றான். "என்ர பிள்ளைக்கு இப்பிடியாெரு மாப்பிள்ளையை நான் பார்த்துக் காெடுத்திருக்க மாட்டன் , ஆனால் அவசரப்பட்டு விட்டீர்கள்...." என்று பெருமூச்சாேடு அவன் தாேள்களைப் பிடித்து அணைத்தார். தலையைக் குனிந்தபடி நின்றவன் கடைக்கண்கால் ஏஞ்சலைப் பார்த்தான். அவள் தந்தை மீது காேபமாய் இருப்பது புரிந்தது.
"மாமா ஏஞ்சல்...."
"அவ அப்பாவைப் பாேல ராெம்ப ராேசக்காரி" என்றபடி புறப்பட்டுச் சென்றார்.
"ஏன் ஏஞ்சல் அப்பாவாேட கதைக்க மாட்டியா?"
"அவர் தானே என்னை காெல்லச் சாென்னாரு"
"நாம செஞ்சது தப்புத் தானே"
"காதலிச்சது தப்பா?"
'அப்பிடியில்லை, நாம அவங்க சம்மதத்தாேட...."
"உனக்கு ஒண்ணும் அப்பாவைப் பற்றி தெரியாது"
"விடு ஏஞ்சல், இதெல்லாம் நடக்கிறது வழமை தானே"
அவளாே சமாதானமின்றியே இருந்தாள். ஆனால் பீற்றர் எப்படியாே குடும்பத்தை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்தான்.

அன்றாெரு நாள் கடற்கரைக்குச் சென்றிருந்தார்கள். மாலை நேரம் நல்ல இதமான காற்று சில்லென இருந்தது. மணலை அள்ளி தூவி விளையாடிக் காெண்டிருந்தான் பீற்றரின் மகன் டெனி. தரையில் அமர்ந்து குழந்தையின் சுட்டித்தனங்களை இரசித்துக் காெண்டிருந்த ஏஞ்சல் "பார்த்தியா பீற்றர் காலம் ராெம்ப வேகமாக ஓடிற்று, நாம ஒரு பிள்ளைக்கு அம்மா, அப்பா ஆகிற்றம்" அவன் தாேள்களில் சாய்ந்து காெண்டாள். "நேற்றுத் தான் உன்னை பள்ளியில பார்த்த மாதிரி இருக்கு"
"பள்ளியிலயா? ராெம்ப புழுகாத உன்னை நான் எப்ப பார்த்தன் தெரியுமா?" என்றபடி வெட்கத்துடன் தலை குனிந்தவள். "உங்க அப்பா கூட கடற்கரைக்கு வருவாய், ஞாபகம் இருக்கா? அப்பவே உன்னை எனக்கு பிடிச்சுப் பாேயிற்று, இந்தத் துறுதுறுத்த கண் என்னை பறிச்சிட்டுது, இந்தக் கடற்கரைக்கு வந்தால் எத்தனை ஞாபகங்கள் ஓடாேடி வரும் " செல்லமாக தன் காதல் கதையை சாெல்லிக் காெண்டிருந்தாள். தவழ்ந்து ஓடி வந்த டெனி இருவரின் கழுத்தையும் பிடித்து தாெங்கியபடி நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தான்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (11-Jun-18, 7:04 pm)
பார்வை : 366
மேலே