பயணம்
#பயணம்
அன்றுடன் அவன் மலேசியா வந்து, ஒரு வருடம் ஆயிற்று..அன்று தான் திரும்ப தன் தாய் நாட்டிற்கு செல்கிறான்.. இத்தனை நாளாய் அவன் எதிர்பார்த்த தருணம்..
விடுப்பு கிடைத்த ஒரு மாதம் முன்னிருந்த
அவன் ஊருக்கு செல்லும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தான்..ஒரு சிறு குழந்தை எப்படி தன் தாயை பார்க்க ஆவலாக இருக்குமோ அது போன்றது அந்த தருணம் அவனுக்கு...
நித்தம் அந்த ஒரு மாதம் பொழுது அவனுக்கு ஒரு யுகமாக தென் பட்டது.. ஒரு பெட்டி ஒன்றை தயார் செய்து வெளியே செல்லும் போது, ஒவ்வொரு பொருட்களாக வாங்கி தன் உறவினர்களுக்காக சேர்த்தான்.. அப்படி சேர்த்தே அப்பெட்டி நிறைந்தது..தன் பால்ய வயதில், தன் மற்ற நண்பர்களை போல அல்லாமல்; குடும்ப பாரங்களை சுமக்க ஆரம்பித்தான்..இரண்டு வருடமாக உள்ளூரிலேயே வேலை செய்தான், போதும் என்றளவு வருமானம், குடும்ப பாரம் ஓரளவு குறைந்தது..அப்பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன், என்றளவில் வருமானம்..நித்தம் நிம்மதியாக ஓடோடி கொண்டிருந்தது அவன் வாழ்க்கை.. நல்ல பையன் நல்ல குடும்பம் என்று ஒரு பெண்ணையும் தந்தார்கள் திருமணம் முடித்தான்..மனைவியும் பாசமானவள் குடும்ப வாழ்க்கை அழகாக ஓடி கொண்டிருக்க..
ஏதோ ஒரு ரூபத்தில் வந்தது, இந்த மலேசிய வேலை, "எவ்வளவு நாள் தான்
ஊர்லேயே கஷ்டபடுவே,அங்கே..போய் வேலை பாரு, நல்லா சம்பாறி திரும்ப ஊருக்கு வந்து நிம்மதியா இரு", சம்பாறிச்சத மொத்தமா பேங்க்ல டெபாசிட் பண்ணா மாச மாசம் வீட்டுக்கு பணம் வரும் நிம்மதியாய் வாழலாம் என பல்வேறு அறிவுரைகள்..
எதும் சரியாக படவில்லை, "அப்பா, உனக்கு புடி்சிருக்கா போ, ஒன்னும் கட்டாயம் இல்லை,என்றார்", அம்மாவும் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை.. மனைவி ஏதும் சொல்லாமல் இருந்தார்..
இவனுக்கு இரண்டா கட்டான்,நிலையில் இருந்தான்..சரி, இங்கேயே மாதம் 10,000 க்கும் 12,000 க்கும் கஷ்டபடுவதை விட, அங்கு போய் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வாழ்க்கையில் செட்டில் ஆகிடுலாம், என்று எண்ணி அந்த ஆஃபரை ஏற்று கொண்டு மலேஷியா சென்றான்..
அங்கும் பெரிதாக, ஒரு வேலை சுமை இல்லை,8மணி நேரம் வேலை சிலநேரங்களில் 10, வாரம் ஒரு நாள் விடுப்பு..ஓரளவு நல்ல சம்பளம் தான்.. போன இரண்டு மாதங்களில் ஒரு வழியாக அவனுடைய கல்யாணத்திற்கு ஆகிய கடன்,சில அம்மாவின் நகைகளை அடகிலிருந்து மீட்டான்..மேலும் மகிழ்ச்சியாக ஒரு செய்தி, அவன் மனைவி கருவுற்று இருந்தாள்.. அவன் போன ஒரு மாதத்திற்குள் எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்தது..
மாதங்கள் ஆக,ஆக வீட்டில் ஃப்ரிட்ஜ்,டிவி,
வாசிங் மெஷின் என அனைத்து பொருட்கள் இவனுடைய வருமானத்தில்..
அவ்வபோது பெற்றோர்களை போனில் தொடர்பு கொண்டான். ஆனால்,மனைவியிடம் தினம் தினம் போன், சாட்டிங், வீடியோ கால் என மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை..
என்ன இருந்தாலும் அவர்களை ரொம்பவும் மிஸ் பண்ணினான், நேரில் பார்க்க வேண்டும்,பேச வேண்டும் என்ற எண்ணம் நித்தமும் அவனுக்கு..இவன் ஊருக்கு வருவதில் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி...
ஒரு வழியாக அவன் ஏர்போர்ட் வந்த தடைந்தான்..வந்ததும், ஒரு செல்ஃபியை கிலுக்கி தன் மனைவிக்கு வாட்ஸ்அப்பில்
அனுப்பினான், அவளும்...பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டு, தன் மாமா,மாமியிடம் காட்டினாள் அவர்களும் சந்தோச பட்டனர்...மணி அப்போது இரவு பன்னிரெண்டு இருக்கும்..இவர்களும் அவனை அழைக்க காரில் புறப்பட்டு ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்..விமானம் வர குறைந்தது 3 மணி நேரம் ஆகும்..இருந்தாலும் இவர்கள் ஆவலோடு முன்னரே கிளம்பி சென்றனர்..
அவனும் அப்பாவின் எண்ணுக்கு அழைத்து பேசினான், "அப்பா, நான் பிளைட் ஏற போரன், மேல செல்ல செல்ல டவர் இருக்காது, போன் பேச முடியாது, எப்படியும் 3,3.30 ஆகிடும்"..நீங்க பொறுமையாக வாங்க..இல்லபா நாங்க கிளம்பி அரமணி நேரம் ஆகுது..ஒன்னும் பிரச்சினை இல்லை..நீ பார்த்து வா ஓகே வா..இல்லப்பா குளிரா இருக்குல கொஞ்சம் லேட்டா கிளம்பலாம் ல"..என்று வறுத்தப்பட்டு கொண்டான்..ஒன்னும் பிரச்சன இல்ல பா நீ பார்த்து வா..என்று அப்பா போனை வைத்தார்..
மனைவிக்கும் நொடி பொழுதில் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான்...அவளும் உள்ளூர மகிழ்ந்தாள்...இவர்களும் நெடுஞ்சாலையில் ஏர்போர்ட் நோக்கி விரைந்தனர்..அவனும் இந்தியா நோக்கி பறந்தான்...நேரம் சென்று கொண்டே இருந்தது..சரியாக 3 மணிக்கு இவர்கள் ஏர்போர்ட் வந்தடைந்தனர்..காரை பார்க்கிங் செய்து விட்டு, மாமா, நான் போய் ஷெடுள் அஹ் பார்த்துட்டு வரேன் என்று மருமகள், சொன்னாள்...வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு,தனியா நீங்களும் கூட போங்க, என்றாள் மனைவி..
இருவரும்,சென்று செடுளை பார்த்தனர்..இன்னும் போட வில்லை, பிளைட் 1 மணி நேரம் தாமதம் என பக்கத்தில் பேசி கொண்டு இருந்தனர்..இருவரும், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திரும்பவும் கார் பார்க்கிங் எரியாவிற்கு வந்தனர்..என்னாச்சு, என்று மனைவி கேட்க.."இல்லம்மா பிளைட் 1 மணி நேரம் டிலே வாம்".. அதான்.. ஓ அப்படியா நீங்க ரெண்டு பேரும் பனில நிக்காம கார் உள்ள வந்து உக்காருங்க..
மாமி சற்று கண் அயர்ந்தாள்; ஆனால், இவர்கள் இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..நேரம் ஓடிக்கொண்டே இருந்தது..மனைவி, அவன் வாட்ஸ்அப்பில் ஆன்லைன் காட்டுகிறதா என பார்த்தாள்..
இல்லை..மாமா நான் போய் பார்கிறேன்,
என அவள் கிளம்பினாள்..நானும் வரம்மா..
வேணாம்,மாமா அத்தை தூங்குரங்கா தனியா இருப்பாங்க நீங்க இங்கேயே இருங்க..நான் பார்கிறேன் என கிளம்பினாள்..
அப்போதும், ஷெடுளே இன்னும் போட்ட பாடில்லை..இவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது..3 மணிக்கு வர வேண்டிய பிளைட் மணி இப்போ 4.30 ஆக போது..இவள் பட படத்தாள்..பக்கத்தில் பலரும் இது போல பட படபான நிலையிலேயே இருந்தனர்..மாமாவிற்கு போன் செய்து, "மாமா இப்பவும் செடுள் போடலை,என்பதை தெரிவித்தாள்"..அப்போ நீ பார்கிங்க்கு வந்துடு பனி ல நிக்கதா..நேரம் செல்ல செல்ல இவளுக்கு படபடப்பு அதிகமாகி கொண்டே இருந்தது..மணி 5 ஆனது, இப்போது மாமாவும்,மாமியும் அங்கே இருப்பு கொள்ளாமல் இங்கேயே வந்தனர்.. "என்னாச்சு மா, இல்ல மாமா இன்னும் சரியா பிளைட் எப்போ வரும்னு, சொல்லல"எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. பயபடதம்மா எல்லாம் நல்லதா தான் நடக்கும் என்றாள் மாமி..
மணி 5.30 நெருங்கியது, அனைவரும் புலம்ப ஆரம்பித்தனர், சிலர்..விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர்..அவர்களும் சமாதானம் செய்தார்கள்..இப்படியே அங்கே நிலமை மோசமாக சென்று கொண்டு இருந்தது..
சிலர், அழுக ஆரம்பித்து விட்டனர்.. இவளுக்கோ (மனைவி) அழுகை தொண்டையை அடைத்தது..மாமியும் கிட்ட தட்ட அந்த நிலையில் தான் இருந்தாள்..
மாமா, சற்று திடமாக இருந்தார், நிலமையை அறிய அங்கும் இங்குமாக ஓடி கொண்டிருந்தார்..
சிலர்,"போன மாசம் கூட இப்படித்தான்,
ரஷ்யா பிளைட் ஒன்னு"..கடல்ல விட்டுடங்கா என பேசி கொண்டு இருந்தனர்..இவளுக்கு தன்னையும் அறியாமல் கண்களில் நீர் பெருக்கெடுத்து வழிந்தது..கிட்ட தட்ட அந்த மலேஷியா பிளைட் காக காத்திருந்த பலரின் நிலைமையும் இப்படி தான் இருந்தது..
அங்கே, சூழல் சரி இல்லை..அனைவரும் விமான நிலைய அதிகாரிகளை நோக்கி கூச்சல் போட்டனர்..
நேரம் செல்ல செல்ல அசாதாரண சூழ்நிலை அங்கே,அப்போது ஒரு "ஃபிளாஷ் நியூஸ், மலேசியாவிலிருந்து இந்தியா நோக்கி விரைந்த ஏர் மலேஷியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக கோலாலம்பூரில் தரை இறக்க பட்டுள்ளது".. அனைவரும் மகிழ்ந்தனர்..
வரவேற்றனர்..
மாமா,மாமி மற்றும் இவளும் பெரு மூச்சு விட்டு கொண்டாள், அப்போது திடீரென அவளது செல்போன் சிணுங்கியது..
எடுத்து அவசர அவசரமாக, பார்த்தாள் வாட்ஸ்அப்பில் அவனுடைய கணவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்தது.."ஆம், குட் டோண்ட் வொர்ரி"..
-முகம்மது முஃபாரிஸ்.மு